ஆசிய இளையோர் வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு அபார வெற்றி

113

தென்கொரியாவில் நடைபெற்றுவரும் 2023ஆம் ஆண்டுக்கான ஆசிய இளையோர் வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரின் தங்களுடைய முதல் போட்டியில் இன்று (11) தென் கொரியாவை எதிர்கொண்ட இலங்கை அணி 94-08 புள்ளிகள் என்ற கணக்கில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.

பன்னிரண்டாவது ஆசிய இளையோர் வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடர் சனிக்கிழமை (10) ஆரம்பமானதுடன், இலங்கை அணி இன்று தங்களுடைய முதல் போட்டியில் விளையாடியது.

>>ஆசிய இளையோர் வலைப்பந்து சம்பியன்ஷிப்; இலங்கை இறுதி குழாம் அறிவிப்பு<<

போட்டியின் ஆரம்பம் முதல்  இறுதிவரை அற்புதமாக ஆடிய இலங்கை வலைப்பந்தாட்ட அணி மிகச்சிறந்த ஆரம்பம் ஒன்றை இந்த தொடரில் பெற்றுக்கொண்டது.

ஆட்டத்தின் முதல் காற்பகுதியில் 24 புள்ளிகளை இலங்கை அணி பெற்றுக்கொண்டதுடன், 3 புள்ளிகளை மாத்திரமே தென்கொரிய அணி பெற்றது.

தொடர்ந்து ஆரம்பமான இரண்டாவது காற்பகுதியிலும் சிறப்பாக ஆடிய இலங்கை வலைப்பந்தாட்ட அணி 25-3 என்ற புள்ளிகளை பெற்றுக்கொண்டதுடன், மூன்றாவது காற்பகுதியில் 19-02 என்ற புள்ளிகளை பெற்று 68-08 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையை பெற்றுக்கொண்டது.

>>WATCH – ஆப்கானிஸ்தான் தொடர் இலங்கைக்கு நம்பிக்கை கொடுக்குமா? கூறும் ஷானக!<<

அபாரமான முன்னேற்றத்தை பெற்றுக்கொண்ட இலங்கை அணி, நான்காவது கால்பகுதியில் மேலும் அபாரமாக ஆடி 26 புள்ளிகளை பெற்றுக்கொண்டதுடன் எதிரணிக்கு எந்தவித புள்ளிகளையும் விட்டுக்கொடுக்கவில்லை. எனவே போட்டியில் 94-08 புள்ளிகள் என்ற கணக்கில் தொடரை நடத்தும் தென்காரியாவை வீழ்த்தி அபார வெற்றியை பதிவுசெய்தது.

முதல் போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை இளையோர் வலைப்பந்தாட்ட அணி, தங்களுடைய அடுத்தப் போட்டியில் திங்கட்கிழமை (12) புருனே அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<