முதல் இடத்தை தக்க வைத்துக்கொண்டது ஹெவலொக் அணி

169
avelock SC v CR&FC

டயலொக் றக்பி லீக் 3ஆம் வார போட்டிகளில், கொழும்பு ஹெவலொக் மைதானத்தில் நடைபெற்ற CR&FC  மற்றும் ஹெவலொக் அணிகளுக்கிடையிலான போட்டியில் 10-06 என் ஹெவலொக் அணி வெற்றியீட்டியது.

மழையின் காரணமாக மைதானம் சீரற்று காணப்பட்ட நிலையில் போட்டியானது ஆரம்பித்தது. சென்ற வாரம் கடற்படை அணியுடனான தோல்வியின் பின்னர் CR&FC அணி பலம் மிகுந்த ஹெவலொக் அணியை வெற்றிகொள்ளும் எதிர்பார்ப்பில் போட்டியை ஆரம்பித்தது. மைதானத்தின் சீரற்ற தன்மைக்கு ஏற்ப CR&FC அணியானது பந்தை எதிரணியின் கோட்டைக்குள் உதைத்து விளையாடியது. எனினும் ஹெவலொக் அணியானது சிறந்த முறையில் அழுத்தத்திற்கு முகம் கொடுத்தது. போட்டி ஆரம்பித்து 20 நிமிடங்களின் பின்னர் CR&FC அணி போட்டியின் முதல் புள்ளியைப் பெற்றுக்கொண்டது. தமக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய ரீசா முபாரக், 25 மீட்டர் தூரமுடைய வெற்றிகரமான உதையினால் CR&FC அணிக்கு 3 புள்ளிகளைப் பெற்றுக்கொடுத்தார். (CR&FC 03 – ஹெவலொக் 00)

எனினும் CR&FC அணியால் தமது முன்னிலையை 10 நிமிடங்களுக்கு மேல் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. CR&FC அணியின் முக்கிய வீரரான ஒமல்க குணரத்ன நடுவரால் மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட, CR&FC அணி 14 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. இவ் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட ஹெவலொக் அணியானது ரோலிங் மோல் மூலம் பிரசாத் மதுசங்கவினால் ட்ரை வைத்தது. துலாஜ் பெரேரா வெற்றிகரமான உதையின் மூலம் 2 புள்ளிகளைப் பெற்றுக்கொடுத்தார். (CR&FC 03 – ஹெவலொக்ஸ் 07)

முதற் பாதி : CR&FC 03 – ஹெவலொக் கழகம் 07

இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில் இருந்து ஹெவலொக் அணியானது CR&FC அணிக்கு பாரிய அழுத்தத்தைக் கொடுத்தது. அதன் விளைவாக ஹெவலொக் அணியானது பெனால்டி வாய்ப்பொன்றைப் பெற்றது. கிடைத்த வாய்ப்பை வைத்து புள்ளிகளைப் பெற ஹெவலொக் அணி தவறவில்லை. வெற்றிகரமான 35 மீட்டர் தூர உதையின் மூலம் துலாஜ் பெரேரா ஹெவலொக் அணிக்கு மேலும் 3 புள்ளிகளைப் பெற்றுக்கொடுத்தார். (CR&FC 03 – ஹெவலொக் 10)

தொடர்ந்து ஹெவலொக் அணி CR&FC அணிக்கு அழுத்தம் கொடுத்து வந்தது. ஹெவலொக் அணிக்கு பல வாய்ப்புகள் கிடைத்த பொழுதும் அவற்றின் மூலம் பயன்பெற ஹெவலொக் அணி தவறியது. CR&FC அணி சிறந்த முறையில் ஹெவலொக் வீரர்களை புள்ளிகள் பெறுவதிலிருந்து தடுத்தது.

சிறிது நேரத்தின் பின்னர் CR&FC அணியானது, ஹெவலொக் அணியின் கோட்டைக்குள் நுழைந்து ஹெவலொக் அணிக்கு அழுத்தம் கொடுத்தது.   ஒரு சில முயற்சிகள் ஹெவலொக் அணியினால் முறியடிக்கப்பட்ட பின்னர் CR&FC அணிக்கு பெனால்டி வாய்ப்பொன்று கிடைக்கப்பெற்றது. பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ரீசா முபாரக் இலகுவாக CR&FC சார்பாக 3 புள்ளிகளை உதையின் மூலம் பெற்றுக்கொடுத்தார். (CR&FC 06 – ஹெவலொக் 10)

எஞ்சி இருந்த நிமிடங்களில் புள்ளி பெரும் நோக்கில் இரு அணிகளும் கடுமையாக மோதிக்கொண்ட போதிலும் இரு அணிகளாலும் புள்ளிகள் பெற முடியவில்லை. CR&FC அணி இரண்டு முறை அழுத்தத்தை கொடுத்த போதும், ஹெவலொக் அணி சிறப்பாக அவற்றை தடுத்து CR&FC அணியை வெறும் கையோடு திருப்பி அனுப்பியது.  இதனால் தமது முன்னிலையைத் தக்க வைத்துக்கொண்ட ஹெவலொக் அணியானது இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரில் முதல் இடத்தை தக்க வைத்துக்கொண்டது.

முழு நேரம் : CR&FC 06 – ஹெவலொக் கழகம் 10

புள்ளிகள்

CR&FC அணி – 06 (2 பெனால்டி)

ரீசா முபாரக் – 2 பெனால்டி

ஹெவலொக்ஸ் அணி – 10 (1 ட்ரை, 1 கோல் 1 பெனால்டி)

பிரசாத் மதுசங்க – 1 ட்ரை

துலாஜ் பெரேரா – 1 கன்வெர்சன், 1 பெனால்டி

நடுவர் – அருண ரன்கொத்கே

Thepapare.com போட்டியின் சிறந்த வீரர் – சுதம் சூரியாராச்சி (ஹெவலொக் அணி)

Watch the Replay! Havelock SC v CR & FC Match #11

[/vc_column][/vc_row]