வடக்கின் கால்பந்தில் வரலாறு படைத்தது வலைப்பாடு ஜெகா மீட்பர்

24
Jaffna Mullaiteevu Milo Cup

சுமார் 200 கழக அணிகள் பங்கெடுத்த யாழ், கிளிநொச்சி கழக அணிகளுக்கு இடையிலான மைலோ கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில், பிற்பாதியில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய வலைப்பாடு ஜெகா மீட்பர் அணி ஆனைக்கோட்டை யூனியன் அணியை 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி சம்பியன் கிண்ணத்தை தமதாக்கியுள்ளது.

இறுதியாக இடம்பெற்ற மைலோ கிண்ண தொடர்கள் நான்கில் மூன்று தொடர்களை நாவாந்துறை சென். மேரிஸ் அணியும், கடந்த வருடம் குருநகர் பாடும்மீன் அணியும் சம்பியன் கிண்ணத்தை தம்வசப்படுத்தியிருந்த நிலையில், இம்முறை ஐந்தாவது முறையாக இத்தொடர் இடம்பெற்றது.  

இறுதிப் போட்டி

நடப்புச் சம்பியன் அணியான குருநகர் பாடும்மீன் அணியினை காலிறுதிப் போட்டியிலும், அரையிறுதியில் சென் அன்ரனிஸ் அணியினையும் வெற்றிகொண்ட ஜெகா மீட்பர் அணியும், மறுபக்கம் காலிறுதியில் பலாலி விண்மீன் அணியையும், அரையிறுதியில் வேலணை ஐயனார் அணியையும் வெற்றிகொண்ட ஆனைக்கோட்டை யூனியன் அணியும் இறுதிப் போட்டியில் களம்கண்டிருந்தன.  

மைலோ கிண்ண இறுதியில் புதிய அணிகளாக மோதும் ஜெகா மீட்பர் -யூனியன்

ஐந்தாவது முறையாகவும் இடம்பெறும் மைலோ கிண்ண…

யாழின் ஒரு பிரம்மாண்டமான கால்பந்தாட்டத் தொடர், அதிலும் குறிப்பாக இரு இளைய அணிகளுக்கிடையிலான மோதல் என்பதனால் துறையப்பா அரங்கு நிறைந்த இரசிகர்களுடன் ஆரம்பமானது கிண்ணத்திற்கு தகுதியானவர்களை தெரிவு செய்வதற்கான இறுதிப் போட்டி.

காலிறுதி மற்றும் அரையிறுதிப் போட்டிகளில் நடுவரால் மஞ்சள் அட்டை காட்டப்பட்டமையின் காரணமாக இறுதிப் போட்டியில் யூனியன் அணியின் முக்கிய வீரர் மதிராஜ் பங்கெடுக்கவில்லை.

இவ்வாறான ஒரு நிலையிலும், முதலாவது நிமிடத்திலேயே யூனியன் அணியின் ஸ்ரீபன்ராஜ் உதைந்த பந்து ஜெகா மீட்பர் கோல் காப்பாளரின் கைகளில் சரணடைந்தது.  

4ஆவது நிமிடத்தில் ஜெகா மீட்பர் அணிக்கு கிடைத்த ப்ரீ  கிக்கினை கனிசியஸ் உதைய, இலங்கை இராணுவ அணிக்கு விளையாடும் வீரரான கிருஸ்துராஜ் கோலை நோக்கி பந்தை உதைந்தார். இதன்போது, பந்து கம்பத்தினை அண்மித்த வகையில் வெளியேறியது.

அடுத்த நிமிடத்திலேயே யூனியனின் தில்லை காந்தன் பந்தை கோலிற்கு உதைந்தபோதும், அது கம்பத்திற்கு மேலால் வெளியேறியது.

ஜெகா மீட்பரின் சுரேஸ்குமார் உதைந்த பந்தினை எதிரணியின் கோல்காப்பாளர் நழுவவிட்ட போதும், இறுதியில் அது தடுக்கப்பட்டது. ஸ்ரீபன்ராஜ் இடது பக்கத்திலிருந்து வழங்கிய பந்தினை சிறப்பாக நிறைவு செய்யத் தவறினார் தில்லைகாந்தன்.

15 ஆவது நிமிடத்தில் வலது கோணரிலிருந்து பெனால்டி எல்லையை நோக்கி லாவகமாக வழங்கிய பந்தினை விரைந்து செயற்பட்ட  யூனியன் வீரர் தனுஜன் கோலாக்கினார். இதன்மூலம் ஆட்டத்தில் யூனியன் அணி முன்னிலை பெற்றது.  

பின்னர், பெனால்டி எல்லைக்கு அருகிலிருந்து கிருஸ்துராஜ் கோலிற்கு உதைந்தபோதும், பந்து மயிரிழையில் கோலிற்கு மேலால் சென்றது.

இரு அணியினரும் தொடர்ந்தும் கோலிற்கு முயற்சித்தபோதும் யூனியனினது முன்னிலையுடன் நிறைவிற்கு வந்தது முதல் பாதி.

முதல் பாதி: யூனியன் விளையாட்டுக் கழகம் 1 – 0 ஜெகா மீட்பர் விளையாட்டுக் கழகம்

இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலேயே வலைப்பாடு அணியின் முன்கள வீரரும், அநுராதபுரம் சொலிட் கழக வீரருமான சஜீவன் சிறந்த வாய்ப்பினை வெளியே உதைந்து வீணடித்தார்.

32ஆவது நிமிடத்தில் யூனியன் வீரர் தனுஜனின் முயற்சி கோல் காப்பாளரால் தடுக்கப்பட்டது.

சம்பியன் கிண்ணத்திற்காக கோல் மழை பொழிந்த புனித பத்திரிசியார் கல்லூரி

ஐந்தாவது முறையாக இடம்பெறும் மைலோ கிண்ண போட்டியில் 14..

34ஆவது நிமிடத்தில் வலது பக்க எல்லைக் கோட்டிற்கு அருகிலிருந்து கோலினை நோக்கி கிருஸ்துராஜ் உதைய, பந்து கம்பத்தில் பட்டு கோலாக மாறியது.

கோல் எண்ணிக்கை சமநிலையடைய, போட்டி மேலும் விறுவிறுப்பை அடைந்தது. இந்நிலையில், 45ஆவது நிமிடத்தில் குலேந்திரன் மத்திய கோட்டுப் பகுதியிலிருந்து நேரடியாக கோல் பெற முயற்சித்த போதும் பந்து கோலிற்கு மேலால் சென்றது.

ஆட்டத்தின் 48ஆவது நிமிடத்தில் சஜிவன் வழங்கிய பந்தினை கோலாக்கினார் கிருஸ்துராஜ். இருந்தபோதும் அது ஓப் சைட் என நடுவரால் அறிவிக்கப்பட்டது.

பின்னர் 53ஆவது நிமிடத்தில் கனிசியஸ் உதைந்த ப்ரீ கிக்கினை கோலாக்கினார் ஜெபராஜ்.  

பதிலுக்கு யூனியனின் மயூரன் சிறந்த முயற்சியினை மேற்கொண்ட போதும் எதிரணி கோல்காப்பாளர் அதனைத் தடுத்தார்.

போட்டிநேர நிறைவில், இரண்டாவது பாதியின் சிறப்பாட்டத்தின் மூலம் 5ஆவது மைலோ கிண்ணத்தினை தம்வசப்படுத்தியது வலைப்பாடு ஜெகா மீட்பர் அணி.

இளைய வீரர்களை உள்ளடக்கிய இளம் அணிகள் இம்முறை தொடரில் சோபித்திருப்பது மிகவும் சிறப்பான அம்சமாகும்.

முழு நேரம்: யூனியன் விளையாட்டுக் கழகம் 1 – 2 ஜெகா மீட்பர் விளையாட்டுக் கழகம்

கோல் பெற்றவர்கள்

யூனியன் விளையாட்டுக் கழகம்அன்ரனி இருதயராஜா தனுஜன் 15′

ஜெகா மீட்பர் விளையாட்டுக் கழகம்அல்பொன்ஸ் கிருஸ்துராஜ்  34’, அன்ரன் ஜெபராஜ் 53′

மூன்றாம் இடத்திற்கான போட்டி

வேலணை ஐயனார், பாசையூர் சென். அன்ரனிஸ் அணிகள் மோதியிருந்த இப்போட்டியில் முதலாவது நிமிடத்தில் பெனால்டி எலையினுள் ஐயாரின் ஜனோச் கைகளால் பந்தை முட்டியமையால் கிடைத்த பெனால்டியை கோலாக மாற்றினார் சென். அன்ரனிஸ் வீரர் கலிஸ்ரர்.

ஜேர்மனியில் கால்பந்து வீரராக ஜொலிக்கும் இலங்கை வீரர் வசீமின் கனவு நனவாகுமா?

விளையாட்டுக்கு இன, மதம், மொழி வேறுபாடு இல்லை…

பதிலுக்கு போட்டியின் 5ஆவது நிமிடத்தில் ஐயனாரின் நிறோசன் கோலொன்றினைப் போட்டு கோல் கணக்கை சமன் செய்தார்.

தொடர்ந்தும் போட்டியினை ஐயனார் அணி கட்டுப்படுத்திய போதும் இரு அணிகளாலும் கோலேதும் பெற முடியாது போக சமநிலையில் நிறைவடைந்தது போட்டி.

தொடர்ந்து இடம்பெற்ற சமநிலை தவிர்ப்பு (பெனால்டி) உதையில் 04-01 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று மூன்றாவது இடத்தினைப் பெற்றது சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழகம்.

கோல் பெற்றவர்கள்

சென் அன்ரனிஸ் விளையாட்டுக் கழகம் – மௌரின் கலிஸ்ரர் 1’

வேலணை ஐயனார் விளையாட்டுக் கழகம் – வடிவேல் நிறோசன் 5′

5ஆவது மைலோ கிண்ண போட்டி விருதுகள்

சம்பியன் அணி – வலைப்பாடு ஜெகா மீட்பர் விளையாட்டுக் கழகம்
இரண்டாவது இடம் – ஆனைக்கோட்டை யூனியன் விளையாட்டுக் கழகம்
மூன்றாவது இடம் – பாசையூர் சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழகம்
நான்காவது இடம் – வேலணை ஐயனார் விளையாட்டுக் கழகம்
கனவான் அணி (Fair Play) – நாவாந்துறை சென் நீக்கிலஸ் விளையாட்டுக் கழகம்
இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் – அல்போன்ஸ் கிருஸ்துராஜ் – வலைப்பாடு ஜெகா மீட்பர் விளையாட்டுக் கழகம்
சிறந்த கோல் காப்பாளர் – ஜெபராஜன் (ஜெர்லின்) வலைப்பாடு ஜெகா மீட்பர் விளையாட்டுக் கழகம்
தொடர் நாயகன் – அன்ரனி இருதஜராஜா தனுஜன் – ஆனைக்கோட்டை யூனியன் விளையாட்டுக் கழகம்