Alaves hold Celta to 0-0 draw in King’s Cup semi -Tamil

ஆபிரிக்க கால்பந்து கிண்ணதுக்கான அரையிறுதிப் போட்டியில் கானா அணியை, கமரூன் அணி 2-0 என்ற கோல் அடிப்படையில் வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

காலிறுதிப் போட்டியில் டி.ஆர். கொங்கோ அணியை 2-1 என்ற கோல்கள் அடிப்படையில் கானா அணி வெற்றியீட்டி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது. அதேவேளை கமரூன் மற்றும் செனகல் அணியுடனான விறுவிறுப்பான காலிறுதிப் போட்டியில் முழு நேர போட்டி சமநிலையுற்றதால் மேலதிக நேரம் வழங்கப்பட்டது.

மேலதிக நேரத்திலும் இவ்விரு அணிகளும் எந்தவொரு கோலையும் போடாத நிலையில் போட்டி சமநிலையில் முடிவுற்றதால் பெனால்டி முலம் 1-0 கோல் அடிப்படையில் வெற்றியீட்டி கானா அணியுடனான அரையிறுதி போட்டிக்கு கமரூன் அணி தகுதி பெற்றிருந்தது.

அந்த வகையில், ஏற்கனவே கமரூன் அணியுடனான பல போட்டிகளில் தோல்வியுற்ற நிலையில், அணித் தலைவர் அசாமா கியான் வெற்றி பெறும் முனைப்பில் தனது அணியுடன் இந்த போட்டியில் களமிறங்கினார்.

முதல் பாதி நேரத்தில் ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட போதிலும் இரு அணிகளுக்கும் எவ்விதமான கோல்களையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. எனினும், இரண்டாம் பாதியில், நடேய்யு நட்ஜுய் (Ngadeu-Ngadjui) மற்றும் பசோகொக் (Bassogog) முறையே 72, 90ஆவது நிமிடங்களில் பெற்றுக்கொண்ட இரண்டு கோல்களின் மூலம் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.

அதேநேரம் எகிப்து மற்றும் புர்கினா பாசோ அணிகளுக்கிடையிலான அரையிறுதிப் போட்டியில் முழு நேரப் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையுற்றதால் பெனால்டி மூலம் 4-3 கோல் கணக்கில் எகிப்து வெற்றி பெற்று கமரூன் அணியுடனான இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இவ்விரு அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டி மத்திய ஆபிரிக்காவிலுள்ள காபோன் நகரில் லிப்ரெவில் நடைபெறவுள்ளது.

அதேநேரம், மூன்றாம் இடத்துக்கான கானா அணி மற்றும் புர்கினா பாசோ அணிகளுக்கிடையிலான போட்டி நாளை சனிக்கிழமை காபோன், போர்ட் ஜென்டில்லில் நடைபெறவுள்ளது.