சம்பியன்ஸ் லீக்கில் ரொனால்டோ – மெஸ்ஸி மோதல்

172
Ronaldo Face Messi in Champions League

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் குழுநிலை போட்டிகளில் பார்சிலோனா மற்றும் ஜுவன்டஸ் அணிகள் ஒரே குழுவில் தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில் உலகின் நட்சத்திர வீரர்களான லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒருவரை ஒருவர் எதிர்கொள்ளவுள்ளனர்.

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடருக்கான அணிகளை குழு நிலையாக பிரிக்கும் குலுக்கல் நிகழ்வு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் வியாழக்கிழமை (01) நடைபெற்றது

இதில் இந்த இரு பலம்மிக்க அணிகளும் உக்ரைனின் டினாமோ கீவ் மற்றும் ஹங்கேரியாவின் பிரென்க்வாரோஸ் கழகங்களுடன் G குழுவில் இடம்பெற்றுள்ளன.

>> Video – போட்டி முடிந்ததும் கோல் அடித்து வென்ற Manchester United | FOOTBALL ULAGAM

ரொனால்டோ ஸ்பெயினின் ரியல் மெட்ரிட் அணியுடன் ஆடும்போது மெஸ்ஸியின் போட்டியாளராக நீண்டகாலம் இருந்துள்ளார். சிறந்த கால்பந்து வீரர்களுக்கான பல்லொன் டி ஓர் விருதின் கடைசியான 12 விருதுகளில் 11 இந்த இருவருமே ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி வென்றுள்ளனர்

மறுபுறம் 2020 சம்பியன்ஸ் லீக்கின் இறுதிப் போட்டியில் தோற்ற பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு இம்முறை தொடரில் மன்செஸ்டர் யுனைடட்டிற்கு பதிலடி கொடுக்க வாய்ப்புக் கிட்டியுள்ளது. மன்செஸ்டர் யுனைடட் 2019இல் PSG கடைசி 16 அணிகள் சுற்றில் வெளியேற்றியது.  

இந்த இரு அணிகளும் H குழுவில் இடம்பெற்றிருப்பதோடு இதில் லிப்சிக்கையும் PSG எதிர்கொள்ளவுள்ளது. கடந்த பருவத்தில் இந்த இரு அணிகளும் அரையிறுதியில் ஆடியபோது நெய்மரின் PSG வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்கு முன்னேறியபோதும் இறுதியில் பெயர்ன் முனிச்சிடம் தோற்றது

>> பார்சிலோனாவுக்கு விடை கொடுக்கும் சுவாரெஸ், விடால்; மொராட்டா புதிய அணியில்

ப்ரீமியர் லீக் சம்பியனும், 2019 சம்பியன்ஸ் லீக்கை வென்ற அணியுமான லிவர்பூல் D குழுவில் அஜெக்ஸ் கழகத்தை எதிர்கொள்ளவுள்ளது. அட்லான்டா மற்றும் டென்மார்க் கழகமான மிட்ஜிலாண்ட் அணிகளும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளன

நடப்புச் சம்பியனான ஜெர்மனியில் பெயர்ன் முனிச் ஸ்பெயினின் மற்றொரு பலம்கொண்ட அணியான அட்லெடிகோ மெட்ரிட்டை A குழுவில் எதிர்கொள்ளவுள்ளது. B குழுவில் ரியல் மெட்ரிட்டுடன் இன்டர் மிலான் இணைந்திருப்பது கடும் போட்டியாக அமையும்.

செல்சி ஐரோப்பிய லீக் வெற்றியாளரான செவில்லா, க்ரஸ்னோடார் மற்றும் புதுமுக அணியான ரென்னஸை E குழுவில் எதிர்கொள்ளவுள்ளது

எனினும் மான்செஸ்டர் சிட்டி சற்று வசதியான குழுவில் இடம்பெற்றுள்ளது. C குழுவில் அந்த அணியுடன் போர்த்துக்கல் சம்பியனான போர்டோவுடன் ஒலிம்பியாகோஸ் மற்றும் மார்செய்ல் அணிகள் இடம்பெற்றுள்ளன.   

>> Video –வெற்றிகளுடன் இந்த பருவத்தை ஆரம்பித்த நடப்பு சம்பியன்கள்! | FOOTBALL ULAGAM

இந்தப் பருவத்திற்கான ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் குழு நிலைப் போட்டிகள் எதிர்வரும் ஒக்டோபர் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அனைத்து ஆறு சுற்றுப் போட்டிகளும் எட்டு வாரங்களுக்கு உள்ளடக்கப்பட்ட அட்டவணையில் நடத்தப்படவுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால் வழக்கத்தை விடவும் அதிக இறுக்கமான போட்டி அட்டவணையாக இது உள்ளது

தொடரின் இறுதிப் போட்டி அடுத்த ஆண்டு மே 29ஆம் திகதி துருக்கியின் ஸ்தான்பூல் நகரில் உள்ள அதாதுர்க் அரங்கில் நடைபெறவுள்ளது

போட்டிகளில் அரங்கினுள் 30 சதவீதமான ரசிகர்களை அனுமதிக்கும் அறிவிப்பையும் ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம் வெளியிட்டுள்ளது. எனினும் உள்ளூர் நிர்வாகத்தின் வழிகாட்டலுக்கு இணங்கவே இந்த அனுமதி வழங்கப்படும் என்று அது குறிப்பிட்டுள்ளது.

குழு நிலை அணிகள்

A குழு:   பயெர்ன் முனிச், அட்லடிகோ மெட்ரிட், சல்ஸ்பேர்க், லொகொமோடிவ் மொஸ்கோ
B குழு:   ரியர் மெட்ரிட், ஷக்டர் டொனெட்ஸ்க், இன்டர் மிலான், பொருசியா   மோன்செங்கலாட்பாக்
C குழு:   போர்டோ, மன்செஸ்டர் சிட்டி, ஒலிம்பியாகோஸ், மார்செய்லே
D குழு:   லிவர்பூல், அஜெக்ஸ், அடலன்டா, மிட்ஜிலாண்ட்
E குழு:    செவில்லா, செல்சி, கிரஸ்னோடார், ரென்னஸ்
F குழு:     செனிட் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க், பெருசியா டோர்ட்முண்ட், லேசியோ, ப்ருகஸ்
G குழு:   ஜுவன்டஸ், பார்சிலோனா, டினாமோ கீவ், பிரென்க்வாரோஸ்
H குழு:   பாரிஸ் செயின்ட் ஜெர்மைன், மன்செஸ்டர் யுனைடட், லிப்சிக், இஸ்தான்பூல் பசக்சஹிர்

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<