சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து திடீர் ஓய்வை அறிவித்த இங்கிலாந்து வீரர்

England Cricket

584

இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் டேவிட் வில்லி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். 

இந்தியாவில் தற்போது நடைபெற்றுவரும் உலகக்கிண்ணத் தொடரின் நிறைவின் பின்னர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக இவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

பதவி விலகினார் இன்ஸமாம் உல்-ஹக்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கான வருடாந்த ஒப்பந்தம் வீரர்களுக்கு வழங்கப்படவுள்ளதுடன், பெயர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தற்போது விளையாடி வரும் வீரர்களில் டேவிட் வில்லியின் பெயர் மாத்திரமே குறித்த ஒப்பந்தத்தில் இணைக்கப்படவில்லை. 

இவ்வாறான நிலையில் 33 வயதான டேவிட் வில்லி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விடைபெறுவதாக தன்னுடைய சமுகவலைத்தளத்தில் அறிவித்துள்ளார். 

டேவிட் வில்லி இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத போதும், 70 ஒருநாள் போட்டிகள் மற்றும் 43 T20i போட்டிகளில் விளையாடி முறையே 94 மற்றும் 51 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

>>மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க<<