அவுஸ்திரேலியாவில் பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் ஆடவுள்ள திமுத்!

Premier League Cricket Australia

68
 

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில், எண்டெவர் ஹில்ஸ் கிரிக்கெட் கழகத்துக்காக விளையாடுவதற்கு அஞ்செலோ மெதிவ்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இந்த பருவகாலத்துக்கான போட்டிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ளது.

>>நான்கு நாள் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் மழையால் கைவிடல்

எவ்வாறாயினும் இதற்கு முன்னர் நடைபெறவுள்ள அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான தொடர்களில் விளையாடிய பின்னர் திமுத் கருணாரத்ன எண்டெவர் ஹில்ஸ் கிரிக்கெட் கழகத்துடன் இணைந்துக்கொள்வார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை டெஸ்ட் அணியின் தலைவரான திமுத் கருணாத்ன இறுதியாக இங்கிலாந்தில் நடைபெற்ற கௌண்டி கிரிக்கெட்டில் யோர்க்ஷையர் அணிக்காக விளையாடியிருந்தார். இதில் மூன்று போட்டிகளில் விளையாடியிருந்த இவர், 89 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராக மாத்திரமின்றி டெஸ்ட் போட்டிகளில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்திருந்த திமுத் கருணாரத்ன 76 போட்டிகளில் 5620 ஓட்டங்களை குவித்துள்ளார். இதில், 14 சதங்கள் மற்றும் 27 அரைச்சதங்களையும் விளாசியுள்ளார்.

அதுமாத்திரமின்றி கடந்த ஆண்டுக்கான ஐசிசி டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்ததுடன், தற்போது ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 6வது இடத்தை பிடித்துள்ளார். இதேவேளை, கடந்த 2019ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கிண்ணத்தொடரிலும் இலங்கை அணியின் தலைவராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<