மெஸ்ஸி திரும்பியபோதும் அறிமுக அணியிடம் பார்சிலோனா தோல்வி

140
International Football Roundup

ஸ்பெயின் லா லிகா, இத்தாலி சிரி A தொடர்களின் வார இறுதியின் முக்கிய சில போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு,

பார்சிலோனா எதிர் கிரனடா

லா லிகா தொடருக்கு முன்னேற்றம் கண்ட கிரனடா அணி நடப்புக் சம்பியன் பார்சிலோனாவை 2-0 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி அந்தத் தொடரின் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை ஆக்கிரமித்துள்ளது

எடிஹாட் அரங்கில் மன்செஸ்டர் சிட்டியின் கோல் மழை

இங்கிலாந்து ப்ரீமியர் லீக் தொடரின் இரண்டு முக்கிய போட்டிகள் சனிக்கிழமை (21)..

இந்த முடிவுடன் பார்சிலோனா கடந்த 25 ஆண்டுகளில் லா லிகாவில் தனது மோசமான ஆரம்பத்தை பெற்றுள்ளது. பார்சிலோனா இதுவரை ஆடிய 5 போட்டிகளில் 2 இல் மாத்திரமே வென்று 7 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.   

தனது சொந்த மைதானமான லொஸ் கர்மனஸில் நடைபெற்ற போட்டியின் இரண்டாவது நிமிடத்திலேயே ரமோன் அசீஸ் குறுகிய தூரத்தில் இருந்து தலையால் முட்டி கோல் ஒன்றை பெற்று பார்சிலோனாவுக்கு அதிர்ச்சி கொடுத்தார்

உபாதையில் இருந்து மீண்டிருக்கும் நட்சத்திர வீரர் மெஸ்ஸி தனது வழக்கமான ஆட்டத்திற்கு திரும்புவதற்கு போராடும் நிலையில் இரண்டாவது பாதியில் இந்த பருவத்தில் முதல்முறை மைதனாத்திற்கு திரும்பினார்

எவ்வாறாயினும் பெனால்டி பகுதியில் பார்சிலோனா மத்தியகள வீரர் ஆர்டுரோ விடாலின் கைகளில் பந்து பட்டதை அடுத்து கிடைத்த பெனால்டி கிக்கை அல்வாரோ வெடிலோ கோலாக மாற்றி 66 ஆவது நிமிடத்தில் கிரனடாவை 2-0 என முன்னிலை பெறச் செய்தார்.  

ஜுவன்டஸ் எதிர் ஹெல்லாஸ் வெரோனா

ஆரோன் ரம்சி ஜுவன்டஸ் அணிக்காக தனது முதல் போட்டியில் பெற்ற கோல் மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பெனால்டி கோல் மூலம் ஹெல்லாஸ் வெரோனா அணிக்கு எதிராக 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய ஜுவன்டஸ் சிரி A தொடரில் இரண்டாவது இடத்திற்கு முன்னெற்றம் கண்டது.  

போட்டியின் 20ஆவது நிமிடத்தில் பின்டோ வெலோசோ சற்றுத் தொலைவில் இருந்து உதைத்து பந்தை வலைக்கு செலுத்தியதன் மூலம் வெரோனா அணியால் முன்னிலை பெற முடிந்தது.  

எனினும் 11 நிமிடங்கள் கழித்து ரம்சி பதில் கோல் திருப்பினார். இந்நிலையில் இரண்டாவது பாதியின் ஆரம்பத்தில் கிடைத்த பெனால்டியை ரொனால்டோ கோலாக மாற்றி ஜுவன்டஸின் வெற்றியை உறுதி செய்தார்

பயேர்ன் முனிச் இலகு வெற்றி

ஜெர்மனியின் புன்டஸ்லிகா தொடரில் சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் நடப்புச் சம்பியன் பயேர்ன் முனிச் அணி கோல்ன் அணியை 4-0 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தியது

பங்களாதேஷிடம் தோல்வியடைந்த இலங்கை இளையோர் கால்பந்து அணி

நேபாளத்தில் இடம்பெறும் 18 வயதுக்கு உட்பட்ட தெற்காசிய கால்பந்து சம்மேளன கிண்ண..

ரொபர்ட் லோவன்ஸ்கி 3 மற்றும் 48 ஆவது நிமிடங்களில் இரட்டை கோல் புகுத்திய நிலையில் கோட்டின்ஹோ 62 ஆவது நிமிடத்தில் பெனால்டி மூலமும், இவான் பெரசிக் கோனர் பக்கமாக இருந்து தாழ்வாக உதைத்து 73 ஆவது நிமிடத்தில் மற்றொரு கோலை பெற்று பயேர்ன் முனிச்சின் வெற்றியை உறுதி செய்தனர்

இதேவோளை லா லிகாவில் நடைபெற்ற அட்லெடிகோ மெட்ரிட் மற்றும் செல்டா விகோ அணிகளுக்கு இடையிலான போட்டி கோலின்றி சமநிலையில் முடிந்தது. அட்லெடிகோ பல கோல் வாய்ப்புகளை பெற்றபோதும் எதிரணி கோல் காப்பாளர் அவைகளை அபாரமாக தடுத்தமை குறிப்பிடத்தக்கது

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<