ஜிம்பாப்வேயிடம் வீழ்ந்த மேற்கிந்திய தீவுகளுக்கு அபராதம்

ICC Men's Cricket World Cup Qualifier

154

ம்பாப்வே அணிக்கு எதிரான உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் ஓவர்களை வீசிமுடிக்க தவறிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு போட்டிக் கட்டணத்தில் 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக சனிக்கிழமை (24) நடைபெற்ற போட்டியில் ஜிம்பாப்வே அணி 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது 

இந்த நிலையில், குறித்த போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரங்கள் எடுத்துக் கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணிக்கு போட்டிக் கட்டணத்திலிருந்து 60 சதவீதத்தை அபராதமாக ஐசிசி விதித்துள்ளது. 

போட்டியின் பின்னர், கள நடுவர்கள் இருவரும் போட்டி மத்தியஸ்தர் முஹம்மத் ஜாவிட்டிடம் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய இதுதொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. 

இதன்போது மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவர் ஷாய் ஹோப் குற்றத்தை ஏற்றுக்கொண்ட நிலையில், வீரர்களுக்கான அபராதம் உறுதிசெய்யப்பட்டது. 

இதன்படி, வீரர்கள் மற்றும் வீரர்களுக்கான உதவியாளர்கள் தொடர்பில் ICC இன் ஒழுங்கு விதிமுறைகளின் 2.22 சரத்துக்கு அமைய, குறித்த ஓவர் ஒன்றுக்காக பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்ட அந்த அணியின் வீரர்களுக்கு போட்டி கட்டணத்திலிருந்து 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும், நேர கொடுப்பனவுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட பின்னர் மேற்கிந்திய தீவுகள் அணி குறித்த நேரத்திற்குள் மூன்று ஓவர்கள் குறைவாக வீசியதாக கருதப்பட்டது. இதனால் 60 வீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  

மேலும், தாம் செய்த தவறினை மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவர் ஒப்புக் கொண்டதால், அது தொடர்பில் எந்தவொரு விசாரணையும் மேற்கொள்ளத் தேவையில்லை என ICC மேலும் தெரிவித்துள்ளது. 

இம்முறை உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் குழு A இடம்பிடித்த முன்னாள் உலக சம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணி, இதுவரை 3 போட்டிகளில் ஆடி 2இல் வெற்றயீட்டி சுபர் சிக்ஸ் சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<