இலங்கை மகளிர் அணிக்கு புதிய தலைமை பயிற்றுவிப்பாளர்!

New Zealand women's tour of Sri Lanka 2023

118

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ருமேஷ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20I தொடருக்கான இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளராக  இவர் நியமிக்கப்பட்டுள்ளார் என இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அறிவித்துள்ளது.

>> ஜிம்பாப்வேயிடம் வீழ்ந்த மேற்கிந்திய தீவுகளுக்கு அபராதம்

ருமேஷ் ரத்நாயக்க முன்னாள் வேகப் பந்தவீச்சாளராக விளையாடியமை மாத்திரமின்றி, இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டுள்ளார்.

தலைமை பயிற்றுவிப்பாளர் மாத்திரமின்றி மகளிர் அணிக்கான பயிற்றுவிப்பு குழாத்தையும் இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. அதன்படி மகளிர் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக மலிந்த வர்ணபுர, களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக கார்மன் மாபட்டுன மற்றும் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக ஒமேஷ் விஜேசிறிவர்தன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை மகளிர் மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான தொடர் நாளை செவ்வாய்க்கிழமை (27) காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<