டோனி போர்முக்கு திரும்ப சங்கக்காரவின் அறிவுரை

429
Sangakkara has advice for Dhoni

அடுத்த வருடம் நடைபெறவுள்ள இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில் விளையாடுவதற்கு முன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் மகேந்திர சிங் டோனி, இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி துடுப்பாட்ட பயிற்சி எடுக்க வேண்டும் எனவும், இதன்மூலம் அவரது துடுப்பாட்டத்தில் முன்னேற்றம் ஏற்படும் என தான் நம்புவதாகவும் இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.    

கடந்த ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் அரையிறுதியில் இந்திய அணி தோற்றது. அந்தப் போட்டிதான் டோனி கடைசியாக விளையாடிய சர்வதேசப் போட்டியாகும். அதன்பின் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எந்தவிதமான போட்டியிலும் களமிறங்கி டோனி விளையாடவில்லை

>> சங்காவின் சராசரிகள் கூறும் சரித்திரக் கதைகள்

ஐ.பி.எல் தொடர் தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பிலிருந்து டோனி துடுப்பாட்ட பயிற்சியில் ஈடுபட்டார். ஆனால், இந்தக் குறுகிய கால பயிற்சியே தனக்குப் போதுமானது என்று எண்ணிய டோனி, அதீதமான நம்பிக்கையில் .பி.எல் போட்டியில் களமிறங்கினார். ஆனால், ஒரு போட்டியில் கூட டோனியால் பிரகாசிக்க முடியவில்லை. அவர் நிலைத்து நின்று துடுப்பாட்ட ஷ்டப்பட்டார். 

இதுவரை நடைபெற்றுள்ள 13 .பி.எல் பருவங்களில் டோனி ஒரு தொடரில் கூட அரைச்சதம் அடிக்காமல் இருந்ததில்லை. கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டுவரை டோனியின் ஓட்டக் குவிப்பில் அரைச்சதம் இல்லாமல் இருந்தது கிடையாது.

ஆனால், இந்த பருவத்தில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடிய டோனி, ஒட்டு மொத்தமாக 200 ஓட்டங்களை மட்டுமே குவத்துள்ளார். 47 தான் அதிகபட்ச ஓட்டங்களாகப் பதிவாகியது.  

இதனிடையே, டோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி முதல் முறையாக Play Off சுற்றுக்கு தகுதி பெறாமல் நடப்பு .பி.எல் தொடரில் இருந்து வெளியேறி உள்ளது. டோனி போர்மில் இல்லாததே சென்னை அணியின் சறுக்கலுக்கு முக்கிய காரணம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.  

Watch – நடக்காமலே Twist களை தரும் LPL | Cricket Galatta Epi 43

இந்த நிலையில், டோனியின் துடுப்பாட்ட போர்மைக் குறிப்பிட்டு இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், .பி.எல் தொடரில் வர்ணனையாளர்களில் ஒருவராக செயற்பட்டு வருகின்றவருமான குமார் சங்கக்கார அறிவுரை கூறியுள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு நேற்றுமுன்தினம் (29) அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:  

”ஐ.பி.எல் என்பது உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சிறந்த வீரர்கள் விளையாடும் போட்டித் தொடர். இதில் துடுப்பாட்டம், பந்துவீச்சுப் பயிற்சி இல்லாமல் விளையாடுவது பொருத்தமல்ல.

ஆகையால், டோனி அடுத்த ஆண்டு .பி.எல் தொடர் ஆரம்பமாவதற்கு முன் துடுப்பாட்ட பயிற்சிகளை எடுத்துவிடுவார் என நம்புகிறேன். அதற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இந்தியாவில் நடைபெறும் அதிகமான உள்ளூர் போட்டிகளில் டோனி தொடர்ந்து விளையாடி துடுப்பாட்ட பயிற்சி எடுக்க வேண்டும். அவரது வழமையான ஆட்டத்தை மீட்டெடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள .பி.எல் தொடரில் டோனி சிறப்பாக விளையாடுவார்” என அவர் தெரிவித்தார்.

>> IPL இல் அதிக விலைக்கு எடுக்கப்பட்டு சொதப்பிய வீரர்கள்

ஒரு வீரர் போர்மில் இல்லாததும் போர்முக்கு திரும்புவதும் சகஜமான ஒன்றுதான். எல்லா வீரர்களும் இந்த சூழலை எதிர்கொள்வார்கள். ஆனால், ஒரு சில வீரர்களின் செய்திதான் பெரிதாக பேசப்படும். .பி.எல் போன்ற உலகின் முன்னணி கிரிக்கெட் தொடர்களில் டோனி விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

டோனியின் துடுப்பாட்ட போர்மும், அவரின் துடுப்பாட்ட திறமையும் அணியின் வெற்றி, தோல்வியில் எதிரொலிக்கும், எதிர்காலத்தையும் தீர்மானிக்கும். இந்தத் தொடரில் துடுப்பாட்டத்தில் என்ன தவறு நடந்தது, எவ்வாறு நடந்தது, என்பதை டோனி ஆய்வு செய்ய வேண்டும். 

தொடர்ந்து விளையாட வேண்டும், சிறப்பான வெற்றிகளைப் பெற வேண்டும் என்ற ஆசையுள்ள வீரர் டோனி என்பதை நான் அறிவேன். தான் ஒரு அரைச்சதம் அடிப்பதைவிட, அணியின் வெற்றிதான் முக்கியம் என்பதை உணர்ந்தவர் டோனி.  

>> டோனிக்காக 1.5 இலட்சத்தில் வீட்டை மஞ்சள் பூசி அழகுபடுத்திய ரசிகர்

அந்த அடிப்படையில்தான் சென்னை அணியை டோனி கட்டமைத்தார். அப்படித்தான் டோனி நினைத்தார். அணிக்காக எந்த வகையிலும் ஏதாவது பங்களிப்புச் செய்ய வேண்டும் என்று நினைப்பவர் டோனி. தன்னால் முடிந்தால் 10 ஓட்டங்களையாவது அடித்துவிட்டாலும் அதை நினைத்து மகிழ்ச்சியடைவார்

அப்படி இருக்கும் டோனி இந்த பருவத்தில் தன்னுடைய மோசமான போர்ம் குறித்து நிச்சயம் வருத்தப்படுவார். இன்னும் ஒரு போட்டி மாத்திரமே இருக்கும் நிலையில் எந்த விதத்திலும் டோனியின் துடுப்பாட்டத்தை மேம்படுத்துவது சாத்தியமில்லை

எஞ்சிய போட்டிகளில் வேண்டுமானால் சென்னை வெல்ல முடியும். ஆதலால், அடுத்த ஆண்டு பருவத்தில் டோனி களத்துக்கு வரும்போது போதுமான அளவு துடுப்பாட்ட பயிற்சியோடு வரவேண்டும் என விரும்புகிறேன்” என குமார் சங்கக்கார மேலும் தெரிவித்தார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<