தொடர் வெற்றிகளை குவிக்கும் ஆவரங்கால் கிங் பைட்டர்ஸ்

144
JVL

ஜப்னா வொலிபோல் லீக்கில் சுற்றுத் தொடரில் (Jaffna Volleyball League) கடந்த வாரங்களிலும் நடைபெற்ற இரண்டு போட்டிகளிளும் அபார வெற்றியை பதிவுசெய்த ஆவரங்கால் கிங் பைட்டர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்துக்கொண்டது. 

ஆவரங்கால் கிங் பைட்டர்ஸ் எதிர் அரியாலை கில்லாடிகள் 100

கடந்த சனிக்கிழமை (11) நடைபெற்ற மூன்றாம் வாரத்திற்கான போட்டியில், அரியாலை கில்லாடிகள் அணியை எதிர்கொண்ட ஆவரங்கால் கிங் பைட்டர்ஸ் அணி 3-0 என இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது.

விறுவிறுப்புடன் ஆரம்பித்த ஜப்னா வொலிபோல் லீக்!

போட்டியின் முதல் செட்டை 25-17 என வெற்றிக்கொண்ட ஆவரங்கால் கிங் பைட்டர்ஸ் அணி, அடுத்த இரண்டு செட்களையும் 25-20 மற்றும் 25-21 என கைப்பற்றி போட்டியில் வெற்றியை பதிவுசெய்தது.

சென்ட்ரல் ஸ்பைக்கர்ஸ் அச்சுவேலி எதிர் மட்டுவில் ஸ்பைக்கர்ஸ் 

மட்டுவில் ஸ்பைக்கர்ஸ் அணியை எதிர்கொண்ட சென்ட்ரல் ஸ்பைக்கர்ஸ் அச்சுவேலி அணி 3-1 என்ற செட்கள் கணக்கில் வெற்றியை பதிவுசெய்தது. 

போட்டியின் முதல் இரண்டு செட்களையும் 25-23 மற்றும் 25-22 என சென்ட்ரல் ஸ்பைக்கர்ஸ் அணி கைப்பற்ற, மூன்றாவது செட்டை 25-21 என மட்டுவில் ஸ்பைக்கர்ஸ் அணி கைப்பற்றியது. 

எனினும் போட்டியின் நான்காவது செட்டை 25-20 என கைப்பற்றிய சென்ட்ரல் ஸ்பைக்கர்ஸ் அணி போட்டியின் வெற்றியை தக்கவைத்துக்கொண்டது.

ரைசிங் ஐலண்ட்ஸ் எதிர் நீர்வை பசங்க

ரைசிங் ஐலண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், 3-1 என்ற செட்கள் கணக்கில் நீர்வை பசங்க அணி வெற்றிக்கொண்டது. 

ஆட்டத்தின் முதல் செட்டினை 25-19 என நீர்வை பசங்க அணி வெற்றிக்கொண்ட போதிலும், இரண்டாவது செட்டை 25-15 என ரைசிங் ஐலண்ட்ஸ் அணி கைப்பற்றியது. எனினும் அடுத்த இரண்டு செட்களையும் 25-13 மற்றும் 26-24 என கைப்பற்றிய ரைசிங் ஐலண்ட்ஸ் அணி போட்டியின் வெற்றியை தக்கவைத்துக்கொண்டது. 

சென்ட்ரல் ஸ்பைக்கர்ஸ் அச்சுவேலி எதிர் வல்லையூர் வொலி வொரியர்ஸ்

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற முதல் போட்டியில் வெற்றிபெற்ற சென்ட்ரல் ஸ்பைக்கர்ஸ் அச்சுவேலி அணி, அடுத்து நடைபெற்ற வல்லையூர் வொலி வொரியர்ஸ் அணிக்கு எதிராக 3-1 என வெற்றிபெற்று, புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது. 

போட்டியின் முதல் செட்டை 25-15 என மிக இலகுவாக வல்லையூர் வொலி வொரியர்ஸ் அணி வெற்றியீட்டி சிறந்த ஆரம்பத்தை பெற்றது. எனினும், அடுத்த செட்களில் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்திய சென்ட்ரல் ஸ்பைக்கர்ஸ் அணி 25-20, 25-21 மற்றும் 25-19 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியை பெற்றுக்கொண்டது.

ரைசிங் ஐலண்ட்ஸ் எதிர் ஆவரங்கால் கிங் பைட்டர்ஸ்

ரைசிங் ஐலண்ட்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய ஆவரங்கால் கிங் பைட்டர்ஸ் அணி கடந்த வாரத்தின் இரண்டாவது வெற்றியையும் பதிவுசெய்தது. 

முதல் செட்டை 25-17 என வெற்றியுடன் ஆரம்பித்த ஆவரங்கால் அணி, இரண்டாவது செட்டை 22-25 என இழந்தது. போட்டி 1-1 என சமனிலையாகிய போதும், அடுத்தடுத்த செட்களை 25-18 மற்றும் 25-20 என கைப்பற்றி போட்டியில் வெற்றியை தக்கவைத்தது. 

சங்கானை மக்களொன்றிய செலஞ்சர்ஸ் எதிர் மட்டுவில் ஸ்பைக்கர்ஸ்

சங்கானை மக்களொன்றி செலஞ்சர்ஸ் அணி, மட்டுவில் ஸ்பைக்கர்ஸ் அணியை எதிர்கொண்டு 3-1 என்ற செட்கள் கணக்கில் வெற்றியை பதிவுசெய்தது.

ஆட்டத்தின் முதல் செட்டை 15-25 என சங்கானை அணி இழந்திருந்த போதும், அடுத்த மூன்று செட்களையும் முறையே 25-16, 27-25 மற்றும் 25-20 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றி, போட்டியில் வெற்றியை பதிவுசெய்தது.

ஸ்புட்னிக் நோர்த் போல்ஸ் எதிர் நீர்வை பசங்க

நீர்வை பசங்க அணியை எதிர்கொண்ட ஸ்புட்னிக் நோர்த் போல்ஸ் அணி, தொடரில் தங்களுடைய 4வது வெற்றியை பதிவுசெய்தது.

கொவிட்-19 தொற்று காரணமாக பிற்போடப்பட்ட ஜப்னா வொலிபோல் லீக்

போட்டியில் முதல் இரண்டு செட்களையும் 25-23 மற்றும் 29-27 என ஸ்புட்னிக் நோர்த் போல்ஸ் அணி கைப்பற்ற, மூன்றாவது செட்டை 25-17 என நீர்வை பசங்க அணி கைப்பற்றியது. எனினும், அடுத்த செட்டை 25-23 என கைப்பற்றிய ஸ்புட்னிக் நோர்த் போல்ஸ் அணி போட்டியின் வெற்றியை பதிவுசெய்தது. 

இதேவேளை, கடந்த வாரத்தின் போட்டி முடிவுகளின் அடிப்படையில், தோல்வியின்றி பயணிக்கும் ஆவரங்கால் கிங் பைட்டர்ஸ் அணி புள்ளிப்பட்டியிலில் 14 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துக்கொண்டுள்ளது. இரண்டாவது இடத்தை 11 புள்ளிகளுடன் ஸ்புட்னிக்  நோர்த் போல்ஸ் அணி பிடித்துக்கொண்டுள்ளதுடன், மூன்றாம் மற்றும் நான்காவது இடங்களை முறையே சென்ட்ரஸ் பைக்கர்ஸ் அச்சுவேலி மற்றும் ரைசிங் ஐலண்ட்ஸ் அணிகள் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க…