ஒழுங்கீனமாக நடந்துகொண்ட உமர் அக்மலுக்கு போட்டித் தடை ஏற்பட வாய்ப்பு

84
Umar Akmal
PCB

உடற்தகுதி பரிசோதனையில் தோல்வியடைந்த விரக்தியில் என் உடலில் எங்கு கொழுப்பு இருக்கிறது என்று கூறுங்கள் என்று ஜெர்ஸியைக் களைந்து நின்ற உமர் அக்மலுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான உமர் அக்மல் ஒழுங்கீனம் மற்றும் உடற்தகுதி போன்ற பிரச்சினைகளால் தேசிய அணியில் விளையாட முடியாமல் தடுமாறி வருகிறார்.

பங்களாதேஷ் தொடருக்கான பாகிஸ்தான் டெஸ்ட் குழாம் அறிவிப்பு

பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள

இந்த நிலையில், தற்போது அந்நாட்டின் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் விளையாடும் வீரர்கள் அனைவரும் உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கட்டாயமாக்கியுள்ளது. 

இதனையடுத்து உமர் அக்மல் பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அகடமியில் உடற்தகுதியை நிரூபிக்க சென்றார். அப்போது சில தேர்வில் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. 

இதனால் கோபம் அடைந்த அவர் உடற்தகுதி நிபுணரிடம் ஜெர்சியை கழற்றிவிட்டு கொழுப்பு எங்கே இருக்கிறது? கூறுங்கள் என்று கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதனால் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அவருக்கு தடைவிதிக்கலாம் எனக் கூறப்படுகிறது. 

இதன்படி, அடுத்த உள்ளூர் தொடர் முழுவதும் உமர் அக்மல் தடை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் நிறைவுக்கு வந்த குவாயித் ஈ அசாம் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் சம்பியன் பட்டத்தை வென்ற மத்திய பஞ்சாப் அணிக்காக உமர் அக்மல் சதமடித்து அசத்தியிருந்தார். 

அதுமாத்திரமின்றி, இம்மாதம் ஆரம்பமாகவுள்ள பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் குவாட்டா கிளெட்டியேட்டர்ஸ் அணிக்காக விளையாட அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

இதேநேரம், உமர் அக்மல் இவ்வாறு ஒழுங்கீனமாக நடந்து கொள்வது முதல் தடவையல்ல. இறுதியாக கடந்த வருடம் டுபாயில் நடைபெற்ற அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 ஆவது ஒருநாள் போட்டிக்கு முன்பாக தாமதமாகி இரவு நேரத்தில் ஹோட்டல் அறைக்கு வந்த குற்றச்சாட்டில் போட்டிக் கட்டணத்தில் இருந்து 20 சதவீத அபராதம் அவருக்கு விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கையை சொந்த மண்ணில் மோதவுள்ள மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் குழாம் அறிவிப்பு

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான

கம்ரன் அக்மல், உமர் அக்மல் சகோதரர்களுக்கு உடற்தகுதி எப்போதும் ஒரு பிரச்சினையாகவே இருந்து வந்தது. இதன் காரணமாக தேசிய அணியில் இடம்பெறாமல் தடுமாறி வந்தனர். 

அதிலும் குறிப்பாக அந்த அணியின் முன்னாள் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பயிற்சியாளராக இருந்த போது அக்மல் சகோதரர்களை, உடற்தகுதியை நிரூபிக்காத காரணத்தினால் அணியிலிருந்து நீக்கினார்.

2009 இல் நியூஸிலாந்துக்கு எதிராக அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம் கண்ட உமர் அக்மல், 16 டெஸ்ட் போட்டிகளில் 1003 ஓட்டங்களைக் குவித்துள்ளார். 

121 ஒருநாள் போட்டிகளில் 2 சதங்களுடன் 3,194 ஓட்டங்களைக் குவித்துள்ள அவர், 84 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 1690 ஓட்டங்களை எடுத்துள்ளார். 

இது இவ்வாறிருக்க, பாகிஸ்தான் கிரிக்கெட் அகடமியில் மேற்கொள்ளப்பட்ட குறித்த உடற்தகுதி பரிசோதனையில் உமர் அக்மலைப் போல அவருடைய சகோதரர் கம்ரன் அக்மல் மற்றும் சல்மான் பட் ஆகியோர் தங்களது உடற்தகுதியினை நிரூபிக்கத் தவறியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவான் குலசேகரவின் டி20 உலக சாதனையை முறியடித்த பும்ரா

டி20 சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஓட்டமற்ற ஓவர்களை வீசிய வீரர்கள்

இதன் காரணமாக, அடுத்த உள்ளூர் போட்டித் தொடர்களில் இந்த மூன்று வீரர்களையும் ஒப்பந்தம் செய்வதற்கு எந்தவொரு கழகங்களும் முன்வரவில்லை என அந்நாட்டு கிரிக்கெட் சபை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க