இங்கிலாந்து, அவுஸ்திரேலிய தொடருக்கான நியூசிலாந்து டெஸ்ட் குழாம் அறிவிப்பு

71

இங்கிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் அவுஸ்திரேலிய அணியுடன் நடைபெறவுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகள் ஆகிய இரு டெஸ்ட் தொடர்களுக்குமான நியூசிலாந்து குழாம் அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இருதரப்பு தொடருக்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியை சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் எதிர்கொள்கிறது.

பத்து வருடங்களுக்குப் பின் மீண்டும் பாகிஸ்தானில் டெஸ்ட் போட்டிகள்

சுமார் 10 வருட காலத்திற்குப் பின்னர் இலங்கை ……..

முதல் தொடரான சர்வதேச டி20 தொடர் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் எதிர்வரும் வியாழக்கிழமை (21) டெஸ்ட் தொடர் ஆரம்பமாகின்றது. அந்த அடிப்படையில் டெஸ்ட் தொடருக்காக 15 பேர் கொண்ட குழாம் வெளியிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்து தொடருக்கு முன்னராக உபாதைக்கு உள்ளானதன் காரணமாக சர்வதேச டி20 தொடரில் இடம்பெறாத முக்கிய வீரர் கேன் வில்லியம்சன் தற்போது உபாதையிலிருந்து குணமடைந்து வருவதன் அடிப்படையில் நியூசிலாந்து டெஸ்ட் அணியின் தலைவராக வழமை போன்று பெயரிடப்பட்டுள்ளார். 

நியூசிலாந்து கிரிக்கெட்டில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டுள்ள, கடந்த உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் போது நியூசிலாந்து அணியை தனது சிறப்பான பந்துவீச்சு மூலம் இறுதிப்போட்டி வரைக்கும் கொண்டு சென்ற 28 வயதுடைய லுக்கி பேர்குசன் கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடும் அடிப்படையில் முதல் முறையாக டெஸ்ட் குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளார். 

மேலும் லுக்கி பேர்குசன் தனது வேகத்தின் மூலம் கடந்த உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் போது மொத்தமாக 21 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2016 டிசம்பரில் ஒருநாள் சர்வதேச போட்டி மூலமாக சர்வதேச அரங்கிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஒரு மாத இடைவெளியிலேயே சர்வதேச டி20 அரங்கிற்குள்ளும் நுழைந்தார். 

பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான இலங்கை உத்தேச குழாம்!

பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான குழாத்தை ……

இதுவரையில் 36 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள லுக்கி பேர்குசன் 67 விக்கெட்டுக்களையும், 8 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார். இதேவேளை கடந்த வாரம் நிறைவுக்கு வந்த இங்கிலாந்து அணியுடனான சர்வதேச டி20 தொடரிலும் லுக்கி பேர்குசன் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

2013ஆம் ஆண்டு முதல்தர டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகம் பெற்ற லுக்கி பேர்குசன் இதுவரையில் 42 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் போட்டியில் 1 பத்து விக்கெட்டுகள் மற்றும் இன்னிங்ஸில் 11 ஐந்து விக்கெட்டுக்களுடன் மொத்தமாக 153 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். 

இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்த சுழல் பந்துவீச்சாளர்களான வில் சமர்வில்லி மற்றும் அஜாஸ் படேல் ஆகியோர் குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ள அதேவேளை டொட் அஸ்டில் மற்றும் மிட்செல் சான்ட்னர் ஆகியோர் சுழல் பந்துவீச்சாளர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.  

முக்கிய வேகப்பந்துவீச்சாளர்கள் வரிசையில் லுக்கி பேர்குசனுடன் இணைந்து இடதுகை பந்துவீச்சாளரான ட்ரென்ட் போல்ட், டிம் சௌத்தி ஆகியோர் பெயரிடப்பட்டுள்ள அதேவேளை கடந்த இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் இடம்பெறாத வேகப்பந்துவீச்சாளர்களான இடதுகை பந்துவீச்சாளர் நைல் வேக்னர் மற்றும் மெட் ஹென்றி ஆகியோர் குழாமில் இணைக்கப்பட்டுள்ளனர். 

டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ள மாலிங்க

இலங்கை எதிர் அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் எதிர் ……

இரு டெஸ்ட் தொடர்களுக்குமான 15 பேர் கொண்ட குழாம்

கேன் வில்லியம்சன் (அணித்தலைவர்), டொட் அஸ்டில், டொம் ப்ளன்டெல், ட்ரென்ட் போல்ட், கொலின் டி க்ரேன்ட்ஹோம், லுக்கி பேர்குசன், மெட் ஹென்றி, டொம் லேதம், ஹென்றி நிக்கொலஸ், ஜீட் ராவல், மிட்செல் சான்ட்னர், டிம் சௌத்தி, ரோஸ் டெய்லர், நைல் வேக்னர், பி.ஜே வெட்லிங்

நடைமுறையிலுள்ள ஐ.சி.சி டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் நியூசிலாந்து அணி 60 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் காணப்படுவதுடன், இங்கிலாந்து அணி 56 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

தொடர் அட்டவணை

நியூசிலாந்து எதிர் இங்கிலாந்து

  • 21 நவம்பர் – முதல் டெஸ்ட் போட்டி – மௌண்ட் மௌங்குனி
  • 29 நவம்பர் – இரண்டாவது டெஸ்ட் போட்டி – ஹெமில்டன் 

அவுஸ்திரேலியா எதிர் நியூசிலாந்து 

  • 12 டிசம்பர் – முதல் டெஸ்ட் போட்டி – பேர்த் (பகலிரவு)
  • 26 டிசம்பர் – இரண்டாவது டெஸ்ட் போட்டி – மெல்பேர்ன்
  • 3 ஜனவரி – மூன்றாவது டெஸ்ட் போட்டி – சிட்னி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<