இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை பதினொருவர் வெளியானது

803
 

பங்களாதேஷ் – இலங்கை அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடும் இலங்கை பதினொருவர் அணிக் குழாமானது அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதன்படி, நாளை (23) ஆரம்பமாகவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை பதினொருவர் அணியில் ஒரு மாற்றம் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

2022ஆம் ஆண்டு IPL பிளே ஒப் சுற்று வாய்ப்பை பெற்ற அணிகள் எவை?

சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான டாக்கா ஆடுகளத்தில் இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள நிலையில் இந்தப் போட்டியில் இலங்கை அணி சுழல்பந்துவீச்சாளரான லசித் எம்புல்தெனியவிற்குப் பதிலாக பிரவீன் ஜயவிக்ரமவிற்கு வாய்ப்பு வழங்கியிருக்கின்றது.

இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சமநிலை அடைந்திருந்ததோடு, நாளை ஆரம்பமாகும் போட்டி தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மோதலாகவும் அமையவுள்ளது.

இலங்கை அணி – திமுத் கருணாரட்ன (தலைவர்), குசல் மெண்டிஸ், ஓசத பெர்னாண்டோ, தினேஷ் சந்திமால், அஞ்செலோ மெதிவ்ஸ், தனன்ஞய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, பிரவீன் ஜயவிக்ரம, கசுன் ராஜித, ரமேஷ் மெண்டிஸ், அசித பெர்னாண்டோ

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<