பார்சிலோனாவுக்கு 6.7 மில். யூரோக்களை செலுத்த நெய்மா உத்தரவு

293

பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) கழக முன்கள வீரர் நெய்மார் தனது முன்னாள் கழகமான பார்சிலோனா கழகத்திற்கு 6.7 மில்லியன் யூரோக்களை செலுத்தும்படி ஸ்பெயின் நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.  

2017 ஓகஸ்ட் மாதம் பார்சிலோனாவை விட்டு வெளியேறிய பிரேசில் தேசிய அணி வீரரான நெய்மார், அந்தக் கழகம் மேலதிக கொடுப்பனவுகளாக தமக்கு 43.6 மில்லியன் யூரோ செலுத்த வேண்டி இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்

புதிய வீரர்களுடன் பயிற்சிகளை ஆரம்பிக்கும் இலங்கை கால்பந்து அணி

எனினும், வெள்ளிக்கிழமை (19) வழங்கப்பட்ட தீர்ப்பு லா லிகா கழகமான பார்சிலோனாவுக்கு சாதகமாக அமைந்தது. எனவே, தமது மேலதிகக் கொடுப்பனவைக் கோரி வழக்குத் தொடுத்த 28 வயதான நெய்மாருக்கு இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்தத் தீர்ப்பை வரவேற்றிருக்கும் பார்சிலோனா கழகம் தமது நியாயமான நலன்களை தொடர்ந்து உறுதியாக பாதுகாப்பதாக தெரிவித்துள்ளது

கடந்த 2017 ஆம் ஆண்டு 222 மில்லியன் யூரோவுக்கு PSG கழகத்திற்கு சென்ற பின் தமக்கு சேர வேண்டிய தொகையை செலுத்த பார்சிலோனா மறுத்த நிலையில் அது பற்றி அவர் சர்வதேச கால்பந்து சம்மேளத்திடமும் முறையிட்டார்

நெய்மார் கோரும் தொகையை வழங்க மறுத்தது மாத்திரம் அன்றி 2016 இல் அவருடன் செய்து கொள்ளப்பட்ட புதிய ஒப்பந்தத்தின்போது அவருக்கு வழங்கப்பட்ட 8 மில்லியன் பௌண்ட் தொகையை திருப்பித் தரும்படி கோரி பார்சிலோனா கழகம் சட்டரீதியான நடவடிக்கை எடுத்தது

இது பற்றி சர்வதேச கால்பந்து சம்மேளனம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதோடு, அதனை நீதிமன்றத்திடம் விட்டுவிடுவதாக தெரிவித்தது

கடந்த 2013 ஆம் ஆண்டு பார்சிலோனாவில் இணைந்த நெய்மார் 2016 இல் அந்த அணியுடன் ஐந்து ஆண்டுகள் புதிய ஒப்பந்தம் ஒன்றில் ஈடுபட்ட நிலையிலேயே பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்குத் தாவினார்.   

பார்சிலோனா மற்றும் நெய்மார் இடையே நிதிப் பிரிச்சினை நீடித்தபோதும் நெய்மார் மீண்டும் பார்சிலோனாவில் இணைவது பற்றி தொடர்ந்தும் எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றன

கடந்த ஆண்டு வீரர்கள் பரிமாற்றக் காலத்தில் PSG உடன் பார்சிலோனா பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டபோதும் உடன்பாடு ஒன்று எட்ட முடியாமல் போனது. குறிப்பாக, பல வீரர்களையும் வழங்குவதற்கு பார்சிலோனா அப்போது முன் வந்தமை குறிப்பிடத்தக்கது.   

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க…