IPL இல் அதிக விலைக்கு எடுக்கப்பட்டு சொதப்பிய வீரர்கள்

548

நடப்பு இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐபிஎல்) தொடர் கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இதுவரை நடைபெற்ற 48 லீக் போட்டிகளில், ஒரே போட்டியில் இரண்டு சுப்பர் ஓவர்கள் போன்ற பல ஆச்சரியமூட்டும் நிகழ்வுகள் அரங்கேறின. குறிப்பாக, இந்தியாவைச் சேர்ந்த இளம் வீரர்கள் பலர் இம்முறை சிறப்பாக கலக்கி வருகின்றனர். 

எதுஎவ்வாறாயினும், இம்முறை ஐ.பி.எல் தொடரில் அதிக விலை ஏலத்தில் எடுக்கப்பட்ட இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள் சிலர் பிரகாசிக்க தவறிவிட்டனர். எனவே அவர்கள் யார் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

பெட் கம்மின்ஸ் (15.5 கோடி ரூபாய்)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இம்முறை வெளிநாட்டு வீரர்கள் யாரும் பெரிதாக விளையாடவில்லை. அணித் தலைவர் இயென் மோர்கன், சுனில் நரைன் மட்டும் ஒரு சில போட்டிகளில் நன்றாக விளையாடி வருகிறார். மற்ற வெளிநாட்டு வீரர்கள் மிகவும் சொதப்பி வருகின்றனர்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, அவுஸ்திரேலியாவின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் பெட் கம்மின்ஸை 15.5 கோடிக்கு ஏலம் எடுத்தது. இதற்குமுன், அவர் 2014ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்காக விளையாடியிருந்தார்

15.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் இம்முறை .பி.எல் தொடரில் அசத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மோசமாக விளையாடி வருகிறார். இதுவரை அவர் பங்கேற்ற 12 போட்டிகளில் வெறும் 6 விக்கெட்களை மட்டுமே கைப்பற்றியுள்ளார்

சர்ச்சைகளால் வலம்வந்த IPL முதல்பாதி ஆட்டங்கள்

பந்துவீச்சில் சொதப்பினாலும், துடுப்பாட்டத்தில் ஓரளவுக்கு 127 என்ற சராசரியுடன் 131 ஓட்டங்களை எடுத்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அரைச்சதம் கடந்து கொல்கத்தா அணியின் வெற்றிக்கு உதவிக்கரமாக இருந்தார். இருப்பினும், கொல்கத்தா அணியில் வெற்றியில் இவரின் பந்துவீச்சு சிறப்பாக அமையவில்லை.

கிளென் மெக்ஸ்வெல் (10.75 கோடி ரூபாய்)

இம்முறை .பி.எல் தொடருக்காக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கிளென் மெக்ஸ்வெல்லை கடுமையாகப் போராடி 10.75 கோடிக்கு ஏலம் எடுத்தது. இவர் இதற்குமுன், 2014ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்காக விளையாடி அதிரடியாக துடுப்பெடுத்தாடி, அந்த அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார்

ஆனால், இந்த சீசனில், முதல் 9 போட்டிகளில் ஒரு சிக்ஸர் கூட அடிக்க முடியாமல் திணறி, தற்போது 12 போட்டிகளில் விளையாடி 102 ஓட்டங்களை மட்டுமே எடுத்துள்ளார். அதேபோல, பந்துவீச்சிலும் சொதப்பி ஒரேயொரு 3 விக்கெட்டுக்களை மட்டுமே எடுத்துள்ளார்

Video – LPL தொடரிலிருந்து விலகும் வெளிநாட்டு வீரர்கள் | Sports Roundup – Epi 137

அதிலும் குறிப்பாக, பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல், மயாங் அகர்வால் மற்றும் கிறிஸ் கெயில் உள்ளிட்ட வீரர்கள் சிறப்பாக விளையாடுவதால், மெக்ஸ்வெல்லின் சொதப்பலான ஆட்டம் பெரிதாகப் பேசப்படுவதில்லை.  

அன்ட்ரே ரசல் (8.5 கோடி ரூபாய்)

உலகின் முன்னணி சகலதுறை வீரரும், கொல்கத்தா அணியின் அதிரடி வீரரானன்ட்ரே ரசல் நடப்பு .பி.எல் தொடரில் மந்தமாகவே விளையாடி வருகிறார். எனினும், உபாதை காரணமாக அவர் ஒருசில போட்டிகளில் விளையாடவில்லை.   

இதுவரை 9 போட்டிகளில் விளையாடி உள்ள ரசல் வெறும் 92 ஓட்டங்களை மட்டுமே அடித்துள்ளார். அத்துடன் பந்துவீச்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கொல்கத்தா அணியின் துடுப்பாட்டம் சற்று வலு இழந்து காணப்படுவதற்கு இவரும் ஒரு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

ஜெயதேவ் உனாட்கட் (11.5 கோடி ரூபாய்)

2020ஆம் ஆண்டு .பி.எல் தொடரில் விளையாடுவதற்கு முன் சிறப்பான போர்மில் இருந்த வீரர் தான் இந்தியாவின் ஜெயதேவ் உனாட்கட். இவர் முதல்முறையாக சவுராஸ்டிரா அணி ரஞ்சிக் கிண்ணத்தை வெல்ல காரணமாக இருந்தார்

எனவே, நடப்பு .பி.எல் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவர் மீது அதிக எதிர்பார்ப்புகள் எழுந்தன. அவை அனைத்தும் தற்போது ஏமாற்றமாகவே அமைந்துள்ளது

இடைநடுவில் IPL தொடரை தவறவிட்ட முன்னணி வீரர்கள்

இவர் இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 4 விக்கெட்டுகளை மட்டும் வீழ்த்தியுள்ளார். ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் உனாட்கட், ஆர்ச்சருக்கு பக்க பலமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது.

ஷெல்டன் கொட்ரல் (8.5 கோடி ரூபாய்)

ஐ.பி.எல் ஏலம் தொடங்குவதற்கு முன்பு, இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. அப்போது, ஷெல்டன் கொட்ரெல் அதிரடியாகப் பந்துவீசி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால், ஏலத்தில் இவரின் மதிப்பு உயர்ந்தது

இதனையடுத்து பஞ்சாப் அணி கடுமையாகப் போராடி இவரை 8.5 கோடிக்கு ஏலம் எடுத்தது. .பி.எல் தொடரின் ஆரம்பத்தில் நல்ல முறையில் பந்துவீசிய இவர், போகப் போக விக்கெட்களை வீழ்த்த திணற ஆரம்பித்தார்

இதுவரை கொட்ரெல் வீழ்த்திய 6 விக்கெட்களில் நான்கு விக்கெட்டுகள் முதல் இரண்டு போட்டிகளில் எடுத்தவை. ஒரு ஓவருக்கு சராசரியாக 8.8 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து பஞ்சாப் அணிக்கு மோசமான திறமையைக் காண்பித்தார். 

கேதர் ஜாதவ் (7.8 கோடி ரூபாய்)

கேதார் ஜாதவை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 7.8 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது. இவர் மத்திய வரிசை வீரராக சென்னை அணியில் களமிறங்கி வருகிறார்

நடப்பு .பி.எல் தொடரில் சுரேஷ் ரெய்னா இல்லாததால் இவர் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. இவை அனைத்திற்கும் அவர் ஒரு பெரிய ஏமாற்றமாகவே அமைந்துள்ளார்.  

Video – டோனி ஏன் நடராஜனிடம் விக்கெட்டினை கொடுத்தார்? | Cricket Galatta Epi 41

இதுவரை 8 போட்டிகளில் களமிறங்கிய கேதார் ஜாதவ் வெறும் 62 ஓட்டங்களை மட்டுமே பெற்றுள்ளார். அத்துடன் அனைத்து போட்டிகளிலும் மிகவும் ஆமை வேகத்தில் ஓட்டங்களை எடுத்து சென்னை அணிக்கு அதிர்ச்சியை தந்துள்ளார்.

ரொபின் உத்தப்பா (3 கோடி ரூபாய்)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக நீண்ட காலம் விளையாடிய ரொபின் உத்தப்பா, கடந்த சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்

இதனால், அணியில் இருந்து கழற்றிவிடப்பட்ட இவரை ராஜஸ்தான் அணி ஏலம் எடுக்க அதிக ஆர்வம் காட்டியது. இதனால் இம்முறை ஏலத்தில் 3 கோடிக்கு உத்தப்பா ஏலம் போனார்

முதல் 7 போட்டிகளில் 117 சராசரியுடன் 124 ஓட்டங்களை மட்டுமே எடுத்து, அதிரடி காட்ட முடியாமல் திணறி வந்தார். தற்போது, அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கி ஓரளவுக்கு சிறப்பாகச் செயல்பட்டு வருகின்ற அவர், 10 போட்டிகளில் 160 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

ஜேம்ஸ் நீஷம் (50 இலட்சம் ரூபாய்)

நியூசிலாந்து அணியின் சிறந்த சகலதுறை வீரரான இவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 50 இலட்சத்திற்கு ஏலம் எடுத்தது. சில போட்டிகளில் மட்டுமே களமிறங்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது

 

சகலதுறை வீரராகத் திகழும் நீஷம் துடுப்பாட்டம், பந்துவீச்சு என அனைத்திலும் அணியின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யத் தடுமாறி வருகிறார்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<