Home Tamil சந்தகன், தினூஷவின் அபாரத்தால் தம்புள்ள அணிக்கு 6ஆவது வெற்றி

சந்தகன், தினூஷவின் அபாரத்தால் தம்புள்ள அணிக்கு 6ஆவது வெற்றி

National Super League 2023

98

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் தேசிய சுபர் லீக் ஒருநாள் தொடரில் இன்று (30) நடைபெற்ற போட்டிகளில் தம்புள்ள மற்றும் கொழும்பு அணிகள் வெற்றிகளை பதிவுசெய்துள்ளன.

இதில் கண்டி அணிக்கெதிரான போட்டியில் ஒரு விக்கெட்டினால் த்ரில் வெற்றியீட்டிய மினோத் பானுக தலைமையிலான தம்புள்ள அணி இம்முறை போட்டித்தொடரில் 6ஆவது வெற்றியைப் பதிவுசெய்ய, காலி அணிக்கெதிரான போட்டியில் 71 ஓட்டங்களால் வெற்றியீட்டிய கொழும்பு அணி இம்முறை போட்டித்தொடரில் முதல் வெற்றியைப் பெற்றுக்கொண்டது.

அதேபோல, இன்றைய நாள் போட்டிகளை பொருத்தவரை கண்டி அணிக்காக ஓசத பெர்னாண்டோ மற்றும் லஹிரு உதாரவும், தம்புள்ள அணிக்காக சொனால் தினூஷவும், கொழும்பு அணிக்காக சச்சித ஜயதிலகவும் அரைச் சதங்களைப் பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சை பொறுத்தமட்டில் தம்புள்ள அணியின் லக்ஷான் சந்தகன் மற்றும் காலி அணியின் மிலான் ரத்நாயகவும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

கொழும்பு எதிர் காலி

எஸ்எஸ்சி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், சகலதுறையிலும் பிரகாசித நிபுன் தனன்ஜய தலைமையிலான கொழும்பு 71 ஓட்டங்களால் வெற்றியை பெற்றுக்கொண்டது. இதன்மூலம் இம்முறை தேசிய சுபர் லீக் ஒருநாள் தொடரில் முதல் வெற்றியை அந்த அணி பதிவுசெய்தது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய காலி அணி, 48 ஓவர்களில் 225 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

கண்டி அணி சார்பில் அதிகபட்சமாக சச்சித ஜயதிலக 58 ஓட்டங்களையும், துஷான் விமுக்தி 46 ஓட்டங்களையும், சிதார கிம்ஹான் 44 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொள்ள, ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை வழங்கவில்லை.

காலி அணியின் பந்துவீச்சை பொருத்தவரை மிலான் ரத்நாயக 37 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், கவிஷ்க அன்ஜுல மற்றும் திலங்க உதேஷன தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

நவோத், ஷிரானின் சிறப்பாட்டத்தால் ஜப்னாவுக்கு 3ஆவது வெற்றி

இதனையடுத்து 226 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய காலி அணி, மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 39.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 154 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து தோல்வியைத் தழுவியது.

காலி அணிசார்பில் அதிகபட்சமாக அகில தனன்ஜய 27 ஓட்டங்களையும், சுமிந்த லக்ஷான் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள, கொழும்பு அணியின் பந்துவீச்சில் பொருத்தவரை நுவன் பிரதீப் மற்றும் துஷான் விமுக்தி ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

இந்தப் போட்டித்தொடரில் காலி அணியின் 4ஆவது தோல்வியாகவும் கொழும்பு அணியின் முதல் வெற்றியாகவும் பதிவாகியது.

Result


Team Galle
154/10 (39.4)

Team Colombo
225/10 (48)

Batsmen R B 4s 6s SR
Avisha Fernando c Dinesh Chandimal b Kavishka Anjula 14 20 2 0 70.00
Sithara Gimhana c & b Ramesh Mendis 44 45 4 1 97.78
Krishan Sanjula c Sohan de Livera b Tilanga Udeshana 5 9 1 0 55.56
Dushan Vimukthi c Ramesh Mendis b Milan Rathnayake 46 89 2 0 51.69
Nipun Dhananjaya lbw b Akila Dananjaya 0 3 0 0 0.00
Ashen Bandara lbw b Tilanga Udeshana 19 20 2 0 95.00
Sachitha Jayathilake c Ramesh Mendis b Milan Rathnayake 58 74 5 2 78.38
Isitha Dew Wijesundara c Pasindu Sooriyabandara b Milan Rathnayake 16 15 1 1 106.67
Prabath Jayasuriya b Milan Rathnayake 1 3 0 0 33.33
Udith Madushan b Kavishka Anjula 4 5 0 0 80.00
Nuwan Pradeep  not out 4 6 0 0 66.67


Extras 14 (b 0 , lb 4 , nb 1, w 9, pen 0)
Total 225/10 (48 Overs, RR: 4.69)
Bowling O M R W Econ
Milan Rathnayake 9 0 37 4 4.11
Kavishka Anjula 9 0 54 2 6.00
Tilanga Udeshana 7 1 45 2 6.43
Ramesh Mendis 8 0 23 1 2.88
Akila Dananjaya 6 0 23 1 3.83
Suminda Lakshan 9 1 39 0 4.33


Batsmen R B 4s 6s SR
Sohan de Livera c Sithara Gimhana b Nuwan Pradeep  19 32 3 0 59.38
Vishad Randika lbw b Nuwan Pradeep  9 17 1 0 52.94
Dinesh Chandimal c Sithara Gimhana b Udith Madushan 10 18 1 0 55.56
Pasindu Sooriyabandara c Sithara Gimhana b Nuwan Pradeep  0 5 0 0 0.00
Pathum Kumara c Nipun Dhananjaya b Prabath Jayasuriya 22 32 2 0 68.75
Ramesh Mendis lbw b Udith Madushan 8 16 0 0 50.00
Suminda Lakshan c Avisha Fernando b Dushan Vimukthi 26 28 3 0 92.86
Kavishka Anjula lbw b Nipun Dhananjaya 21 33 2 0 63.64
Akila Dananjaya c Sachitha Jayathilake b Dushan Vimukthi 27 32 3 0 84.38
Milan Rathnayake c Sachitha Jayathilake b Dushan Vimukthi 5 19 0 0 26.32
Tilanga Udeshana not out 2 6 0 0 33.33


Extras 5 (b 1 , lb 0 , nb 0, w 4, pen 0)
Total 154/10 (39.4 Overs, RR: 3.88)
Bowling O M R W Econ
Nuwan Pradeep  7 1 31 3 4.43
Isitha Dew Wijesundara 6 0 20 0 3.33
Prabath Jayasuriya 8 0 36 1 4.50
Udith Madushan 5 1 15 2 3.00
Dushan Vimukthi 8.4 0 34 3 4.05
Sachitha Jayathilake 1 0 7 0 7.00
Nipun Dhananjaya 4 0 10 1 2.50



தம்புள்ள எதிர் கண்டி

கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியானது கடைசி ஓவர் வரை பரபரப்பை ஏற்படுத்தியதுடன், ஒரு விக்கெட்டினால் தம்புள்ள அணி த்ரில் வெற்றியயைப் பதிவு செய்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றியீட்டி முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி அணி ஓசத பெர்னாண்டோ (76) மற்றும் லஹிரு உதார (52) ஆகிய இருவரினதும் அரைச் சதங்களின் உதவியுடன் 47.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 239 ஓட்டங்களை எடுத்தது.

தம்புள்ள அணியின் பந்துவீச்சில் லக்ஷான் சந்தகன் 37 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய தம்புள்ள அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஒரு கட்டத்தில் அந்த அணி 85 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

தம்புள்ள அணிக்காக 6 விக்கெட்டுகளை வீழ்த்திய அஷான் பிரியன்ஜன்

எவ்வாறாயினும், சொனால் தினூஷ அரைச் சதம் கடந்து பெற்றுக்கொடுத்த 53 ஓட்டங்கள், துஷான் ஹேமன்த மற்றும் ரனித லியனாரச்சி ஆகியோரது துடுப்பாட்ட பங்களிப்புடன் 48.5 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து தம்புள்ள அணி வெற்றியிலக்கை அடைந்தது. கண்டி அணியின் பந்துவீச்சில் மொவின் சுபசிங்க மற்றும் அஷைன் டேனியல் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியிருந்தனர்.

இதன்மூலம், இம்முறை போட்டித்தொடரில் தங்களுடைய 6ஆவது போட்டியில் விளையாடி கண்டி அணி தங்களுடைய 4ஆவது தோல்வியைப் பதிவுசெய்தது.

Result


Team Dambulla
240/9 (48.5)

Team Kandy
239/10 (47.1)

Batsmen R B 4s 6s SR
Niroshan Dickwella c Lahiru Samarakoon b Ranitha Liyanarachchi 15 14 2 0 107.14
Oshada Fernando c Pavan Rathnayake  b Lakshan Sandakan 76 75 10 1 101.33
Sandun Weerakkody c Minod Bhanuka b Lahiru Samarakoon 1 3 0 0 33.33
Lahiru Udara c Ranitha Liyanarachchi b Lakshan Sandakan 52 52 7 0 100.00
Ahan Wickramasinghe c Minod Bhanuka b Lakshan Sandakan 23 24 2 0 95.83
Asel Sigera c Ashan Priyanjan b Dushan Hemantha 23 38 2 0 60.53
Movin Subasingha lbw b Lakshan Sandakan 0 2 0 0 0.00
Pulina Tharanga b Lahiru Samarakoon 20 32 0 0 62.50
Ashian Daniel lbw b Sonal Dinusha 7 21 1 0 33.33
Dushmantha Chameera b Sonal Dinusha 4 10 0 0 40.00
Chamika Gunasekara not out 7 13 0 0 53.85


Extras 11 (b 0 , lb 5 , nb 1, w 5, pen 0)
Total 239/10 (47.1 Overs, RR: 5.07)
Bowling O M R W Econ
Ranitha Liyanarachchi 5 0 26 1 5.20
Lahiru Samarakoon 5.1 0 24 2 4.71
Chamindu Wijesinghe 3 0 20 0 6.67
Dushan Hemantha 10 0 59 1 5.90
Sonal Dinusha 6 1 32 2 5.33
Lakshan Sandakan 10 2 37 4 3.70
Ashan Priyanjan 8 0 36 0 4.50


Batsmen R B 4s 6s SR
Minod Bhanuka c & b Chamika Gunasekara 6 9 0 0 66.67
Pavan Rathnayake  c Oshada Fernando b Pulina Tharanga 34 43 2 1 79.07
Kamindu Mendis b Movin Subasingha 26 16 3 1 162.50
Lasith Abeyrathne c Niroshan Dickwella b Ashian Daniel 16 28 1 0 57.14
Ashan Priyanjan c Chamika Gunasekara b Asel Sigera 24 39 2 0 61.54
Sonal Dinusha c Ashian Daniel b Movin Subasingha 53 66 4 0 80.30
Dushan Hemantha c & b Movin Subasingha 37 42 1 1 88.10
Ranitha Liyanarachchi c Lahiru Udara b Ashian Daniel 21 20 2 1 105.00
Lahiru Samarakoon c Lahiru Udara b Ashian Daniel 6 6 0 0 100.00
Chamindu Wijesinghe not out 12 17 1 0 70.59
Lakshan Sandakan not out 0 7 0 0 0.00


Extras 5 (b 0 , lb 0 , nb 0, w 5, pen 0)
Total 240/9 (48.5 Overs, RR: 4.91)
Bowling O M R W Econ
Dushmantha Chameera 7 0 49 0 7.00
Chamika Gunasekara 4 0 21 1 5.25
Asel Sigera 10 1 43 1 4.30
Movin Subasingha 8.5 0 46 3 5.41
Pulina Tharanga 8 0 36 1 4.50
Ashian Daniel 10 0 39 3 3.90
Sandun Weerakkody 1 0 6 0 6.00



 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<