சச்சின் டெண்டுல்கருக்கு கொவிட்-19 தொற்று!

India Cricket

289
Road Safety World Series Twitter

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், இறுதியாக நடைபெற்றுமுடிந்த வீதி பாதுகாப்பு T20  உலகத் தொடரில் இந்திய லெஜண்ட்ஸ் அணியின் தலைவராக செயற்பட்ட சச்சின் டெண்டுல்கருக்கு, கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த இந்த விடயத்தினை சச்சின் டெண்டுல்கர் உத்தியோகபூர்வமாக அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தனக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், எனினும், குடும்பத்தாருக்கு கொவிட்-19 தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

துடுப்பாட்டத்தில் பிரகாசித்த திசர பெரேரா, இசுரு உதான

இதுதொடர்பில் சச்சின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் “கொவிட்-19 பரிசோதனையை மேற்கொண்டதுடன், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றேன்.

சில கொவிட்-19 அறிகுறிகளை நான் அறிந்திருந்த நிலையில், மேற்கொள்ளப்பட்ட கொவிட்-19 பரிசோதனையில், தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனினும், எனது குடும்பத்தாருக்கு கொவிட்-19 தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தற்போது நான் வைத்தியர்கள் அறிவுறுத்திய அனைத்து கொவிட்-19 விதிமுறைகளையும் பின்பற்றி, என்னுடைய வீட்டில் தனிமைப்படுத்தலில் இருக்கிறேன். எனக்கு ஆதரவாக இருந்த மற்றும் நாட்டுக்கு ஆதரவாக இருக்கும் அனைத்து வைத்திய அதிகாரிகளுக்கும் எனது நன்றிகளை தெரிவிக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள், வீதி பாதுகாப்பு T20  உலகத் தொடரில் பங்கேற்றிருந்ததுடன், இறுதிப்போட்டியில் இலங்கை லெஜண்ட்ஸ் அணியை வீழ்த்தி, இந்திய லெஜண்ட்ஸ் அணி சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<