எடிஹாட் அரங்கில் மன்செஸ்டர் சிட்டியின் கோல் மழை

67

இங்கிலாந்து ப்ரீமியர் லீக் தொடரின் இரண்டு முக்கிய போட்டிகள் சனிக்கிழமை (21) நடைபெற்றன. அந்த போட்டிகளின் விபரம் வருமாறு,

மன்செஸ்டர் சிட்டி எதிர் வட்போர்ட்

18 நிமிடங்களுக்குள் ஐந்து கோல்களை புகுத்திய மன்செஸ்டர் சிட்டி வட்போர்டுக்கு எதிரான போட்டியை 8-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டி ப்ரீமியர் லீக் வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துகொண்டது.

சம்பியன்ஸ் லீக்கை தோல்வியுடன் ஆரம்பித்த லிவர்பூல், செல்சி: போராடிய பார்சிலோனா

இந்த பருவகாலத்திற்கான ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டிகள்…

கடந்த வார இறுதியில் நோர்விச் சிட்டியிடம் தோல்வியை சந்தித்த நடப்புச் சம்பியன் மன்செஸ்டர் சிட்டி தனது சொந்த மைதானமான எட்டிஹாட் அரங்கில் ப்ரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் வட்போட்டை எதிர்கொண்டது.

போட்டியின் முதல் நிமிடத்தில் கெவின் டி ப்ருயின் பரிமாற்றிய பந்தை பெற்ற டேவிட் சில்வா அதனை கோலாக மாற்ற 6 நிமிடங்களின் பின் செர்கியோ அகுவேரா தனது 100 ஆவது ப்ரீமியர் லீக் கோலை பெற்று மன்செஸ்டர் சிட்டியை 2-0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை பெறச் செய்தார்.

இத்தோடு நிற்காத மன்செஸ்டர் சிட்டி 12 ஆவது நிமிடத்தில் ரியாட் மஹ்ரெஸ் ப்ரீ கிக் ஒன்றின் மூலம் கோல் பெற தனது கோல் எண்ணிக்கையை மூன்றாக உயர்த்திக் கொண்டதோடு பெர்னார்டோ சில்வா தலையால் முட்டியும் நிகொலஸ் ஒட்டமண்டி வலைக்குள் பந்தை தட்டிவிடவும் சிட்டி 18 நிமிடங்களுக்குள் 5-0 என முன்னிலை பெற்றது. ப்ரீமியர் லீக் வரலாற்றில் முதல் 18 நிமிடங்களுக்குள் 5 கோல்கள் புகுத்திய முதல் அணியாகவும் மன்செஸ்டர் சிட்டி பதிவானது.

இந்நிலையில் இரண்டாவது பாதியில் கௌரவமான தோல்வி ஒன்றை எதிர்பார்த்து வட்போர்ட் தனது தற்காப்பை பலப்படுத்தியபோதும் மன்செஸ்டர் சிட்டி சார்பில் பெர்னார்டோ சில்வா 48, 60 ஆவது நிமிடங்களில் மேலும் இரண்டு கோல்களை பெற்று தனது ஹட்ரிக் கோலை பூர்த்தி செய்தார்.

போட்டி முடிவதற்கு 5 நிமிடங்கள் இருக்கும்போது மன்செஸ்டர் சிட்டி அணிக்காக மற்றொரு கோலை கெவின் டி ப்ருயின் பெற்றார்.

இந்த வெற்றியுடன் மன்செஸ்டர் சிட்டி அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் லிவர்பூலை விடவும் ஒரு புள்ளி மாத்திரமே குறைவாக இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

அத்துடன் 1995 இல் ஸ்பிக் டவுன் அணிக்கு எதிராக மன்செஸ்டர் யுனைடட் அணி பெற்ற 9-0 என்ற கோல்கள் கணக்கின் வெற்றிக்கு பின்னர் ப்ரீமியர் லீக் வரலாற்றில் இரண்டாவது மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்வதற்கு மன்செஸ்டர் சிட்டி அணியால் முடிந்தது.

லெய்செஸ்டர் சிட்டி எதிர் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்புர்

ஜேம்ஸ் மெடிசன் கடைசி நேரத்தில் பெற்ற கோல் மூலம் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்புர் அணிக்கு எதிரான பரபரப்பான போட்டியில் லெய்செஸ்டர் சிட்டி 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் லெய்செஸ்டர் சிட்டி புள்ளிப்பட்டியலில் 3 ஆவது இடத்திற்கு முன்னேறியதோடு டொட்டென்ஹாம் ஹொட்ஸ்புர் 5 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

PSG இடம் வீழ்ந்தது ரியல் மெட்ரிட்

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் மேலும் சில முக்கிய போட்டிகள் இலங்கை…

ஹர்ரி கேன் 29 ஆவது நிமிடத்தில் பெற்ற கோல் மூலம் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்புர் அணி முதல் பாதியில் முன்னிலை பெற்றபோதும் இரண்டாவது பாதியில் ரிகார்டோ பெரெய்ரா பெற்ற கோல் மூலம் லெய்செஸ்டர் சிட்டி போட்டியை சமநிலைக்கு கொண்டுவந்தது. எனினும் ஹொட்ஸ்புரின் இரண்டாவது கோல் ஓப் சைட் என நடுவரால் மறுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வெற்றி கோலுக்காக இரு அணிகளும் போராடிய நிலையில் 85 ஆவது நிமிடத்தில் மெடிசன் அபார கோல் ஒன்றை பெற்று லெய்செஸ்டர் சிட்டியின் வெற்றியை உறுதி செய்தார்.

 மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க