LPL தொடரில் ஆலோசகராக நியமிக்கப்படுகிறாரா? கூறும் மாலிங்க!

Lanka Premier League 2021

691

லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் ஆலோசகராக, தான் நியமிக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் தவறானது என லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.

LPL தொடரின் இரண்டாவது பருவகால போட்டிகள் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் லசித் மாலிங்க கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் அலோசகராக செயற்படவுள்ளார் என்ற செய்திகள் வெளியாகிவந்தன. 

இலங்கை U19 பயிற்சி முகாமில் யாழ். வீரர்கள் இருவர்!

இந்தநிலையில், குறித்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையென தன்னுடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் லசித் மாலிங்க பதிவுசெய்துள்ளார்.

அதேநேரம், லசித் மாலிங்க தேசிய அணிக்கான T20I போட்டிகளிலிருந்து இதுவரை ஓய்வுபெறவில்லை எனவும், குறித்த பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த பதிவில், நடைபெறவுள்ள LPL தொடரில் ஆலோசகராக செயற்படவுள்ளேன் என்ற அறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதில், எவ்வித உண்மையும் இல்லை. இதுதொடர்பில் எந்தவித அதிகாரிகளுடனும் நான் இதுவரை கலந்துரையாடவில்லை. அதுமாத்திரமின்றி, நான் தேசிய அணிக்கான T20I கிரிக்கெட்டிலிருந்து இதுவரை ஓய்வை அறிவிக்கவில்லைஎன பதிவிடப்பட்டுள்ளது.

LPL தொடரின் இரண்டாம் பருவகாலத்துக்கான போட்டிகள் இம்மாதம் 30ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், ஆகஸ்ட் 22ம் திகதி நிறைவடையவுள்ளது. தொடரின் போட்டிகள் அனைத்தும் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…