ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் ஏற்படப்போகின்ற மாற்றங்கள்

35

அடுத்து நடைபெறவுள்ள இரு டெஸ்ட் தொடர்களின் பின்னர் டெஸ்ட் தரவரிசையில் ஏற்படப்போகின்ற மாற்றங்கள் தொடர்பிலான ஊடக அறிக்கை இன்று (21) ஐ.சி.சி இனால் வெளியிடப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவை எனப்படும் ஐ.சி.சி இனால் நடாத்தப்படுகின்ற மூவகையான (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) கிரிக்கெட் போட்டித் தொடர்களினுடைய முடிவிலும் ஒவ்வொரு அணிகளினுடைய மற்றும் அந்த அணிகளின் வீரர்களினுடைய அடைவு மட்டங்களை ஐ.சி.சி அதன் தரவரிசையின் மூலம் கணிப்பிட்டு வருகின்றது.

இலங்கையுடனான டெஸ்ட் போட்டியில் 25 வயதுடைய ஆஸி வீரர் இணைப்பு

இலங்கை கிரிக்கெட் அணியுடனான பயிற்சிப் போட்டியில் தொடர்ச்சியாக இரண்டு சதமடித்த இளம் வீரர் கேர்டிஸ் பெட்டர்சன் இலங்கைக்கு எதிரான…

அடிப்படையில் அடுத்து நடைபெறவுள்ள இரு டெஸ்ட் தொடர்களான இரண்டு போட்டிகள் கொண்ட இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான தொடர், மூன்று போட்டிகள் கொண்ட இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான தொடர்கள் நிறைவுற்றதன் பின்னர் ஐ.சி.சி இனுடைய டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் ஏற்படப்போகின்ற மாற்றங்கள் தொடர்பில் நாம் அவதானம் செலுத்தலாம்.

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுடனான டெஸ்ட் தொடர்பான அவதானம்.

இங்கிலாந்து அணி தற்போது டெஸ்ட் தரவரிசையில் 108 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் உள்ள அதேவேளை, மேற்கிந்திய தீவுகள் அணி 70 புள்ளிகளுடன் எட்டாமிடத்தில் உள்ளது.

3 போட்டிகள் கொண்ட குறித்த டெஸ்ட் தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றும் பட்சத்தில் மூன்றாமிடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணியை வீழ்த்திய காரணத்தினால் தரவரிசையில் மற்றம் ஏற்படாவிட்டாலும் அணியினுடைய புள்ளியில் பாரியளவிலான மாற்றம் ஏற்படும்.

அவ்வாறு இங்கிலாந்து அணி தொடரை இழக்கும் பட்சத்தில் நான்காமிடத்திற்கு பின்தள்ளப்பட்டு அதிகமான புள்ளிகளை இழக்க நேரிடும்.

இங்கிலாந்து 3-0 எனும் அடிப்படையில் தொடரை கைப்பற்றினால், இங்கிலாந்து – 109 புள்ளிகள், மேற்கிந்திய தீவுகள் – 69 புள்ளிகள்

இங்கிலாந்து 2-0 எனும் அடிப்படையில் தொடரை கைப்பற்றினால், இங்கிலாந்து – 108 புள்ளிகள், மேற்கிந்திய தீவுகள் – 70 புள்ளிகள்

இங்கிலாந்து 1-0 அல்லது 2-1 எனும் அடிப்படையில் தொடரை கைப்பற்றினால், இங்கிலாந்து – 107 புள்ளிகள், மேற்கிந்திய தீவுகள் – 72 புள்ளிகள்

மேற்கிந்திய தீவுகள் 1-0 எனும் அடிப்படையில் தொடரை கைப்பற்றினால், இங்கிலாந்து – 102 புள்ளிகள், மேற்கிந்திய தீவுகள் – 79 புள்ளிகள்

மேற்கிந்திய தீவுகள் 2-0 எனும் அடிப்படையில் தொடரை கைப்பற்றினால், இங்கிலாந்து – 103 புள்ளிகள், மேற்கிந்திய தீவுகள் – 78 புள்ளிகள்

மேற்கிந்திய தீவுகள் 1-0 அல்லது 2-1 எனும் அடிப்படையில் தொடரை கைப்பற்றினால், இங்கிலாந்து – 104 புள்ளிகள், மேற்கிந்திய தீவுகள் – 77 புள்ளிகள்

தொடர் சமநிலையில் நிறைவடைந்தால், இங்கிலாந்து – 105 புள்ளிகள், மேற்கிந்திய தீவுகள் – 74 புள்ளிகள்

அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலிருந்து நுவன் பிரதீப் நீக்கம்

இடது தொடையில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப் அவுஸ்திரேலியாவுடனான இரண்டு…

இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அட்டவணை

23 ஜனவரி – 27 ஜனவரி – முதல் டெஸ்ட் – பிரிஜ்டவுன்

31 ஜனவரி – 04 பெப்ரவரி – இரண்டாவது டெஸ்ட் – அன்டிகா

9 பெப்ரவரி – 13 பெப்ரவரி – மூன்றாவது டெஸ்ட் – க்ரொஸ் ஸ்லெட்

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுடனான டெஸ்ட் தொடர்பான அவதானம்.

அவுஸ்திரேலிய அணி தற்போது டெஸ்ட் தரவரிசையில் 101 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்தில் உள்ள அதேவேளை, இலங்கை அணி 91 புள்ளிகளுடன் ஆறாமிடத்தில் உள்ளது.

தொடரை எந்த அணி கைப்பற்றினாலும் புள்ளிகளில் மாற்றம் ஏற்படும். ஆனால் தரவரிசையில் இரு அணிகளுக்கு இடையிலோ அல்லது ஏனைய அணிகளுக்கு இடையிலோ எதுவித மாற்றங்களும் ஏற்படாது.

அவுஸ்திரேலியா 2-0 எனும் அடிப்படையில் தொடரை கைப்பற்றினால், அவுஸ்திரேலியா – 104 புள்ளிகள், இலங்கை – 89 புள்ளிகள்

அவுஸ்திரேலியா 1-0 எனும் அடிப்படையில் தொடரை கைப்பற்றினால், அவுஸ்திரேலியா – 103 புள்ளிகள், இலங்கை – 90 புள்ளிகள்

இலங்கை 2-0 எனும் அடிப்படையில் தொடரைக் கைப்பற்றினால், அவுஸ்திரேலியா – 97 புள்ளிகள், இலங்கை – 95 புள்ளிகள்

இலங்கை 1-0 எனும் அடிப்படையில் தொடரை கைப்பற்றினால், அவுஸ்திரேலியா – 98 புள்ளிகள், இலங்கை – 94 புள்ளிகள்

தொடர் சமநிலையில் நிறைவடைந்தால், அவுஸ்திரேலியா – 100 புள்ளிகள், இலங்கை – 92 புள்ளிகள்

இரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அட்டவணை

24 ஜனவரி – 28 ஜனவரி – முதல் போட்டி – பிரிஸ்பேர்ன்

01 பெப்ரவரி – 05 பெப்ரவரி – இரண்டாவது போட்டி – கன்பேர்ரா

மேலும் இரு தொடர்களின் பின்னர் டெஸ்ட் அணி வீரர்களின் தரவரிசையிலும் மாற்றங்கள் ஏற்படும்.

துடுப்பாட்டத்தில் எதிர்பார்க்கக்கூடிய வீரர்களாக உஸ்மான் கவாஜா (அவுஸ்திரேலியா), தினேஷ் சந்திமால் (இலங்கை), ஜோ ரூட் (இங்கிலாந்து), ரெஸ்டன் சேஸ் (மேற்கிந்திய தீவுகள்), அஞ்செலோ மெத்திவ்ஸ் (இலங்கை) ஆகியோர்  காணப்படுகின்றனர்.

பந்துவீச்சில் எதிர்பார்க்கக்கூடிய வீரர்களாக ஜேம்ஸ் அண்டர்சன் (இங்கிலாந்து), ஜேசன் ஹோல்டர் (மேற்கிந்திய தீவுகள்), பெட் கம்மிண்ஸ் (அவுஸ்திரேலியா), டில்ருவான் பெரேரா (இலங்கை) ஆகியோர் காணப்படுகின்றனர்.

 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<