சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரருக்கான விருது சரித் அசலங்கவுக்கு

463
Singer U19 award

19 வயதிற்கு உட்பட்டோருக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவரும், இலங்கை ‘A’ அணியின் வீரருமான ரிச்மண்ட் கல்லூரியின் சரித் அசலங்க, ‘சிங்கர்’ பாடசாலை கிரிக்கெட் விருது விழாவில் வருடத்தின் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரருக்கான விருதை பெற்றுக் கொண்டார். இவ்விருதை சரித் அசலங்க தொடர்ந்து இரண்டாவது முறையாக பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

எனினும், இலங்கை ‘A’ மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ‘A’ அணிகளுக்கிடையிலான இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் கலந்துகொண்டுள்ளமையின் காரணமாக அவரால் விருது வழங்கும் விழாவிற்கு வருகை தர முடியவில்லை.
19 வயதிற்கு உட்பட்டோருக்கான இலங்கை அணியின் மற்றுமொரு வீரரான ஆனந்த கல்லூரியின் சம்மு அஷான், வருடத்தின் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரருக்கான இரண்டாம் நிலை விருதை பெற்றுக் கொண்டார்.

சிறந்த பாடசாலை துடுப்பாட்ட வீரருக்கான விருதை இசிபதன கல்லூரியின் சஞ்சுல அபேவிக்ரம சுவீகரித்துக் கொண்டதுடன், அதன் இரண்டாம் நிலை விருதை புனித சேர்வேஷஸ் கல்லூரியின் ரமேஷ் நிமந்த பெற்றுக் கொண்டார்.
புனித ஜோசப் வாஸ் கல்லூரியின் துலாஞ்சன பெர்னாண்டோ சிறந்த பந்து வீச்சாளராக தெரிவு செய்யப்பட்டார். அதன் இரண்டாம் நிலை விருதை றோயல் கல்லூரியின் லசித் எம்புல்தெனிய பெற்றுக் கொண்டார்.

சிறந்த சகலதுறை வீரருக்கான விருது மற்றும் அதன் இரண்டாம் நிலை விருதுகளை, முறையே இசிபதன கல்லூரியின் பிரமோத் மதுவந்த மற்றும் டி மெசனொட் கல்லூரியின் திலீப ஆகாஷ் ஆகியோர் பெற்றனர்.
சிறந்த களத்தடுப்பாளருக்கான விருது புனித ஜோசப் வாஸ் கல்லூரியின் அசித கிஹானுக்கும் இரண்டாம் நிலை விருது றோயல் கல்லூரியின் டிரான் தனபாலவிற்கும் கிடைத்தன.

2015/2016 பருவ காலத்தில் டிவிஷன் 1 இல் இணை சம்பியன்களான புனித பேதுரு கல்லூரி மற்றும் புனித செபஸ்டியன் கல்லூரி அணிகள் வருடத்தின் சிறந்த அணிக்கான விருதைப் பகிர்ந்து கொண்டன.
இசிபதன கல்லூரி, ரிச்மண்ட் கல்லூரி மற்றும் திரித்துவக் கல்லூரி அணிகள் முறையே மேல், தென் மற்றும் மத்திய மாகாணங்களுக்கான சிறந்த அணிகளாகத் தெரிவு செய்யப்பட்டன. ரத்கம தேவபதிராஜ கல்லூரி வருடத்தின் வளர்ந்துவரும் அணிக்கான விருதை சுவீகரித்தது.

‘சிங்கர்’ கூட்டுத்தாபனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அசோக பீரிஸ் இவ்விருது வழங்கும் விழாவின் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதோடு, இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் முன்னணி போட்டி நடுவருமான ரொஷான் மஹாநாம சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார்.

வழங்கப்பட்ட விருதுகளின் விபரங்கள்

டிவிஷன் ‘3’ – தனிநபர் விருதுகள்

  • சிறந்த துடுப்பாட்ட வீரர் – இரண்டாம் இடம் நவோத் மதுஷங்க (ஷாஸ்திரானந்த மகா வித்தியாலயம், தெஹிவளை)
  • சிறந்த துடுப்பாட்ட வீரர் – வெற்றியாளர்தத்சர வீரசிங்க (நுகவெல மகா வித்தியாலயம், நுகவெல)
  • சிறந்த பந்து வீச்சாளர் – இரண்டாம் இடம்டிலான் பெர்னாண்டோ (புனித பேதுரு கல்லூரி, நீர்கொழும்பு)
  • சிறந்த பந்து வீச்சாளர் – வெற்றியாளர்ராஜித நிர்மால் (புனித அலோசியஸ் கல்லூரி, இரத்தினபுரி)
  • சிறந்த  சகலதுறை வீரர் – இரண்டாம் இடம்டிலான் சம்பத் (ஹீனகம மகா வித்தியாலயம், ஹீனகம)
  • சிறந்த சகலதுறை வீரர் – வெற்றியாளர் ராஜித நிர்மால் (புனித அலோசியஸ் கல்லூரி, இரத்தினபுரி)

டிவிஷன் ‘2’ – தனிநபர் விருதுகள்

  • சிறந்த துடுப்பாட்ட வீரர் – இரண்டாம் இடம் – டில்ஷான் கீர்த்தி(ஸ்ரீ பியரத்ன மகா வித்தியாலயம், பாதுக்க)
  • சிறந்த துடுப்பாட்ட வீரர் – வெற்றியாளர் – ரிசித் டயஸ் (ஸ்ரீ தர்மாலோக வித்தியாலயம், களனி)
  • சிறந்த பந்து வீச்சாளர் – இரண்டாம் இடம் – திலும் சுதீர (கரந்தெனிய மகா வித்தியாலயம், கரந்தெனிய)
  • சிறந்த பந்து வீச்சாளர் – வெற்றியாளர் – லசித் உடகெதர (புனித மேரிஸ் கல்லூரி, கேகாலை)
  • சிறந்த களத்தடுப்பாளர் – இரண்டாம் இடம் – கவிந்து சொஹான் (ஸ்ரீ தேவானந்த கல்லூரி, அம்பலங்கொட)
  • சிறந்த களத்தடுப்பாளர் – வெற்றியாளர் – நிலங்க ருக்ஷித (தேவபதிராஜ கல்லூரி, ரத்கம)
  • சிறந்த  சகலதுறை வீரர் – இரண்டாம் இடம் – திலும் சுதீர (கரந்தெனிய மகா வித்தியாலயம், கரந்தெனிய)
  • சிறந்த சகலதுறை வீரர் – வெற்றியாளர் – ரவீன் யசஸ் (தேவபதிராஜ கல்லூரி, ரத்கம)

டிவிஷன் ‘1’ – தனிநபர் விருதுகள்

  • சிறந்த துடுப்பாட்ட வீரர் – இரண்டாம் இடம் – ரமேஷ் நிமந்த (புனித சேர்வேஷஸ் கல்லூரி, மாத்தறை)
  • சிறந்த துடுப்பாட்ட வீரர் – வெற்றியாளர் – சஞ்சுல அபேவிக்ரம (இசிபதன கல்லூரி, கொழும்பு)
  • சிறந்த பந்து வீச்சாளர் – இரண்டாம் இடம் – லசித் எம்புல்தெனிய (றோயல் கல்லூரி, கொழும்பு)
  • சிறந்த பந்து வீச்சாளர் – வெற்றியாளர் – துலாஞ்சன பெர்னாண்டோ (புனித ஜோசப் வாஸ் கல்லூரி, வென்னப்புவ)
  • சிறந்த களத்தடுப்பாளர் – இரண்டாம் இடம் – டிரான் தனபால (றோயல் கல்லூரி, கொழும்பு)
  • சிறந்த களத்தடுப்பாளர் – வெற்றியாளர் – அசித கிஹான் (புனித ஜோசப் வாஸ் கல்லூரி, வென்னப்புவ)
  • சிறந்த  சகலதுறை வீரர் – இரண்டாம் இடம் – திலீப ஆகாஷ் (டி மெசனொட் கல்லூரி)
  • சிறந்த சகலதுறை வீரர் – வெற்றியாளர் – பிரமோத் மதுவந்த (இசிபதன கல்லூரி, கொழும்பு)

மாகாண வெற்றியாளர்கள்

  • அநுராதபுர மத்திய வித்தியாலம் – அநுராதபுரம் (வட மத்திய மாகாணம்)
  • பண்டாரவளை மத்திய வித்தியாலயம் – பண்டாரவளை (ஊவா மாகாணம்)
  • கேகாலை வித்தியாலயம் – கேகாலை (சபரகமுவ மாகாணம்)
  • புனித ஜோன்ஸ் கல்லூரி – யாழ்ப்பாணம் (வட மாகாணம்)
  • புனித ஆன்ஸ் கல்லூரி – குருநாகலை (வட மேல் மாகாணம்)
  • திரித்துவக் கல்லூரி – கண்டி (மத்திய மாகாணம்)
  • ரிச்மண்ட் கல்லூரி – காலி (தென் மாகாணம்)
  • இசிபதன கல்லூரி – கொழும்பு (மேல் மாகாணம்)

அணிகளுக்கான விருதுகள்

  • சிறந்த வளர்ந்துவரும் அணி – தேவபதிராஜ கல்லூரி, ரத்கம
    இரண்டாம் இடம் – டிவிஷன் ‘3’ – புனித மேரிஸ் கல்லூரி, சிலாபம்
  • வெற்றியாளர் – டிவிஷன் ‘3’ – புனித பேதுரு கல்லூரி, நீர்கொழும்பு
    இணை வெற்றியாளர்கள் – டிவிஷன் ‘2’ – வெஸ்லி கல்லூரி, கொழும்பு
  • இணை வெற்றியாளர்கள் – டிவிஷன் ‘2’ – புனித மேரிஸ் கல்லூரி, கேகாலை
    இரண்டாம் இடம் – T20 சுற்றுப்போட்டி – புனித அலோசியஸ் கல்லூரி, காலி
  • வெற்றியாளர் – T20 சுற்றுப்போட்டி – புனித பேதுரு கல்லூரி, கொழும்பு
    இரண்டாம் இடம் – ஒருநாள் சுற்றுப்போட்டி – திரித்துவக் கல்லூரி, கண்டி
  • வெற்றியாளர் – ஒருநாள் சுற்றுப்போட்டி – புனித செபஸ்டியன் கல்லூரி, மொரட்டுவ
    இணை வெற்றியாளர்கள் – டிவிஷன் ‘1’ – புனித செபஸ்டியன் கல்லூரி, மொரட்டுவ
  • இணை வெற்றியாளர்கள் – டிவிஷன் ‘1’ – புனித பேதுரு கல்லூரி, கொழும்பு

முக்கிய தனிநபர் விருதுகள்

  • 2016ஆம் வருடத்திற்கான சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் – இரண்டாம் இடம் – சம்மு அஷான் (ஆனந்த கல்லூரி)
  • 2016ஆம் வருடத்திற்கான சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் – வெற்றியாளர் – சரித் அசலங்க (ரிச்மண்ட் கல்லூரி)