ஒன்பது அறிமுகவீரர்களுடன் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இங்கிலாந்து

445
GETTY IMAGES

எதிர்வரும் வியாழக்கிழமை (08), பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் இடையில் ஆரம்பமாகவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்தின் 18 பேர் அடங்கிய வீரர்கள் குழாம் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இங்கிலாந்து அணியின் 3 வீரர்கள் உட்பட எழுவருக்கு கொவிட்-19

இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் நிரந்தரவீரர்களாக இருந்த வீரர்கள் 7 பேருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதியான நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து ஒருநாள் அணியில் ஒன்பது அறிமுகவீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

அறிமுகவீரர்கள் ஒரு பக்கமிருக்க, T20 போட்டிகளில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்டவீரராக இருக்கும் டாவிட் மலான் இங்கிலாந்தின் ஒருநாள் அணியில் மீண்டும் இடம்பெற்றிருக்கின்றார். 

LPL தொடரில் ஆலோசகராக நியமிக்கப்படுகிறாரா? கூறும் மாலிங்க!

இதேநேரம், உபாதைக்கு உள்ளாகியிருந்த சக்கீப் மஹ்மூட்டிற்கும் இங்கிலாந்து ஒருநாள் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் அதிக அறிமுகவீரர்கள் உள்வாங்கப்பட்ட விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணியினுடைய நிறைவேற்று அதிகாரி, ஏஷ்லி கில்ஸ் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

பெரிய இடமொன்றில் விளையாடுவது எப்போதும் சிறந்த சந்தர்ப்பமாகும். இதேநேரம், தெரிவு செய்யப்பட்டிருக்கும் வீரர்களில் பெரும்பாலனோர் 24 மணிநேரத்திற்கு முன்னர் இவ்வாறான ஒன்று (ஒரு அணித்தெரிவு) நடக்கும் என்பதனை எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.”

இங்கிலாந்தின் ஒருநாள் அணியில் இணைக்கப்பட்டிருக்கும் வீரர்கள், நீண்டகாலமாக உள்ளூர் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்திய வீரர்கள் என குறிப்பிடப்படுகின்றது.

இதேநேரம், பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் ஒருநாள் சுபர் லீக்கினுள் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

இங்கிலாந்து ஒருநாள் அணி – பென் ஸ்டோக்ஸ், ஜேக் போல், டன்னி ப்ரிக்ஸ், ப்ரைடர் கார்ஸ், ஷேக் கிராவ்லி, பென் டக்கட், லூயிஸ் கிரேகொரி, டொம் ஹேல்ம், வில் ஜேக்ஸ், டானியல் லோரன்ஸ், சகீப் மஹ்மூட், டாவிட் மலான், கிரைக் ஒவர்டன், மேட் பாக்கின்ஸன், டேவிட் பெய்ன், பில் சால்ட், ஜோன் சிம்ப்சன், ஜேம்ஸ் வின்ஸ்

ஒருநாள் தொடர் அட்டவணை

முதல் ஒருநாள் போட்டி – பாகிஸ்தான் எதிர் இங்கிலாந்து – கார்டிப் – ஜூலை 8

இரண்டாவது ஒருநாள் போட்டி – பாகிஸ்தான் எதிர் இங்கிலாந்து – லன்டண் – ஜூலை 10

மூன்றாவது ஒருநாள் போட்டி – பாகிஸ்தான் எதிர் இங்கிலாந்து – பர்மிங்கம் – ஜூலை 13

மேலும் கிரிக்கெட் செய்திகளுக்கு…