இலங்கை கிரிக்கெட் சபை (SLC) உள்ளூர் கழகங்கள் இடையே ஒழுங்கு செய்திருக்கும் கழகங்களுக்கிடையிலான Tier ‘B’ T20 தொடர் இவ்வார இறுதியில் ஆரம்பமாகவுள்ளதுடன், அதற்கான போட்டி அட்டவணையையும் இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.
இம்முறை தொடரில் மொத்தமாக 12 கழகங்கள் போட்டிகளில் பங்கேற்கவிருப்பதோடு, இம்மாதம் 17ஆம் திகதி முதல் ஜுன் மாதம் 5ஆம் திகதி வரை இந்தத் தொடர் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ஜுன் முதலாம் திகதி நடைபெறவுள்ள காலிறுதிக்கு தகுதி பெறும். ஜுன் மாதம் 3ஆம் திகதி அரையிறுதிப் போட்டிகளும், ஜுன் மாதம் 5ஆம் திகதி இறுதிப்போட்டியும் நடைபெறவுள்ளது.
அத்துடன், லீக் போட்டிகள் அனைத்தும் கொழும்பு SSC மைதானம், மக்கொன சர்ரே மைதானம், இலங்கை இராணுவ மைதானம், கோல்ட்ஸ் கிரிக்கெட் கழக மைதானம், தொம்பெகொட கிரிக்கெட் மைதானம் உள்ளிட்ட 5 மைதானங்களில் நடைபெறும். அதேபோல, காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி நடைபெறும் மைதானங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இலங்கை கிரிக்கெட்டிற்கு ஆலோசக பயிற்சியாளராக வரும் டிம் பூன்
- மேஜர் கழக T20 தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது!
- அமெரிக்க கிரிக்கெட் அணிக்கு மீண்டும் பயிற்சியாளராகும் புபுது தசநாயக்க
அதேநேரம் தொடரில் பங்கெடுக்கும் அணிகள் A, B என இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறவிருப்பதோடு குழு A இல் மலாய் CC, SSC, நிகெம்போ யூத், செபஸ்டியனைட் C & AC, கோல் CC மற்றும் இலங்கை கடற்படை ஆகிய அணிகளும், குழு B இல் இலங்கை இராணுவம், லியோ CC, கெண்டி கஸ்டம்ஸ் SC, ராகம CC, யுனைடெட் சதெர்ன் SC மற்றும் மொறட்டுவ SC ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.
SLC மேஜர் கழக 3 நாட்கள் கிரிக்கெட் தொடரின் 2024/25 பதிப்பில், ஒவ்வொரு குழுவிலும் கடைசி இரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் Tier ‘B’ க்கு தராமிறக்கப்பட்டன. இதன் விளைவாக, இலங்கையின் பழமையான கழகங்களில் ஒன்றான SSC கழகத்துடன், ராகம கிரிக்கெட் கழகம், நிகொம்போ யூத் கழகம் மற்றும் கெண்டி கஸ்டம்ஸ் கிரிக்கெட் கழகம் ஆகிய நான்கு கழகங்களும் இந்த ஆண்டிலிருந்து Tier ‘B’ பிரிவில் போட்டியிடவுள்ளன. இந்த 4 கழகங்களும் தங்களது முதல்தர கழகம் என்ற அந்தஸ்தை மட்டுமல்லாமல், முதல்தர அங்கீகாரத்தையும் இழந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இறுதியாக நடைபெற்ற கழகங்களுக்கிடையிலான Tier ‘B’ T20 தொடரில் இலங்கை இராணுவ கிரிக்கெட் கழகத்தை 5 விக்கெட்டுகளால் வீழ்த்தி மலாய் கிரிக்கெட் கழகம் சாம்பியன் பட்டத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.
அணிகள் மற்றும் போட்டி அட்டவணை
Group A | Group B |
Malay CC | Army SC |
SSC | Leo CC |
Negombo CC | Kandy Custom SC |
Sebastianite C & AC | Ragama CC |
Galle CC | United Southern SC |
Navy SC | Moratuwa SC |
Date | Time | Match Name | Venue |
17th May 2025 | 9.45 AM – 12.55 PM | Malay CC vs Sebastianite C & AC | SSC |
2 PM – 5.10 PM | Galle CC vs Negombo CC | SSC | |
9.45 AM – 12.55 PM | Navy SC vs SSC | Colts | |
2 PM – 5.10 PM | Army SC vs Ragama CC | Colts | |
9.45 AM – 12.55 PM | United Southern SC vs Kandy Custom SC | Surrey | |
2 PM – 5.10 PM | Moratuwa SC vs Leo CC | Surrey | |
20th May 2025 | 9.45 AM – 12.55 PM | Malay CC vs Navy SC | Surrey |
2 PM – 5.10 PM | SSC vs Galle CC | Surrey | |
9.45 AM – 12.55 PM | Sebastianite C & AC vs Negombo CC | Colts | |
2 PM – 5.10 PM | Army SC vs Moratuwa SC | Colts | |
9.45 AM – 12.55 PM | Leo CC vs United Southern SC | Air Force | |
2 PM – 5.10 PM | Kandy Custom SC vs Ragama CC | Air Force | |
23rd May 2025 | 9.45 AM – 12.55 PM | Galle CC vs Malay CC | Dombagoda |
2 PM – 5.10 PM | Sebastianite C & AC vs Navy SC | Dombagoda | |
9.45 AM – 12.55 PM | Negombo CC vs SSC | Surrey | |
2 PM – 5.10 PM | United Southern SC vs Army SC | Surrey | |
9.45 AM – 12.55 PM | Ragama CC vs Moratuwa SC | Colts | |
2 PM – 5.10 PM | Kandy Custom SC vs Leo CC | Colts | |
26th May 2025 | 9.45 AM – 12.55 PM | Sebastianite C & AC vs Galle CC | SSC |
2 PM – 5.10 PM | Navy SC vs Negombo CC | SSC | |
9.45 AM – 12.55 PM | Army SC vs Leo CC | Surrey | |
2 PM – 5.10 PM | Malay CC vs SSC | Surrey | |
9.45 AM – 12.55 PM | Moratuwa SC vs Kandy Custom SC | Air Force | |
2 PM – 5.10 PM | Ragama CC vs United Southern SC | Air Force | |
29th May 2025 | 9.45 AM – 12.55 PM | Kandy Custom SC vs Army SC | Dombagoda |
2 PM – 5.10 PM | SSC vs Sebastianite C & AC | Dombagoda | |
9.45 AM – 12.55 PM | Galle CC vs Navy SC | Colts | |
2 PM – 5.10 PM | Negombo CC vs Malay CC | Colts | |
9.45 AM – 12.55 PM | Leo CC vs Ragama CC | Surrey | |
2 PM – 5.10 PM | United Southern SC vs Moratuwa SC | Surrey | |
1st June 2025 | 9.45 AM – 12.55 PM | Quarter Final 1 – A1 vs B4 | TBC |
2 PM – 5.10 PM | Quarter Final 2 – B1 vs A4 | TBC | |
9.45 AM – 12.55 PM | Quarter Final 3 – A2 vs B3 | TBC | |
2 PM – 5.10 PM | Quarter Final 4 – B2 vs A3 | TBC | |
3rd June 2025 | 9.45 AM – 12.55 PM | Semi Final 1
(QF 1 Winner vs QF 4 Winner) |
TBC |
2 PM – 5.10 PM | Semi Final 2
(QF 2 Winner vs QF 3 Winner) |
TBC | |
5th June 2025 | 9.45 AM – 12.55 PM | Final
SF 1 Winner vs SF 2 Winner |
TBC |
2 PM – 5.10 PM | Rain Reserve |
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<