இங்கிலாந்து செல்லும் பாகிஸ்தான் குழாம்கள் அறிவிப்பு

Pakistan Cricket

111

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20I (மே.தீவுகள் மற்றும் இங்கிலாந்து) தொடர்களுக்கான பாகிஸ்தான் குழாம்கள் இன்று (04) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மே.தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள T20I குழாத்தில், புதுமுக விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் அஷாம் கான் அழைக்கப்பட்டுள்ளதுடன், அனுப சுழல் பந்துவீச்சாளர் இமாட் வசீமும் இணைக்கப்பட்டுள்ளார்.

உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இலங்கை வீரர்கள்

இதேநேரம், அறிவிக்கப்பட்டுள்ள டெஸ்ட் குழாத்தில் மொஹமட் அபாஸ் மற்றும் இளம் வேகப்பந்துவீச்சாளர் நஸீம் ஷா ஆகியோர் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளனர். நஸீம் ஷா மற்றும் மொஹமட் அபாஸ் ஆகியோர் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து நீக்கப்பட்டிருந்தனர். 

இவர்களுக்கு அடுத்தப்படியாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில், உபாதை காரணமாக நீக்கப்பட்டிருந்த சுழல் பந்துவீச்சாளர் யசீர் ஷா, இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இடம்பிடித்துள்ளார். இவர் உபாதையிலிருந்து குணமடைந்து வருவதை கருத்திற்கொண்டு இணைக்கப்பட்டிருக்கிறார்.

இவர்களுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்ட நவுமான் அலி, இடதுகை சுழல் பந்துவீச்சாளர் ஷாஹிட் மஹ்மூட் மற்றும் வலது பக்க சுழல் பந்துவீச்சாளர் சஜிட் கான் ஆகியோர் தொடர்ந்தும், தங்களுடைய இடங்களை தக்கவைத்துள்ளனர்.

இதேவேளை, ஒருநாள் குழாத்தில் அனுபவ துடுப்பாட்ட வீரர் ஹரிஸ் சொஹைல் இடம்பிடித்துள்ளதுடன். டபிஸ் கான், சல்மான் அலி ஆகியோர் இங்கிலாந்து தொடருக்கான ஒருநாள் குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் அணியானது, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 T20I மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளதுடன், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடர் ஜூலை 8 முதல் 20ம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் குழாம்கள்

ஒருநாள் குழாம் – பாபர் அஷாம் (தலைவர்), சதாப் கான், அப்துல்லாஹ் சபீக், பஹீம் அஸ்ரப், பகர் ஷமான், ஹய்டர் அலி, ஹரிஸ் ரஹூப், ஹரிஸ் சொஹைல், இமாம்-உல்-ஹக், மொஹமட் ஹஸ்னைன், மொஹமட் நவாஷ், மொஹமட் ரிஸ்வான், சல்மான் அலி, சர்பராஸ் அஹமட், சவுத் ஷகீல், ஷஹீன் ஷா அப்ரிடி, உஸ்மான் காதிர்

T20I குழாம் (இங்கிலாந்து, மே.தீவுகள்) –பாபர் அஷாம் (தலைவர்), சதாப் கான், அர்ஷாட் இக்பால், அஷாம் கான், பஹீம் அஸ்ரப், பகர் ஷமான், ஹய்டர் அலி, ஹரிஸ் ரஹூப், இமாட் வசீம், மொஹமட் அபீஸ், மொஹமட் ஹஸ்னைன், மொஹமட் நவாஸ், மொஹமட் ரிஸ்வான், மொஹமட் வசீம், சர்பராஸ் அஹமட், ஷஹீன் ஷா அப்ரிடி, சர்ஜீல் கான், உஸ்மான் காதீர்

டெஸ்ட் குழாம் – பாபர் அஷாம் (தலைவர்), மொஹமட் ரிஸ்வான், அப்துல்லாஹ் சபீக், அபிட் அலி, அஷார் அலி, பஹீம் அஸ்ரப், பவட் அலாம், ஹரிஸ் ரஹூப், ஹசன் அலி, இம்ரான் பட், மொஹமட் அபாஸ், மொஹமட் நவாஸ், நசீம் ஷா, நவுமான் அலி, சஜீட் கான், சர்பராஸ் அஹமட், சவுத் ஷகீல், ஷஹீன் ஷா அப்ரிடி, ஷனவாஸ் தஹானி, யசீர் ஷா, ஷயீட் மஹ்மூட்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…