உலக பதினொருவர் அணியில் லூக் ரோன்ச்சி மற்றும் மெக்லெனகன்

542
AFP

இந்த மாத இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் உலக பதினொருவர் அணிக்கும் இடையில் இடம்பெறவுள்ள விசேட T20 போட்டியில், உலக பதினொருவர் அணிக்கு பலம் சேர்க்க நியூசிலாந்தின் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான லூக் ரோன்ச்சி மற்றும் வேகப்பந்து வீச்சாளரான மிச்செல் மெக்லெனகன் ஆகியோர் அழைக்கப்பட்டிருக்கின்றனர்.

சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று (7) வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் இந்த இரண்டு நியூசிலாந்து வீரர்களும் உலக பதினொருவர் அணிக்காக விளையாட அழைக்கப்பட்டிருக்கும் விடயத்தை உறுதி செய்துள்ளது.

உலக பதினொருவர் அணியில் கார்த்திக், பாண்ட்யா இணைப்பு

இந்த மாத இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் உலக பதினொருவர் அணிக்கும்…….

கடந்த வருடம் செப்டெம்பர் மாதமளவில் கரீபியன் தீவுகளை தாக்கிய இர்மா மற்றும் மரியா புயல்களினால் அங்குள்ள ஐந்து முக்கிய கிரிக்கெட் மைதானங்கள் பாரியளவில் சேதங்களுக்கு உள்ளாகின.

இந்த மைதானங்களை புனரமைப்பு செய்வதற்காகவும் கிரிக்கெட் விளையாட்டுக்கான ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி கொடுப்பதற்காகவும் நிதி திரட்ட இந்த விஷேட T20 போட்டி இம்மாதம் 31 ஆம் திகதி மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் உலக பதினொருவர் அணிக்கும் இடையில்  கிரிக்கெட்டின் தாயகமான லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, லூக் ரோன்ச்சி மற்றும் மிச்செல் மெக்லெனகன் ஆகிய இருவரும் இந்த விசேட T20 போட்டிக்காக உலக பதினொருவர் அணிக்கு ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட நட்சத்திர வீரர்களான தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ராஷித் கான், சஹீட் அப்ரிடி, சொஹைப் மலிக், திசர பெரேரா, இயன் மோர்கன், சகீப் அல் ஹஸன் மற்றும் தமிம் இக்பால் ஆகியோருடன் இணைந்து உலக பதினொருவர் அணிக் குழாமை பூர்த்தி செய்கின்றனர். இப்போட்டிக்கான உலக பதினொருவர் குழாமை இங்கிலாந்து அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளின் தலைவரான இயன் மோர்கன் வழிநடாத்தவுள்ளார்.

37 வயதாகும் அதிரடி துடுப்பாட்ட வீரரான லூக் ரோன்ச்சி கடந்த ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த பின்னர் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்தும் ஆடி வருகின்றார். அண்மையில் முடிவடைந்த பாகிஸ்தான் சுபர் லீக் T20 தொடரில் இஸ்லாமாபாத் அணிக்காக விளையாடிய ரோன்ச்சி 43.5 என்ற துடுப்பாட்ட சராசரியுடன் (5 அரைச்சதங்கள் உட்பட) மொத்தமாக 435 ஓட்டங்களைக் குவித்து குறித்த தொடரில் அதிக ஓட்டங்கள் சேர்த்த வீரராக மாறியிருந்ததோடு, அவரது தரப்பு கிண்ணம் வெல்வதற்காகவும் உதவியிருந்தார்.

உலக பதினொருவர் அணியில் மீண்டும் திசர பெரேரா

லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும், உலக பதினொருவர் ……

இந்த விசேட T20 போட்டியில் விளையாடுவது தொடர்பாக பேசும்  போது ரோன்ச்சி “பெறுமதி வாய்ந்த நோக்கம் ஒன்றுக்காக வெவ்வேறு நாடுகளில் இருந்து வீரர்கள் ஒன்றிணைவதை பார்க்கும் போது நன்றாக உள்ளது“ எனக் குறிப்பிட்டிருந்தார்.

நியூசிலாந்தின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான மிச்செல் மெக்லெனகன் சர்வதேச போட்டிகள் உட்பட மொத்தமாக 148 T20 போட்டிகளில் ஆடி 183 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய அனுபவத்தினைக் கொண்டிருக்கின்றார். தற்போது ஐ.பி.எல். போட்டிகளில் ஆடிவரும் மெக்லெனகன் இந்த விஷேட T20 போட்டி தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த வேளையில், “இது மிகப் பிரமாண்டமான ஒரு நிகழ்வாகும். இப்போட்டியில் சிறந்த வீரர்களுடன் இணைந்து பங்குபற்றுவதையும், அனுகூலம் ஒன்றை அடைவதனையும் மிகவும் எதிர்பார்த்து இருக்கின்றேன்“ எனக் கூறியிருந்தார்.

சகல துறையில் பிரகாசித்த ஜயசூரிய

மாகாண மட்ட ‘சுப்பர் ப்ரொவின்சியல்’ ஒருநாள் கிரிக்கெட் தொடரின் விறுவிறுப்பான இரண்டு….

மறுமுனையில், இப்போட்டிக்காக கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட 13 பேர் அடங்கிய மேற்கிந்திய தீவுகள் குழாமை கார்லோஸ் பரத்வைட் தலைமை தாங்கவுள்ளார். அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான கிறிஸ் கெயில் மற்றும் ஈவின் லூயிஸ் ஆகியோரோடு 2 வருடங்களுக்குப் பிறகு அன்ட்ரு ரசலும் நல்ல நோக்கம் ஒன்றுக்காக இடம்பெறவுள்ள இந்த போட்டிக்கான மேற்கிந்திய குழாமில் இடம்பெற்றுள்ளனர்.

உலக பதினொருவர் அணி –  இயன் மோர்கன் (அணித்தலைவர்), தினேஷ் கார்த்திக், மிச்செல் மெக்லெனகன், ஹர்திக் பாண்டியா, திசர பெரேரா, ராஷித் கான், லூக் ரோன்ச்சி, சஹீத் அப்ரிடி, சொஹைப் மாலிக், சகீப் அல் ஹஸன், தமிம் இக்பால்