Home Tamil அரையிறுதி ஓட்டத்தில் தொடர்ந்தும் இலங்கை

அரையிறுதி ஓட்டத்தில் தொடர்ந்தும் இலங்கை

4041

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையிலான T20 உலகக் கிண்ண சுபர் 12 சுற்றுப் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 

மேலும் இந்த வெற்றி காரணமாக இலங்கை அணிக்கு T20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு தொடர்ந்தும் காணப்படுகின்றது. அதேநேரம், இப்போட்டியில் தோல்வியை தழுவிய ஆப்கானிஸ்தான் அணி இந்த T20 உலகக் கிண்ணத் தொடரில் இருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறுகின்றது.

குழு 1 அணிகள் இடையிலான இந்தப் போட்டி பிரிஸ்பேன் நகரில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணித்தலைவர் மொஹமட் நபி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்திருந்தார்.

>> கட்டாய வெற்றியை எதிர்பார்த்து களமிறங்கும் இலங்கை

இப்போட்டியில் கட்டாய வெற்றியை எதிர்பார்த்திருந்த இலங்கை அணி ஒரு மாற்றத்துடன் களமிறங்கியது. முன்னணி சகலதுறை வீரர் சாமிக்க கருணாரத்னவுக்கு பதிலாக பிரமோத் மதுசான் அணியில் இணைக்கப்பட்டிருந்தார். மறுமுனையில் ஆப்கானிஸ்தான் அணியிலிருந்து ஹஸ்ரத்துல்லா சஷாய் உபாதை காரணமாக வெளியேற, குல்படின் நயீப்பிற்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

இலங்கை XI – தசுன் ஷானக்க (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், தனன்ஞய டி சில்வா, பானுக்க ராஜபக்ஷ, வனிந்து ஹஸரங்க, சரித் அசலன்க, பிரமோத் மதுசான், மஹீஷ் தீக்ஷன, லஹிரு குமார, கசுன் ராஜித

ஆப்கானிஸ்தான் XI – ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹீம் சத்ரான், குல்படின் நயீப், உஸ்மான் கனி, நஜீபுல்லா சத்ரான், மொஹமட் நபி (தலைவர்), அஸ்மத்துல்லா ஒமர்சாய், ரஷீட் கான், முஜீப், பரீட் அஹ்மட், பசால்ஹக் பரூக்கி

பின்னர் நாணய சுழற்சி முடிவுக்கு அமைய துடுப்பாட்டத்தை ஆரம்பித்த ஆப்கானிஸ்தான் அணி மெதுவான ஆரம்பத்தை பெற்றதோடு, வனிந்து ஹஸரங்க மற்றும் லஹிரு குமார ஆகியோரின் பந்துவீச்சினை எதிர்கொள்வதிலும் தடுமாறியது.

எனினும் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் ஆகியோர் வெளிப்படுத்திய சிறு அதிரடி காரணமாக ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 144 ஓட்டங்கள் எடுத்தது.

ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ரஹ்மானுல்லா குர்பாஸ் 24 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 28 ஓட்டங்கள் எடுக்க, இப்ராஹிம் சத்ரான் 18 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பெளண்டரி அடங்கலாக 22 ஓட்டங்கள் எடுத்தார்.

மறுமுனையில் இலங்கை பந்துவீச்சு சார்பில் வனிந்து ஹஸரங்க வெறும் 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், லஹிரு குமார 2 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 145 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி ஆரம்பத்தில் சிறிய தடுமாற்றம் ஒன்றை வெளிப்படுத்திய போதும் தனன்ஞய டி சில்வா விளாசிய அபார அரைச்சதத்தின் உதவியோடு வெற்றிக்காக முன்னேறியது. இறுதியில் இலங்கை அணி 18.3 ஓவர்களில் போட்டியின் வெற்றி இலக்கை 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 148 ஓட்டங்களுடன் அடைந்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் தனன்ஞய டி சில்வா தன்னுடைய 3ஆவது அரைச்சதத்தோடு ஆட்டமிழக்காமல் 42 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 66 ஓட்டங்கள் பெற்றார். அத்துடன் குசல் மெண்டிஸ் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக 25 ஓட்டங்கள் பெற்று இலங்கை அணியின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்தார்.

விராட் கோலியின் அறையில் நுழைந்தவர் மீது நடவடிக்கை

ஆப்கான் பந்துவீச்சில் முஜிப் மற்றும் ரஷீட் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்த போதும் அவர்களது பந்துவீச்சு வீணாகியது.

போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணியின் சுழல்வீரரான வனிந்து ஹஸரங்க தெரிவாகினார். இலங்கை அணி T20 உலகக் கிண்ணத் தொடரில் தமது அடுத்த போட்டியில் இங்கிலாந்தை சனிக்கிழமை (05) எதிர் கொள்ள ஆப்கானிஸ்தான் இந்த உலகக் கிண்ணத் தொடரில் விளையாடும் இறுதிப் போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (04) அவுஸ்திரேலிய அணியுடன் நடைபெறுகின்றது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<

Result


Afghanistan
144/8 (20)

Sri Lanka
148/4 (18.3)

Batsmen R B 4s 6s SR
Rahmanullah Gurbaz b Lahiru Kumara 28 24 2 2 116.67
Usman Ghani c Dasun Shanaka b Wanidu Hasaranga 27 27 2 1 100.00
Ibrahim Zadran c Bhanuka Rajapaksa b Lahiru Kumara 22 18 1 1 122.22
Najibullah Zadran c Wanidu Hasaranga b Dhananjaya de Silva 18 16 0 0 112.50
Gulbadin Naib run out (Pathum Nissanka) 12 14 0 0 85.71
Mohammad Nabi c Dasun Shanaka b Kasun Rajitha 13 8 1 0 162.50
Rashid Khan b Wanidu Hasaranga 9 8 1 0 112.50
Azmatullah Omarzai not out 3 4 0 0 75.00
Mujeeb ur Rahman st Kusal Mendis b Wanidu Hasaranga 1 2 0 0 50.00


Extras 11 (b 3 , lb 1 , nb 1, w 6, pen 0)
Total 144/8 (20 Overs, RR: 7.2)
Bowling O M R W Econ
Kasun Rajitha 4 0 31 1 7.75
pramod madushan 3 0 24 0 8.00
Lahiru Kumara 4 0 30 2 7.50
Maheesh Theekshana 4 0 33 0 8.25
Wanidu Hasaranga 4 0 13 3 3.25
Dhananjaya de Silva 1 0 9 1 9.00


Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka b Mujeeb ur Rahman 10 10 2 0 100.00
Kusal Mendis c Rahmanullah Gurbaz b Rashid Khan 25 27 2 1 92.59
Dhananjaya de Silva not out 66 42 6 2 157.14
Charith Asalanka c Azmatullah Omarzai b Rashid Khan 19 18 1 0 105.56
Bhanuka Rajapaksa c Rahmanullah Gurbaz b Mujeeb ur Rahman 18 14 3 0 128.57
Dasun Shanaka not out 0 0 0 0 0.00


Extras 10 (b 1 , lb 0 , nb 0, w 9, pen 0)
Total 148/4 (18.3 Overs, RR: 8)
Bowling O M R W Econ
Fazal Haq Farooqi 3.3 1 22 0 6.67
Mujeeb ur Rahman 4 0 24 2 6.00
Fareed Ahmad 2 0 25 0 12.50
Rashid Khan 4 0 31 2 7.75
Azmatullah Omarzai 2 0 17 0 8.50
Mohammad Nabi 2 0 16 0 8.00
Gulbadin Naib 1 0 12 0 12.00