தேசிய தேர்வுக் குழுவின் தலைவராக இராணுவ தளபதி

177
national selection committee

தேசிய தேர்வுக் குழு மற்றும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் மேல்முறையீட்டு ஆலோசனைக் குழு ஆகியவற்றின் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். 

இதன்படி, தேசிய தேர்வுக் குழுவின் தலைவராக இராணுவ தளபதி லெப்டினண்ட் ஜெனரல்வேந்திர சில்வாவும், விளையாட்டுத்துறை அமைச்சின் மேல்முறையீட்டு ஆலோசனைக் குழுவின் தலைவராக உச்ச நீதிமன்ற நீதிபதி கன்கானி தத்தி சித்ரசிரியும் நியமிக்கப்பட்டுள்ளனர்

விளையாட்டு அபிவிருத்திக்கு மஹேலவுடன் கைகோர்க்கும் டயலொக் நிர்வாகி

இந்த நியமனம் கடந்த 2 ஆம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்றது

இதன்படி, இராணுவ தளபதி லெப்டினண்ட் ஜெனரல் வேந்திர சில்வா தலைமையிலான தேசிய தேர்வுக் குழுவின் உறுப்பினர்களாக தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் சுரேஷ் சுப்பிரமணியம், தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் மெக்ஸ்வெல் டி சில்வா, அர்ஜுன் பெர்னாண்டோ, மொஹமட் ஹபீஸ் மாசோ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்

இதேநேரம், தேசிய தேர்வுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் இராணுவ தளபதி லெப்டினண்ட் ஜெனரல் வேந்திர சில்வா கருத்து தெரிவிக்கையில்,

”தேசிய அளவில் விளையாட்டின் அபிவிருத்திக்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளேன். இதற்காக இலங்கை இராணுவம் பாரிய முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.  

நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டுகளுக்கும் தேசிய ரீதியிலான கொள்கையொன்றை உருவாக்க வேண்டும். அதற்கு தேசிய தேர்வுக் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் எனக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். திறமையான வீரர்களை இனங்கண்டு அவர்களை தேசிய அணிகளில் இடம்பெறச் செய்வதற்கான வேலைத்திட்டங்களை உடனடியாக முன்னெடுக்க வேண்டும்

இலங்கை பாராளுமன்றத்தில் உள்ள கரப்பந்தாட்ட நட்சத்திரங்கள்

குறிப்பாக, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இதுதொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். 2028 ஒலிம்பிக் மாத்திரமல்லாமல், அனைத்து விளையாட்டுக்களையும் அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டத்தை நாங்கள் கொண்டு வருவோம்

எனவே, இந்த நாட்டின் விளையாட்டுத்துறையின் வளர்ச்சியை கருத்திற் கொண்டு என்னை தேசிய தேர்வுக் குழுவின் தலைவராக நியமித்தமை குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். 

இதனிடையே, உச்ச நீதிமன்ற நீதிபதி கன்கானி தத்தி சித்ரசிரி தலைமையிலான மேல்முறையீட்டு ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக ஜனாதிபதி சட்டத்தரணி சண்டக ஜயசுந்தர, ஜனாதிபதி சட்டத்தரணி தினால் மாரியோ ரெக்ஸ் பிலிப்ஸ், முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் சிதத் வெத்தமுனி, முன்னாள் மெய்வல்லுனர் வீராங்கனை தமயந்தி தர்ஷா, ராகுல விக்ரமநாயக்க மற்றும் ரொஷனி கொப்பேக்கடுவ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க