முதல் நாள் நிறைவில் புனித அலோசியஸ் கல்லூரி முன்னிலையில்

200
U19 Schools Cricket

காலி புனித அலோசியஸ் கல்லூரி மற்றும் கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரி அணிகள் மோதிக் கொண்ட 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் நிறைவில், புனித அலோசியஸ் கல்லூரி வலுவான நிலையிலுள்ளது.

கடுனேரிய புனித செபஸ்டியன் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற புனித அலோசியஸ் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

பண்டாரநாயக்க கல்லூரியின் பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்தில் சிறப்பாக பந்துவீச, புனித அலோசியஸ் கல்லூரியின் விக்கெட்டுகள் ஒன்றன் பின் ஒன்றாக வீழ்ந்தன. எனினும் கீழ்வரிசை துடுப்பாட்ட வீரர்களின் நிதானமான ஆட்டம் காரணமாக அவ்வணி 71 ஓவர்களில் 269 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அலோசியஸ் கல்லூரி சார்பாக சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய கவிக டில்ஷான் ஆட்டமிழக்காது 80 ஓட்டங்களைக் குவித்தார். பசிந்து நாணயக்கார 47 ஓட்டங்களையும், ரவிந்து சஞ்சன 31 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பண்டாரநாயக்க கல்லூரியின் சார்பாகப் பந்துவீச்சில் சிசித்த மதநாயக 48 ஓட்டங்களை வழங்கி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து களமிறங்கிய பண்டாரநாயக்க கல்லூரியின் துடுப்பாட்ட வீரர்கள் எதிரணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். ரவிந்து சஞ்சன மற்றும் ஹரீன் புத்தில ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்த, பண்டாரநாயக்க கல்லூரி அணியினர் ஆட்ட நேர முடிவின் போது 6 விக்கெட்டுகளை இழந்து 92 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தனர். பண்டாரநாயக்க கல்லூரி சார்பாக சாசிரி அதிகாரி 52 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

புனித அலோசியஸ் கல்லூரி – 269 (71) – கவிக டில்ஷான் 80*, பசிந்து நாணயக்கார 47, ரவிந்து சஞ்சன 31, சிசித்த மதநாயக 3/48

பண்டாரநாயக்க கல்லூரி – 92/6 (29) – சாசிரி அதிகாரி 52, ரவிந்து சஞ்சன 2/06, ஹரீன் புத்தில 2/28