ஒரு வருட தடைக்குள்ளான மொஹமட் ஷெஹ்சாத்

541

அண்மையில் நிறைவுக்கு வந்த உலகக்கிண்ண தொடரிலிருந்து உபாதை காரணமாக இடைநடுவில் வெளியேறிய ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான மொஹமட் ஷெஹ்சாத் தொடர்ச்சியாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையுடன் முரண்பாடுகளில் ஈடுபட்டு வந்தார். 

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையினுடைய நடத்தை விதிமுறைகளை மொஹமட் ஷெஹ்சாத் மீறியுள்ளார் என்ற குற்றச்சாட்டில் அவருக்கு 12 மாதங்கள் (1 வருடம்) அனைத்து விதமான கிரிக்கெட் விளையாட்டிலிருந்தும் விளையாடுவதற்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையினால் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஆப்கான் கிரிக்கெட் ஒப்பந்தத்திலிருந்து மொஹமட் ஷெசாத் அதிரடியாக நீக்கம்

ஆப்கான் கிரிக்கெட் சபையின் ஒழுங்கு நடத்தை விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில்…

32 வயதுடைய விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான மொஹமட் ஷெஹ்சாத் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களுள் ஒருவராவார். 2009 ஆம் ஆண்டு முதல் முதலில் ஒருநாள் போட்டி மூலமாக சர்வதேச அரங்கிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் தனது அதிரடி துடுப்பாட்ட திறமையின் மூலம் மூவகையான கிரிக்கெட் விளையாட்டிலும் தடம் பதித்தார். 

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியில் அதிகமாக உபாதை பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்டுவரும் வீரர்களில் இவரும் ஒருவராக காணப்பட்டார்.  மேலும் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் போட்டியின் போது ஊக்கமருந்து பாவித்தார் என்ற காரணத்தினால் சில காலம் தடைக்கும் உள்ளானார்.

இது இவ்வாறு இருக்கின்ற நிலையில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற 12 ஆவது ஐ.சி.சி உலகக்கிண்ண தொடருக்கு முன்னராக நடைபெற்ற பாகிஸ்தான் அணியுடனான பயிற்சிப்போட்டியின் போது முழங்காலில் உபாதை ஏற்பட்டதன் காரணமாக போட்டியின் இடைநடுவில் வெளியேறியிருந்தார். 

இருந்தாலும் அதன் பின்னர் நடைபெற்ற உலகக்கிண்ண தொடரின் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுடன் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில் விளையாடினார். இந்நிலையில் திடீரென ஒரு அறிவிப்பு வெளியானது. மொஹமட் ஷெஹ்சாட்டிற்கு முழங்காலில் உபாதை ஏற்பட்டுள்ளதன் காரணமாக உலகக்கிண்ண குழாமிலிருந்து வெளியேற்றப்படுகின்றார் என்ற செய்தி வெளியானது. அதன் தொடர்ச்சியாக ஷெஹ்சாட்டிற்கு பதிலீடாக மாற்று வீரரையும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அறிவித்தது.

வனிந்து ஹசரங்க சகலதுறையில் அசத்த இலங்கை வளர்ந்துவரும் அணிக்கு அபார வெற்றி

இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணியானது இருதரப்பு தொடருக்காக…

இதன் பின்னரே ஷெஹ்சாட் சமூக வலைத்தளங்கள் மூலமாக ஆப்கான் கிரிக்கெட் சபை மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அனைவர் மீதும் அவர் மீதான கவனத்தை ஈர்க்கச்செய்தார். குறித்த குற்றச்சாட்டுக்களை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைமை நிறைவேற்று அதிகாரியான அஸதுல்லாஹ் கான் மறுத்திருந்தார். இவ்வாறான நிலையில் உலகக்கிண்ண தொடர் நிறைவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையானது அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. 

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையினுடைய ஒப்பந்தத்திலிருந்து உடன் அமுலுக்குவரும் வகையில் மொஹமட் ஷெஹ்சாத் நீக்கப்படுகின்றார் என்ற அறிவிப்புடன் சேர்த்து விரைவில் அவருக்கான தண்டனை குறித்தும் அறிவிக்கப்படும் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்திருந்தது. 

இந்நிலையிலேயே இவ்வாறு 12 மாத கால தடை மொஹமட் ஷெஹ்சாத் மீது விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளதாவது, ”ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையினுடைய ஒழுங்கு விதிமுறைகளையும், ஒரு வீரர் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளையும் மொஹமட் ஷெஹ்சாத் மீறியுள்ளார்.”

”ஒரு வீரர் நாட்டை விட்டு வெளியாகுவதற்கு முன்னர் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையினுடைய அனுமதியை பெற வேண்டும் என்ற விடயத்தை மீறி அவர் பல முறைகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். மேலும் அவர் பயிற்சி என்ற நோக்கத்துக்காக வெளிநாடு சென்றிருந்தால் அவ்வாறு செல்ல வேண்டிய எந்த அவசியமும் இல்லை. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையானது வீரர்களுக்கு தேவையான அனைத்து பயிற்சி வசதிகளையும் சொந்த நாட்டிலேயே ஏற்படுத்திக் கொடுத்துள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.  

சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறை மாற்று வீரர்

ஜொப்ரா ஆர்ச்சரின் பௌன்சர் பந்து தாக்கியதில் மூளையில் அதிர்வு…

மேலும் மொஹமட் ஷெஹ்சாத் கிரிக்கெட் சபையினுடைய அனுமதி இல்லாமல் பல வெளிநாட்டு லீக் தொடர்களில் விளையாடியிருந்தார். அத்துடன் பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் வசித்துவந்த ஷெஹ்சாத் அங்கு நடைபெற்ற உள்ளூ0ர் போட்டியிலும் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<