100 பந்துகள் கிரிக்கெட் தொடருக்கான விதிமுறைகள் வெளியீடு

984
Cricket.com.au

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளின் கிரிக்கெட் சபைகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள அணிக்கு 100 பந்துகள் (The Hundred) கொண்ட கிரிக்கெட் தொடர் அடுத்த வருடம் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான  விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளின் கிரிக்கெட் சபைகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள அணிக்கு 100 பந்துகள் (The Hundred) கொண்ட கிரிக்கெட் தொடர் அடுத்த வருடம் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான  விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இன்றைய நவீன உலகில் காலத்திற்கு காலம் வேறுபட்ட வகையில் கிரிக்கெட் உலகிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

1877 ஆம் ஆண்டு கிரிக்கெட் எனும் விளையாட்டானது உலகிற்கு டெஸ்ட் கிரிக்கெட் எனும் வடிவில் அறிமுகமானது. இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளானது 5 நாட்கள் கொண்ட நீண்ட ஒரு போட்டியாக அமைந்திருந்தன.

இந்த டெஸ்ட் போட்டியில் ஒரு அணியினுடைய வெற்றியை காண்பதற்கு ரசிகர்கள் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தன.

திரில் வெற்றியை சுவைத்த மேற்கிந்திய தீவுகள்

இங்கிலாந்துடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் கடும் போராட்டத்தை…

அதன் பின்னர் ஒரு போட்டியினுடைய முடிவினை ஒரு நாளிளேயே சுவைக்க வேண்டும் என்பதற்காக 1971 ஆம் ஆண்டு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டியொன்று அறிமுகம் செய்யப்பட்டது. ஒருநாள் சர்வதேச போட்டி என்ற வடிவில் அணிக்கு 50 ஓவர்கள் கொண்ட போட்டியாக அது அறிமுகப்படுத்தப்பட்டது.

இது இவ்வாறு சென்று கொண்டிருக்கின்ற நிலையில் காலத்தின் தேவை கருதி 50 ஓவர்களாக காணப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கு மேலதிகமாக 2005 ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டு கிரிக்கெட் சபைகளினால் அணிக்கு 20 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டி என்ற வடிவிலும் புதுவகையான போட்டி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த 20 ஓவர்கள் கொண்ட போட்டிகளானது மூன்று அல்லது மூன்றரை மணித்தியாலங்களுக்குள் முடிவடைகின்ற போட்டி என்பதனால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் பாரிய வரவேற்பு கிடைத்திருந்தன.

பின்னர் குறித்த 20 ஓவர்கள் கொண்ட போட்டியானது உலக்கிண்ண தொடராகவும் நடாத்த ஆரம்பிக்கப்பட்டு இன்று மிகவும் பெறுமதியான போட்டியாக மாறியிருக்கின்றது.

பின்னர் ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் சபைகளும் தங்களது நிதி வசதிக்கேற்ப டி20 லீக் தொடர்களையும் வருடா வருடம் நடாத்தி வருகின்றன.

அந்த வகையில் தற்போது புதிய லீக் தொடர் ஒன்று கிரிக்கெட் உலகிற்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில் டி20 தொடரின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டி20 தொடரை அறிமுகம் செய்த அதே இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளின் கிரிக்கெட் சபைகள் மீண்டும் புதுவிதமாக 100 பந்துகள் (The Hundred) கொண்ட கிரிக்கெட் போட்டியை  நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபைகள் இணைந்து இதற்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளன.

மேலும் குறித்த 100 பந்துகள் கொண்ட போட்டித் தொடரானது அடுத்த வருடம் (2020) நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>பங்களாதேஷிற்கு எதிரான நியூசிலாந்து டெஸ்ட் குழாம் அறிவிப்பு

100 பந்துகள் கொண்ட போட்டிக்கான விதிமுறைகள்.

ஒரு போட்டியில் ஆகக் குறைந்தது 5 பந்துவீச்சாளர்கள் பந்துவீச வேண்டும். ஒரு பந்துவீச்சாளர் அதிகபடியாக 20 பந்துகளை வீச முடியும். இதில் 5 அல்லது 10 பந்துகளை தொடர்ச்சியாக வீச முடியும்.

ஒரு அணியினுடைய இன்னிங்ஸில் முதல் 25 பந்துகளும் பவர் பிளேயிற்கு உட்பட்ட பந்துகளாக கருதப்படும்.

ஒரு அணியினுடைய இன்னிங்ஸில் இரண்டரை நிமிடம் இடைவேளை (strategic timeout) வழங்கப்படும்.

ஐந்து வாரங்கள் நடைபெறும் குறித்த லீக் தொடரில் மொத்தமாக 8 அணிகள் பங்கேற்கவுள்ளன.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<