முதல் தடவையாக இடம்பெற்ற கால்பந்து சமரில் பன்சேனை பாரி வித்தியாலயம் வெற்றி

261

மட்டக்களப்பின் பிரபல்யம் வாய்ந்த மகளிர் பாடசாலைகளான அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயம் மற்றும் பன்சேனை பாரி வித்தியாலயம் ஆகியவற்றுக்கு இடையில் முதல் தடவையாக நடைபெற்ற மாபெரும் கால்பந்து போட்டியில் (Football Big Match) பன்சேனை பாரி வித்தியாலயம் 2-0 கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியினை பதிவு செய்திருக்கின்றது.

மட்டக்களப்பு கால்பந்து சம்மேளனத்தின் அனுமதியோடு அரங்கம் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மாபெரும் கால்பந்து போட்டி, திங்கட்கிழமை (17) மாலை மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் ஆரம்பமாகியது.

இந்திய அணியின் கோல்மழை பொழிவதை தடுத்த அயோமி

நேபாளத்தின் பிராத் நகர சஹிட் ரக்ஷலா…

இந்த கால்பந்து போட்டியில் பங்கேற்றிருந்த பன்சேனை பாரி வித்தியாலயம் மாகாண சம்பியன்கள் என்பதால் அவர்களது ஆதிக்கமே ஆட்டம் முழுவதும் நிலவும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

இதன் பின்னர் ஒரு பாதி 25 நிமிடங்கள் என்ற  நேர இடைவெளியோடு கால்பந்து போட்டி ஆரம்பமானது. எதிர்பார்க்கப்பட்டதன் அடிப்படையில் போட்டியின் ஆரம்பம் தொடக்கம் பன்சேனை பாரி வித்தியாலயத்தின் ஆதிக்கமே நிலவியது.

தொடர்ந்து பன்சேனை பாரி வித்தியாலய வீராங்கனை R. கஜேந்தி போட்டியின் 18 ஆவது நிமிடத்தில் தனது தரப்பிற்கான முதல் கோலினைப் பெற்றுக் கொடுத்தார்.

கஜேந்தி பெற்றுக் கொண்ட கோலோடு போட்டியில் முன்னிலை பெற்றுக் கொண்ட பன்சேனை பாரி வித்தியாலயம் முதல் பாதியை தமது முன்னிலையுடன் நிறைவு செய்து கொண்டது.

முதல் பாதி: பன்சேனை பாரி வித்தியாலயம் 1 – 0 அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயம்

இதன் பின்னர், போட்டியின் இரண்டாம் பாதி மிக விறுவிறுப்பாக ஆரம்பமான போதிலும், அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயத்தினால் இந்த பாதியிலும் எந்த கோல்களையும் பெற முடியவில்லை.

Photos: Panchenai Pari vs Ampilanthurai Kalaimahal – First Ever Girls’ Football Big Match

எனினும், பன்சேனை பாரி வித்தியாலய வீராங்கனை கஜேந்தி மீண்டும் ஒரு கோலினை தனது தரப்பிற்காக பெற்றுத்தந்தார். இந்த கோலினால் பன்சேனை பாரி வித்தியாலயம் 2-0 என மாபெரும் கால்பந்து போட்டியில் முன்னிலை பெற்று வெற்றியையும் பதிவு செய்து கொண்டது.

முழு நேரம்: பன்சேனை பாரி வித்தியாலயம் 2 – 0 அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயம்

கோல் பெற்றவர்கள்

பன்சேனை பாரி வித்தியாலயம் – R. கஜேந்தி 15’ & 43’

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<