பல சாதனைகளுடன் முடிவடைந்த மேற்கிந்திய தீவுகள் – இங்கிலாந்து போட்டி

119
Image Courtesy - Getty Images

உலகக் கிண்ணத் தொடரில் சௌத்ஹெம்ப்டன் நகரில் நேற்று (14) நடைபெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவுகள் – இங்கிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 44.4 ஓவர்களில் 212 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் ஜொப்ரா ஆர்ச்சர் மற்றும் மார்க் வூட் சிறப்பாக பந்துவீசி நெருக்கடி கொடுத்திருந்தனர்.

இதனையடுத்து 213 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி துடுப்பாடக் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியிருந்ததுடன், ஜோ ரூட்டின் அபார சதத்தின் உதவியுடன் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகு வெற்றியைப் பதிவு செய்தது.

மேற்கிந்திய தீவுகளை இலகுவாக வீழ்த்திய இங்கிலாந்து

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின்…

2011ஆம் ஆண்டு ஆண்டுக்குப் பிறகு இரு அணிகளும் உலகக் கிண்ணப் போட்டிகளில் நேருக்கு நேர் மோதவில்லை. இந்த நிலையில், சுமார் 8 வருடங்களுக்குப் பிறகு நேற்றைய போட்டியில் இரு அணிகளும் சந்தித்துக் கொண்டன. எனினும், இங்கிலாந்து அணிக்கே வெற்றி கிட்டியது.

முன்னதாக கடந்த 1979ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளுக்குப் பின் இஙகிலாந்து அணியை மேற்கிந்திய தீவுகள் அணி வென்றதில்லை. அதாவது 40 வருடங்களாக இங்கிலாந்து அணியை உலகக் கிண்ணத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியால் வீழ்த்த முடியவில்லை.

1987ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரில் இரண்டு போட்டிகள், 1992, 2007 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளில் இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவுகளை வெற்றி கொண்ட.து.

எனவே நேற்று (14) நடைபெற்ற போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் உலகக் கிண்ணப் போட்டிகள் வரலாற்றில் 40 வருடங்களாக மேற்கிந்திய தீவுகளால் வெல்ல முடியாத அணி எனும் என்ற பெருமையை இங்கிலாந்து அணி தக்கவைத்துக் கொண்டது.

சங்காவை பின்தள்ளிய கிறிஸ் கெயில்

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய கிறிஸ் கெயில் 41 பந்துகளில் 36 ஓட்டங்களை எடுத்துது ஆட்டமிழந்திருந்ததுடன், முக்கிய சாதனை ஒன்றையும் படைத்தார்.

இந்தப் போட்டிக்கு முன் கிறிஸ் கெயில் 1596 ஓட்டங்களை எடுத்து இருந்தார். அதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள் பட்டியலில் நான்காம் இடத்தில் இருந்தார். இந்தப் போட்டியில் 36 ஓட்டங்களை எடுத்த கிறிஸ் கெயில் ஒட்டுமொத்தமாக 1632 ஓட்டங்களைக் குவித்து, இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் குமார் சங்ககக்கார (1625 ஓட்டங்கள்), விவியன் ரிச்சர்ட்ஸ் (1619 ஓட்டங்கள்), ரிக்கி பொண்டிங் (1598 ஓட்டங்கள்) ஆகியோரை முந்தி முதல் இடம்பிடித்தார்.

இங்கிலாந்து அணி காயங்களால் பீதியடையவில்லை – மோர்கன்

மேற்கிந்திய தீவுகளுடனான லீக் போட்டியில்…

ஆர்ச்சரின் புதிய மைல்கல்

இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜொப்ரா ஆர்ச்சர். இதுவரை 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கும் நிலையில், இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் எவரும் இதுவரை செய்யாத உலகக் கிண்ண சாதனையை நேற்றைய போட்டியில் நிகழ்த்தினார்.

இம்முறை உலகக் கிண்ணத் தொடரில் இதுவரை நான்கு போட்டிகளில்  ஜொப்ரா ஆர்ச்சர் விளையாடியிருந்தார். அதில் இங்கிலாந்து தோல்வி அடைந்த பாகிஸ்தான் போட்டியைத் தவிர. மற்ற மூன்று போட்டிகளிலும் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினார். இதன் மூலம், ஒரே உலகக் கிண்ணத் தொடரில் மூன்று இன்னிங்க்சுகளில் தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ஒரே இங்கிலாந்து பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றுக் கொண்டார்.

சதத்தில் சாதனை படைத்த ரூட்

உலகக் கிண்ணப் போட்டிகள் வரலாற்றில் மூன்று சதங்கள் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை ஜோ ரூட் பெற்றுக் கொண்டார்.

அத்துடன், ஒருநாள் அரங்கில் முதல் முறை ஆரம்ப துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கி ஜோ ரூட் அபாரமாக விளையாடினார். இவர் ஒருநாள் போட்டியில் தனது 16ஆவது சதத்தைப் பதிவு செய்தார். இந்தப் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் உலகக் கிண்ணத் தொடரில் மூன்று சதங்கள் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை ஜோ ரூட் படைத்தார். அத்துடன், இவர் நடப்பு உலகக் கிண்ணத்தில் 2 சதங்களும், 2015 உலகக் கிண்ணத்தில் ஒரு சதமும் அடித்துள்ளார்.

பொறுப்பற்ற துடுப்பாட்டமே தோல்விக்கு காரணம் – ஜேசன் ஹோல்டர்

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில்…

மேலும் இந்த வருடத்தில் விளையாடியுள்ள 13 போட்டிகளில் 52.75 சராசரியுடன் அவர் 633 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இந்த வருடம் இந்திய அணியின் விராட் கோஹ்லி 13 ஆட்டங்களில் 54.69 சராசரியுடன் 711 ஓட்டங்களைக் குவித்து முதலிடத்தில் உள்ளார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<