டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ள மாலிங்க

268

இலங்கை எதிர் அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து எதிர் இங்கிலாந்து மற்றும் இந்தியா எதிர் பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கிடையிலான டி20 சர்வதேச தொடர்கள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் சர்வதேச கிரிக்கெட் பேரவையானது வீரர்களுக்கான புதிய தரப்படுத்தலை இன்று (11) வெளியிட்டுள்ளது. 

பந்துவீச்சாளர்களுக்கான தரப்படுத்தல்

குறிப்பிட்ட தொடர்கள் நிறைவுக்குவந்துள்ள நிலையில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதுடன், முதல் பத்து நிலைகளுக்குள்ளும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. 

சஹாரின் சாதனை பந்துவீச்சு மூலம் டி20 தொடரை கைப்பற்றிய இந்தியா

தீபக் சஹாரின் ஹெட்ரிக் விக்கெட் உட்பட………..

இம்மாதம் 1ஆம் திகதி நிறைவுக்குவந்த இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான தொடரில் இலங்கை அணி மிக மோசமான தோல்வியை சந்தித்து வெள்ளையடிப்புக்கு உள்ளனாது. இலங்கையின் பந்துவீச்சில் பெயர் குறிப்பிடக்கூடிய அளவுக்கு யாரும் பிரகாசித்திருக்கவில்லை.

இந்நிலையில் குறித்த தொடரில் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றிய இலங்கை அணித்தலைவர் லசித் மாலிங்கவுக்கு புதிய டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் உயர வாய்ப்பு கிடைத்துள்ளது. 7 நிலைகள் உயர்ந்துள்ள லசித் மாலிங்க 569 தரவரிசை புள்ளிகளுடன் பாகிஸ்தானின் பஹீம் அஷ்ரபுடன் இணைந்து 22ஆவது நிலையை அடைந்துள்ளார். 

இங்கிலாந்து அணியுடனான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 11 விக்கெட்டுக்களை வீழ்த்தி தொடர் ஆட்ட நாயகன் விருது வென்ற நியூசிலாந்து அணியின் சுழல் பந்துவீச்சாளர் மிட்செல் சான்ட்னர் 3 நிலைகள் உயர்ந்து 700 தரவரிசை புள்ளிகளுடன் இரண்டாமிடத்தை அடைந்துள்ளார். 

இமாட் வஸீம் (பாகிஸ்தான்), அடம் ஸம்பா (அவுஸ்திரேலியா), சதாப் கான் (பாகிஸ்தான்) ஆகியோர் 686, 678, 673 ஆகிய தரவரிசை புள்ளிகளுடன் முறையே மூன்றாம், நான்காம், ஐந்தாம் நிலைகளில் காணப்படுகின்றனர். இலங்கை அணியுடனான தொடரில் 3 விக்கெட்டுக்கள், பாகிஸ்தான் அணியுடனான தொடரில் 4 விக்கெட்டுக்கள் என இரு தொடர்களிலும் மொத்தமாக 7 விக்கெட்டுக்களை கைப்பற்றிய அவுஸ்திரேலியாவின் சுழல் பந்துவீச்சாளர் அஸ்டன் அகார் முதல் முறையாக முதல் 10 நிலைகளுக்குள் புகுந்துள்ளார். 642 தரவரிசை புள்ளிகளை பெற்றுள்ள அவர் வாழ்நாள் அதிகபட்ச தரவரிசை புள்ளிகளுடன் 57 நிலைகள் உயர்ந்து 9ஆவது இடத்தை அடைந்துள்ளார். 

இங்கிலாந்து தொடரில் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றிய டிம் சௌத்தி 11ஆவது நிலைக்கும், பில்லி ஸ்டன்லேக் 12ஆவது நிலைக்கும், மொஹமட் நபி 13ஆவது நிலைக்கும், குர்ணல் பாண்டியா 18ஆவது நிலைக்கும், யுஸ்வேந்திர சஹால் 25ஆவது நிலைக்கும், வெஷிங்டன் சுந்தர் 27ஆவது நிலைக்கும், பெட் கம்மின்ஸ் 30ஆவது நிலைக்கும் உயர்ந்துள்ளனர். 

இதேவேளை நேற்று (10) நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கெதிரான இறுதி டி20 சர்வதேச போட்டியில் வெறும் 7 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை கைப்பற்றி இலங்கையரின் சாதனையை வீழ்த்தி வரலாறு படைத்த இந்திய வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹார் 88 நிலைகள் உயர்ந்து 517 தரவரிசை புள்ளிகளுடன் 42ஆவது நிலையை அடைந்துள்ளார். 

துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசை

இலங்கை அணியுடனான தொடரில் 101 ஓட்டங்கள், பாகிஸ்தான் அணியுடனான தொடரில் 106 என இரு தொடர்களிலும் 207 ஓட்டங்களை குவித்த அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஆரோன் பிஞ்ச் 2 நிலைகள் உயர்ந்து இரண்டாம் நிலைக்கு வந்துள்ளார். 

ஷமிம், தவ்ஹீத் அதிரடியோடு பங்களாதேஷ் இளம் அணிக்கு வெற்றி

சுற்றுலா இலங்கை 19 வயதுக்குட்பட்ட……………

நியூசிலாந்து அணியுடனான தொடரில் வெறும் 4 போட்டிகளில் ஒரு சதம் மற்றும் ஒரு அரைச்சதத்துடன் 208 ஓட்டங்களை குவித்த டேவிட் மலான் வாழ்நாள் அதிகபட்ச தரவரிசை புள்ளிகளுடன் (782) சடுதியாக மூன்றாவது நிலையை அடைந்துள்ளார். மேலும் அதே தொடரில் கலக்கி மொத்தமாக 192 ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து அணித்தலைவர் இயன் மோர்கன் 10 நிலைகள் உயர்ந்து ஒன்பதாமிடத்தையும், தொடரில் மூன்றாவது அதிகூடிய ஓட்டங்களாக 153 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட மார்டின் கப்டில் 7 நிலைகள் உயர்ந்து அதே ஒன்பதாமிடத்தை அடைந்துள்ளார். 

நியூசிலாந்துடனான தொடரில் இறுதி போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியின் ஆட்ட நாயகன் விருதுவென்ற ஜொனி பெயார்ஸ்டோ 18 நிலைகள் உயர்ந்து 38ஆவது இடத்தையும், இந்திய அணியுடனான டி20 சர்வதேச அறிமுகம் பெற்று அதே தொடரில் அதிகூடிய ஓட்டங்களை பெற்றுக்கொண்ட (143) பங்களாதேஷ் அணியின் 20 வயது இளம் துடுப்பாட்ட வீரர் மொஹம்மட் நயிம் அதே 38ஆவது நிலைக்கு வந்துள்ளார். 

சகலதுறை வீரர்களின் தரவரிசை

டி20 சர்வதேச சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் காணப்பட்ட அவுஸ்திரேலியாவின் க்ளேன் மெக்ஸ்வெல் இலங்கை அணியுடான தொடரில் பிரகாசிக்காததனாலும், பாகிஸ்தான் அணியுடனான தொடரில் விளையாடாத காரணத்தினாலும் பட்டியலில் முதலிடத்தை இழந்துள்ளார். 

இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணியின் சுழல் பந்துவீச்சாளரும், துடுப்பாட்ட வீரருமான 34 வயதுடைய மொஹமட் நபி முதலிடத்தை பிடித்துள்ளார்.   

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<