உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதான கட்டுமானப் பணிகள் மும்முரம்

853

கிரிக்கெட்டின் தாயகம் இங்கிலாந்து என்பது அனைவரும் அறிந்த விடயம். எனினும், உலகில் எந்த நாட்டிலும் இந்தியாவில் இருப்பது போல் கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட ரசிகர்கள் கிடையவே கிடையாது. இங்கு கிரிக்கெட் என்பது ஒரு மதமாகவே பார்க்கப்படுகிறது. அதை மெய்யாக்கும் விதத்தில் பீகார் மாநிலத்தில் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கருக்காக ஒரு கோயிலே கட்டப்பட்டு உள்ளது. இப்படி கிரிக்கெட்டை தீவிரமாக காதலிக்கும் ரசிகர்கள் அதிகமாக இருப்பதால் அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவே வருடமொன்றுக்கு பல்வேறு கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் இடம்பெற்று வருகின்றன. அதேபோல, இந்தியாவில் கிரிக்கெட் மைதானங்களுக்கும் பஞ்சமில்லை எனலாம்.

ஆஸி. ஒருநாள் தொடரில் பும்ராவிற்கு ஓய்வு: சிராஜிற்கு அழைப்பு

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரிலிருந்தும்

உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான (25இற்கும் மேற்பட்ட) கிரிக்கெட் மைதானங்களை கொண்ட நாடு இந்தியாதான். அதிலும் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் உலகின் 2ஆவது பெரிய கிரிக்கெட் மைதானமாக கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானம் விளங்குகிறது. அத்தோடு இந்தியாவின் மிகப் பழமையான கிரிக்கெட் மைதானமாகவும் கருதப்படும் ஈடன் கார்டன் மைதானம் இந்திய இராணுவத்திற்கு சொந்தமானது. தற்போது டெஸ்ட், ஒருநாள், T20 என்று அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் நடத்தப்படும் ஈடன் கார்டன் மைதானத்தில் 90,000 பேர் அமர்ந்து பார்க்கும் வசதி உள்ளது.

இந்நிலையில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கும் பணியை அமித் ஷா தலைமையிலான குஜராத் கிரிக்கெட் சங்கம் கடந்த 2015ஆம் ஆண்டு ஆரம்பித்திருந்தது.

இந்தியாவின் முக்கிய நகர்களில் ஒன்றான குஜராத்தின் அஹமதாபாத்தில் உள்ள மோதேராவில் சர்தார் படேல் கிரிக்கெட் மைதானம் உள்ளது. இந்த மைதானம் சுமார் 54 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்டது. இந்த மைதானத்தை மிகப்பெரிய அளவில் மீள்நிர்மானம் செய்ய குஜராத் கிரிக்கெட் சங்க தலைவராக இருந்த காலத்தில் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டிருந்தார்.

அவரது கனவு திட்டத்தை நனவாக்கும் முயற்சியில் அமித் ஷா களமிறங்கி உள்ளார். பழைய மைதானத்தை இடித்துவிட்டு 1 இலட்சத்து 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.

மீண்டும் திசர அதிரடி; இலங்கைக்கு மற்றுமொரு ஏமாற்ற

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் திசர பெரேரா அதிரடியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியும்

63 ஏக்கர் நிலப்பரப்பில் 700 கோடி ரூபா செலவில் நிர்மானிக்கப்படும் இந்த கிரிக்கெட் மைதானத்தில் உள்ளக கிரிக்கெட் அரங்கம், நீச்சல் தடாகம், 3 பயிற்சி மைதானங்கள், 4 ஆடை மாற்றும் அறைகள், கிளப் இல்லம், 50 அறைகள் உட்பட பல்வேறு நவீன வசதிகள் இடம்பெறுகின்றன. அத்துடன், ஒரே நேரத்தில் 3 ஆயிரம் கார்களும், 10 ஆயிரம் இருசக்கர வாகனங்களும் இங்கு நிறுத்த முடியும்.

இந்த பணிகளை மேற்கொள்வதற்காக எல்ரூடி நிறுவனத்திடம் மைதானம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்வருட இறுதியில் கட்டுமான பணிகள் முடிவடைந்து புதிய மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடத்தப்படும் என குஜராத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுவரை உலகிலேயே மிகப் பெரிய கிரிக்கெட் மைதானம் அவுஸ்திரேலியாவில் உள்ள மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானம்தான். இந்த மைதானத்தில் 1 லட்சத்து 24 பேர் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். இந்த மைதானத்தை பின்னுக்கு தள்ளும் வகையிலேயே தற்போது அஹமதாபாத்தில் புதிய மைதானம் நிர்மானிக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, இந்த மைதானம் பயன்பாட்டிற்கு வரும் போது இந்தியாவுக்கு கௌரவத்தையும், அது நாட்டின் பெருமைக்குரிய சின்னமாக இருக்கும் என்றும் குஜராத் கிரிக்கெட் சங்க உப தலைவர் பரிமால் நத்வானி, தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க