துடுப்பாட்டத்தில் பிரகாசித்த திசர பெரேரா, இசுரு உதான

433
Major Club Limited Over Tournament 2020/21

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இலங்கையின் பிரதான உள்ளூர் கிரிக்கெட் கழகங்கள் இடையே ஒழுங்கு செய்திருக்கும், மேஜர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (26) மொத்தமாக 12 குழுநிலைப் போட்டிகள் நிறைவுக்கு வந்தன. 

இன்றைய போட்டிகளில் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம், SSC ஆகியவை தமது தொடர் வெற்றிகளை பதிவு செய்ய குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம், NCC என்பனவும் இலகு வெற்றிகளை பெற்றிருந்தன. 

>> நிதான துடுப்பாட்டத்துடன் போட்டியை சமப்படுத்திய மே.தீவுகள்

இன்றைய நாளுக்கான துடுப்பாட்டத்தினை நோக்கும் போது தேசிய அணி வீரர்களில் ஒருவரான சந்துன் வீரக்கொடி சதம் (121) விளாசியிருந்தார். அதேநேரம், சந்துன் வீரக்கொடியின் சத உதவியுடன் பதுரெலிய கிரிக்கெட் கழகம் கொழும்பு கிரிக்கெட் கழகத்திற்கு எதிராக (09 ஓட்டங்களால்) வெற்றியினையும் பதிவு செய்திருந்தது. சந்துன் வீரக்கொடி தவிர NCC அணியின் கமில் மிசார (102*), லங்கன் கிரிக்கெட் கழகத்தின் தமித சில்வா (116) போன்ற வீரர்களும் சதம் விளாசியிருந்தனர். 

அதேநேரம் தேசிய அணி வீரர்களில் திசர பெரேரா இலங்கை இராணுவப்படை அணிக்காக அரைச்சதம் (58) பெற, தமிழ் யூனியன் அணிக்காக இசுரு உதானவும் அரைச்சதம் (51) ஒன்றினைப் பெற்றிருந்தார். 

>> BRC அணிக்காக 5 விக்கெட்டுக்களைச் சாய்த்த மொஹமட் சிராஸ்

பந்துவீச்சினை நோக்கும் போது செரசன்ஸ் விளையாட்டுக் கழகத்தின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் சமிந்த பண்டார 34 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியதே இன்றைய நாளில் பதிவான சிறந்த பந்துவீச்சாக மாறியிருந்தது. 

NCC எதிர் களுத்துறை நகர கழகம் 

  • ஆரோன்ஸ் கிரிக்கெட் கழக மைதானம், புலத்சின்கல

NCC – 269/6 (50) கமில் மிசார 102*, சத்துரங்க டி சில்வா 59, சஹன் ஆராச்சிகே 51, இன்சக்க ஜயவர்தன 3/54, மிதுன் ஜயவிக்ரம 2/35

களுத்துறை நகர கழகம் – 110/9 (27.5) லஹிரு ஹிரன்ய 50*, அஷைன் டேனியல் 3/19, சத்துரங்க டி சில்வா 3/22

முடிவு – NCC அணி 159 ஓட்டங்களால் வெற்றி 

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் எதிர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

  • வெலகதர மைதானம், குருநாகல்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 227 (49.1) தனன்ஞய லக்ஷான் 70, ஹர்ஷ ராஜபக்ஷ 41, நவீன் குணவர்தன 3/30

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் – 228/5 (43.4) கயான் மனீஷன் 79, சமீர சாதமல் 56, அகில தனன்ஞய 2/42

முடிவு – குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் 5 விக்கெட்டுக்களால் வெற்றி

பதுரெலிய கிரிக்கெட் கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம் 

  • சர்ரேய் மைதானம், மக்கோன

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 255 (49.2) ரொன் சந்திரகுப்தா 96, பவன் ரத்நாயக்க 78, அலங்கார சில்வா 3/50

பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 181/4 (38) சந்துன் வீரக்கொடி 121, சோனால் தினுஷ 2/24

முடிவு – பதுரெலிய கிரிக்கெட் கழகம் 9 ஓட்டங்களால் வெற்றி (D/L முறையில்)

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம் 

  • பொலிஸ் பார்க் மைதானம், கொழும்பு

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் – 287/5 (50) சரித்த குமாரசிங்க 76, ப்ரமோத் மதுவன்த 69, அயான சிறிவர்தன 53, ஹஷேன ராமநாயக்க 46*

பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 219 (44) மதுரங்க சொய்ஸா 62, சமிந்த பண்டார 4/34

முடிவு – செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் 68 ஓட்டங்களால் வெற்றி 

இராணுவப்படை கிரிக்கெட் கழகம் எதிர் BRC 

  • BRC மைதானம், கொழும்பு 

இராணுவப்படை கி.க. – 175 (46.4) திசர பெரேரா 58, ஹிமாஷ லியனகே 47, சமீர திசநாயக்க 3/23, மொஹமட் சிராஸ் 2/26

BRC – 94 (34.1) நிமேஷ குணசிங்க 38, துஷான் விமுக்தி 3/27

முடிவு – இராணுவப்படை கி.க. 81 ஓட்டங்களால் வெற்றி 

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் லங்கன் கிரிக்கெட் கழகம் 

  • மேரியன்ஸ் கிரிக்கெட் மைதானம், கட்டுநாயக்க

சிலாபம் மேரியன்ஸ் கி.க. – 271/9 (50) ருமேஷ் புத்திக்க 54, திக்ஷில டி சில்வா 51, தமித சில்வா 2/43

லங்கன் கிரிக்கெட் கழகம் – 267 (49.3) தமித சில்வா 118, ரிசித் உப்மால் 37, திக்ஷில டி சில்வா 3/59

முடிவு – சிலாபம் மேரியன்ஸ் கி.க. 4 ஓட்டங்களால் வெற்றி 

றாகம கிரிக்கெட் கழகம் எதிர் கடற்படை விளையாட்டுக் கழகம் 

  • கடற்படை விளையாட்டுக்கழக மைதானம், வெலிசர

கடற்படை விளையாட்டுக் கழகம் – 208/9 (50) புத்திக்க மதுஷன் 67, சஷிக்க டுல்ஷான் 3/27 

றாகம கிரிக்கெட் கழகம் – 212/8 (48.1) தினேத் திமோத்யா 51, நிஷான் மதுஷ்க 44, சமோத் பட்டாகே 3/28

முடிவு – றாகம கிரிக்கெட் கழகம் 2 விக்கெட்டுக்களால் வெற்றி 

பாணதுறை விளையாட்டுக் கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழகம் 

  • பாணதுறை எலஸ்பந்தே மைதானம், களுத்துறை 

காலி கிரிக்கெட் கழகம் – 218 (46.4) இமேஷ் உதயங்க 40, ராஜூ கயஷான் 37, கோஷான் தனுஷ்க 3/38

பாணதுறை விளையாட்டுக் கழகம் – 209/4 (39) அனுர தர்மசேன 112*, சலன டி சில்வா 2/18

முடிவு – பாணதுறை விளையாட்டுக் கழகம் 56 ஓட்டங்களால் வெற்றி (D/L முறையில்)

நுகேகொட கிரிக்கெட் கழகம் எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்

  • இராணுவப்படை மைதானம், மத்தேகொட

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 214/9 (50) அஷேன் சில்வா 53, லஹிரு ஜயக்கொடி 2/17

நுகேகொட கிரிக்கெட் கழகம் –  140/4 (28) ஹசித்த பெரேரா 42, மாதவ்வ வர்ணபுர 2/12

முடிவு – நுகேகொட கிரிக்கெட் கழகம் 25 ஓட்டங்களால் வெற்றி (D/L முறையில்)

கண்டி சுங்க வி.க. எதிர் விமானப்படை விளையாட்டுக் கழகம் 

  • விமானப்படை விளையாட்டுக் கழகம், கட்டுநாயக்க

விமானப்படை வி.க. – 161 (44.4) ரவிந்து செம்புகெட்டிகே 37, உமேகா சத்துரங்க 4/33

கண்டி சுங்க வி.க. – 163/5 (31.2) சானக்க விஜேசிங்க 76*, அசன்த சிங்கபுலி 2/36

முடிவு – கண்டி சுங்க வி.க. 5 விக்கெட்டுக்களால் வெற்றி 

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் ஏஸ் கிரிக்கெட் கழகம்

  • டோம்பகொட சர்வதேச கிரிக்கெட் மைதானம், டொம்பாகொட

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 283/9 (50) இசுரு உதான 51, சதீர சமரவிக்ரம 40, சஷ்ரிக்க புஸ்கொல்ல 3/44, கவிந்து ரித்மால் 3/80

ஏஸ் கெபிடல் கிரிக்கெட் கழகம் – 92/6 (27) இரோஷ் சமரசூரிய 44, சசிந்து கொலம்பகே 2/14, மதுக்க லியபத்திரனகே 2/22

முடிவு – தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் 119 ஓட்டங்களால் வெற்றி (D/L முறையில்)

SSC எதிர் செபஸ்டினேட்ஸ் கிரிக்கெட் கழகம்

  • SSC மைதானம், கொழும்பு

SSC – 259/9 (50) நிபுன் தனன்ஞய 76, நுவனிது பெர்னாந்து 68, ஜெப்ரி வன்டர்சே 64, சரித் ராஜபக்ஷே 3/48

செபஸ்டினேட்ஸ் கிரிக்கெட் கழகம் – 148/9 (39) சஜித்ர ஜயத்திலக்க 31*, ப்ரபாத் ஜயசூரிய 3/23

முடிவு – SSC அணி 95 ஓட்டங்களால் வெற்றி (D/L முறையில்)

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<