மீள திருத்தப்பட்ட உள்ளூர் T20 போட்டி அட்டவணை அறிவிப்பு

Sri Lanka Cricket

74
Sri Lanka Cricket

நாட்டில் தற்போது நிலவி வருகின்ற சீரற்ற காலநிலையால் தடைப்பட்ட உள்ளூர் T20 தொடர்கள் உள்ளிட்ட முக்கிய போட்டித் தொடர்களின் திருத்தப்பட்ட போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் 14 அணிகள் பங்கேற்கும் மேஜர் கழக T20 தொடர் கடந்த 16ஆம் திகதி ஆரம்பமாகியது. எனினும், 19ஆம் திகதி நடைபெறவிருந்த போட்டிகளும் 6 போட்டிகளும் சீரற்ற காலநிலையால் தடைப்பட்டன. இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் சபை வெளிpயிட்ட திருத்தப்பட்ட அட்டவணையின் படி, 19ஆம் மற்றும் 22ஆம் ஆகிய திகதிகளில் நடைபெறவிருந்த போட்டிகளும் மறுஅட்டவணை செய்யப்படும் எனவும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணையின் பிரகாரம் 25ஆம் திகதி முதல் போட்டிகள் மீணடும் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்த உள்ளூர் கழகங்களுக்கிடையிலான Tier ‘B’ T20 தொடர் கடந்த 17ஆம் திகதி ஆரம்பமாகியது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணையின் படி மே 20ஆம் மற்றும் 23ஆம் ஆகிய திகதிகளில் நடைபெறவிருந்த போட்டிகள் சீரற்ற காலநிலையால் தடைப்பட்டன.

எவ்வாறாயினும், குறித்த 2 தினங்களுக்குரிய போட்டிகள் மறுஅட்டவணை செய்யப்படும் எனவும், மே 26ஆம் திகதி முதல் போட்டிகள் மீண்;டும் ஆரம்பமாகும் என இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மே 20 முதல் 24, 2025 வரை விளையாட திட்டமிடப்பட்ட கவர்னர் கிண்ண கிரிக்கெட் தொடரும் சீரற்ற காலநிலையால் தடைப்பட்டது. எவ்வாறாயினும், குறித்த 2 தினங்களுக்குரிய போட்டிகள் மறுஅட்டவணை செய்யப்படும் எனவும், மே 25ஆம் திகதி முதல் போட்டிகள் மீண்டும் ஆரம்பமாகும் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<