பாகிஸ்தான் சுப்பர் லீக்கை ஜுன் மாதம் நடத்த தீர்மானம்

175
PSL Twitter

கொவிட்-19 தொற்று காரணமாக இடைநடுவில் நிறுத்தப்பட்ட பாகிஸ்தான் சுப்பர் லீக் டி-20 தொடரின் எஞ்சிய போட்டிகளை எதிர்வரும் ஜுன் மாதம் நடத்துவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

ஆறாவது பாகிஸ்தான் சுப்பர் லீக் (PSL) டி-20 கிரிக்கெட் தொடர் கராச்சியில் கடந்த மாதம் 20ஆம் திகதி முதல் நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் பங்கேற்ற 2 வெளிநாட்டு வீரர்கள் முதலில் கொவிட்-19 தொற்று பாதிப்புக்கு ஆளாகி தனிமைப்படுத்தப்பட்டனர்

இதற்கிடையில், கடந்த வாரம் மேலும் நான்கு வீரர்கள் மற்றும் ஒரு உதவி பயிற்சியாளர் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு இருப்பது PCR பரிசோதனையில் உறுதியானது. இதனால் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்தது.

ஆறு வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு: பாகிஸ்தான் சுப்பர் லீக் ஒத்திவைப்பு

எனவே, கொவிட்-19 தொற்று பரவலை முன்னணி வெளிநாட்டு வீரர்கள்  சிலர் போட்டியில் இருந்து விலகி தங்களது சொந்த நாட்டுக்கு திரும்புவதாக அறிவித்தனர்

இதனையடுத்து, பாகிஸ்தான் சுப்பர் லீக் அணிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உடனடியாக பாகிஸ்தான் சுப்பர் லீக்கை தள்ளிவைப்பதாக அறிவித்தது

இந்த முடிவு எடுக்கப்பட்ட சில நாட்களில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையும் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதில் பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டித் தொடரை நடத்துவதற்கு வீரர்களுக்கு பயோ பபுள் சூழலை நிர்வாகத்தால் உருவாக்க முடியவில்லை என்று கடுமையாக விமர்சனங்கள் வைக்கப்பட்டன

இதையடுத்து, பயோ பபுள் சூழலுக்குள் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து விசாரிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் ஷான் மானி ஒரு குழுவை நியமித்தார்.

Video – தோல்வியிலும் சாதித்துக் காட்டிய இலங்கை வீரர்கள்..!|Sports RoundUp – Epi 152

ஆனால், அந்தக் குழுவை நியமித்த பின், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் மருத்துவ மற்றும் அறிவியல் பிரிவின் தலைவர் மருத்துவர் சொஹைல் சலீம் தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டார்.

இதற்கிடையேபாகிஸ்தான் சுப்பர் லீக் டி20 போட்டி எதிர்காலத்தில் நடத்தப்படாவிட்டால், பணத்தைத் திரும்பத் தரவேண்டும் எனக் கோரி அணி நிர்வாகங்கள் கோரிக்கை விடுத்துள்ளன

இதுதொடர்பாகப் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் ஷான் மானி, அணி  நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதன்படி, கொவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இடைநடுவில் நிறுத்தப்பட்ட எஞ்சிய போட்டிகளை எதிர்வரும் ஜூன் மாதத்தில் மீண்டும் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இதேவேளை, பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு மே மாதம் 13ஆம் திகதி நாடு திரும்பவுள்ளது. அதன்பிறகு ஜூன் மாதம் 26ஆம் திகதி இங்கிலாந்துக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளது.

எனவே, குறித்த காலப்பகுதியில் பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் எஞ்சிய போட்டிகளை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

RCB அணியில் விளையாடவுள்ள நியூசிலாந்தின் இளம் வீரர்!

எதுஎவ்வாறாயினும், எதிர்வரும் ஜூன் மாதம் ஆசிய கிண்ண டி-20 கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் இந்தியா அணி விளையாடவுள்ளதால் அந்த அணியின் பங்குபற்றல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை

மறுபுறத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையும் குறித்த காலப்பகுதியில் பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் எஞ்சிய போட்டிகளை நடாத்த திட்டமிட்டுள்ளதால் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்பட்டலாம் என கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<