தோல்வி காணாத பயணத்தில் லிவர்பூல்: மன்செஸ்டர் யுனைடட் ஏமாற்றம்

49

இங்கிலாந்து ப்ரீமியர் லீக் தொடரின் முக்கிய மூன்று போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு… 

லிவர்பூல் எதிர் செல்சி

செல்சிக்கு எதிராக ஸ்டம்போர்ட் பிரிட்ஜில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டிய லிவர்பூல் இம்முறை ப்ரீமியர் லீக்கில் இதுவரை ஆடிய ஆறு போட்டிகளிலும் வெற்றியை பதிவு செய்து கொண்டது.  

மெஸ்ஸி திரும்பியபோதும் அறிமுக அணியிடம் பார்சிலோனா தோல்வி

ஸ்பெயின் லா லிகா, இத்தாலி சிரி A தொடர்களின் …….

ப்ரீ கிக் மூலம் டிரென்ட் அலெக்சாண்டர் ஆர்னோல்ட் மற்றும் ரொபர்டோ பெர்மினோ தலையால் பெற்ற கோல்கள் மூலம் முதல் பாதியில் 2-0 என முன்னிலை பெற்ற லிவர்பூல் இரண்டாவது பாதியில் தனது முன்னிலையை காத்துக்கொண்டது.    

எனினும், செல்சி அணி சார்பில் செசர் அஸ்பிலிகுடா பெற்ற கோல் வீடியோ உதவி நடுவர் மூலம் ஓப் சைட் என நிராகரிக்கப்பட்டது. நிகோலோ கன்டே 71 ஆவது நிமிடத்தில் செல்சிக்காக கோல் ஒன்றை பெற்றபோதும் அந்த அணியால் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

இதன்போது 14 ஆவது நிமிடத்தில் மொஹமட் சலாஹ் ப்ரீ கிக் மூலம் பந்தை அலெக்சாண்டர் ஆர்னோல்டிடம் தட்டிவிட அவர் வேகமாக பந்தை வலைக்குள் செலுத்தினார்.   

இந்த வெற்றியுடன் லிவர்பூல் அணி ப்ரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் மன்செஸ்டர் சிட்டி யை விடவும் 5 புள்ளிகள் இடைவெளியுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.  

வெஸ்ட் ஹாம் யுனைடட் எதிர் மன்செஸ்டர் யுனைடட்

ப்ரீமியர் லீக் தொடரில் தொடர்ந்து ஏமாற்றம் கண்டு வரும் மன்செஸ்டர் யுனைடட் அணி வெஸ்ட் ஹாமுக்கு எதிரான போட்டியிலும் 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்தது

தனது சொந்த மைதானமான லண்டன் அரங்கில் நடைபெற்ற போட்டியின் முதல் பாதி ஆட்டம் முடிவுறும் நேரத்தில் அன்ட்ரி யார்மொலன்கோ மூலம் வெஸ்ட் ஹாம் முதல் கோலை பெற்றது. பெனால்டி பெட்டிக்குள் கச்சிதமான இடத்தில் இருந்த யார்மொலன்கோவுக்கு பெலிப்போ அண்டர்சன் பந்தை பரிமாற்ற அவர் தனது இடது காலால் பந்தை வலைக்குள் தட்டிவிட்டார்.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் மன்செஸ்டர் யுனைடட்டுக்கு பொன்னான வாய்ப்பு ஒன்று கிட்டியது. அன்ரியஸ் பெரைரா பந்தை கொடுத்தபோது ஜுவான் மாடா நெருக்கமான தூரத்தில் இருந்தார். ஆனால் அவர் அந்தச் சந்தர்ப்பத்தை கோலாக மாற்ற தவறினார்.  

இந்நிலையில் மார்கஸ் ரஷ்போர்ட் காயமடைந்து வெளியேறியது மன்செஸ்டர் யுனைடட்டிற்கு மற்றொரு பின்னடைவாக அமைந்தது. ஏற்கனவே அந்த அணியின் மத்தியகள வீரர் போல் பொக்பா, முன்கள வீரர் அன்தோனியோ மார்ஷியல் ஆகியோர் உபாதைக்கு உள்ளாகியுள்ளனர்.   

இந்நிலையில் 84 ஆவது நிமிடத்தில் ஆரோன் கிரெஸ்வெல் பிரீ கிக் மூலம் அபார கோல் ஒன்றை பெற்று வெஸ்ட் ஹாமின் வெற்றியை உறுதி செய்தார்

செல்சியிடம் 4-0 என்ற கோல் வித்தியாசத்தில் சந்தித்த தோல்வியுடன் இந்த பருவத்தை ஆரம்பித்த யுனைடட் அணி ஏற்கனவே இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.  

ஆர்சனல் எதிர் அஸ்டன் வில்லா

பீர் எம்ரிக் அவுபமயங் 84 ஆவது நிமிடத்தில் பெற்ற கோல் மூலம் 10 வீரர்களுடன் இரண்டாவது பாதியில் ஆடிய ஆர்சனல் அணி அஸ்டன் வில்லாவுக்கு எதிராக 3-2 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.    

எடிஹாட் அரங்கில் மன்செஸ்டர் சிட்டியின் கோல் மழை

இங்கிலாந்து ப்ரீமியர் லீக் தொடரின் இரண்டு முக்கிய ……..

எமிரேட் அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் வருகை அணியான வில்லா 20 ஆவது நிமிடத்தில் வைத்து கோல் புகுத்தியது. அன்வர் எல் காசி பரிமாற்றிய பந்தை ஜோன் மக்கின் கோலாக மாற்றினார்

இந்நிலையில் அயின்ஸ் அயிட்லான்ட் நீல்ஸ் இரண்டாவது மஞ்சள் அட்டையை பெற்றதால் ஆர்சனல் அணிக்கு 41 ஆவது நிமிடம் தொடக்கம் 10 வீரர்களுடன் ஆட வேண்டி ஏற்பட்டது

எனினும், 59 ஆவது நிமிடத்தில் மட்டியோ குவன்டுசு பெனல்டி பெட்டிக்குள் வீழ்த்தப்பட்டதால் கிடைத்த பெனால்டி கிக்கை நிகொலஸ் பெபே கோலாக மாற்றியதன் மூலம் போட்டி 1-1 என சமநிலை ஆனது.  

எனினும், இரண்டு நிமிடங்கள் கழித்து வெஸ்லி பெற்ற கோல் மூலம் வில்லா மீண்டும் போட்டியில் முன்னிலை பெற்றது.  

81 ஆவது நமிடத்தில் குவன்டுசு கடத்திய பந்தை வில்லா பின்கள வீரர்களால் தடுக்க முடியாமல் போக கோல்கம்பத்தின் அருகில் இருந்த கலியும் சம்பர்ஸ் அதனை கோலாக மாற்றியதால் ஆர்சனல் மீண்டும் ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டுவந்தது.   

இதனிடையே அவுபமயங் கடைசி நேரத்தில் பரபரப்பு கோல் ஒன்றை பெற்றதன் மூலம் ஆர்சனல் இந்தப் பருவத்தில் தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்துகொண்டது

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<