PSG அணியுடன் இணைகிறார் ராமோஸ்

338
Getty

ரியல் மட்ரிட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர பின்கள வீரருமான செர்ஜியோ ராமோஸை, பிரான்ஸ் நாட்டின் கால்பந்து கழகமான பரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) அணி இரண்டு வருட ஒப்பந்த அடிப்படையில் இன்றைய தினம் (08) வாங்கியது. 

ஸ்பெயின் நாட்டிற்காக அதிக கால்பந்து போட்டிகளை விளையாடி, ரியல் மட்ரிட் அணியுடன் 5 தடவைகள் லாலிகா கிண்ணங்களையும், 4 தடவைகள் சம்பியன்ஸ் கிண்ணங்களையும் வென்ற ராமோஸின் வரவு PSG அணிக்கு எதிர்வரும் பருவகாலத்தில் மேலும் பலத்தை சேர்த்துள்ளது. 

இந்த ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்த PSG அணியின் உரிமையாளரான நஸீர் அல் கேலைபி, எங்களது சகாப்தத்தின் மிகப்பெரிய வீரரை பரிஸிற்கு வரவேற்கிறோம் என்று தெரிவித்தார். 

மேலதிக நேரத்தில் டென்மார்க்கை வீழ்த்தி இங்கிலாந்து இறுதி மோதலில்

தனது இந்த ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்த ராமோஸ், “எனது வாழ்க்கையின் மிகபெரிய தருணம். புதிய சவால், இந்நாளை என்றும் நான் மறக்க மாட்டேன்”  எனக் கூறினார்.

பரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியில், செர்ஜியோ ராமோஸ் தனது முன்னாள் மட்ரிட் நண்பர்களான டி மரியா மற்றும் நவாஸ் உடன் சேர்ந்து அடுத்த பருவகாலம் விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே வைனால்டம், ஹக்கீமி மற்றும் டோனோருமா போன்ற சிறந்த வீரர்களை வாங்கியுள்ள பரிஸ் அணி, தற்போது ராமோஸையும் அந்த வரிசையில் சேர்த்துள்ளது. 

மிக சிறந்த வீரர்கள் பலரை தன்னகத்தே கொண்டுள்ள பரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி, அடுத்த பருவகாலம் எப்படி சோபிக்கவுள்ளது என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.   

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<