2018 உலகக் கிண்ணம்: ஆர்ஜன்டீன அணியின் முன்னோட்டம்

878

தற்போது  பிஃபா உலக தரவரிசையில் 5 ஆவது இடத்தில் இருக்கும் ஆர்ஜன்டீனா 17 ஆவது தடவையாக உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதோடு அந்த அணிக்கு மீண்டும் ஒருமுறை நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தலைமை வகிக்கிறார்.

உலகக் கிண்ண வரலாறு

முதல் உலகக் கிண்ண போட்டியில் ஆர்ஜன்டீனா இறுதி போட்டிவரை முன்னேறி உருகுவே அணியிடம் 4-2 என்று தோற்றது, பின்னர் 1990 இல் மேற்கு ஜெர்மனியிடம் 1-0 என தோற்று இரண்டாவது இடத்தை பெற்றதோடு, கடைசியாக 2014 இல் நடந்த உலகக் கிண்ண போட்டியிலும் ஜெர்மனிக்கு எதிராக இறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. மீண்டும் ஒரு முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறும் இலக்குடனேயே அந்த அணி இம்முறையும் உலகக் கிண்ணத்தில் பங்கேற்றுள்ளது.    

1986 இல் உலகக் கிண்ணத்தை வென்ற அணி

கடந்த 16 உலகக் கிண்ண போட்டிகளில் பங்கேற்றிருக்கும் ஆர்ஜன்டீனா தனது சிறந்த பெறுபேறை 1978 தனது சொந்த மண்ணில் நடந்த உலகக் கிண்ணத்திலும் 1986 மெக்சிகோ உலகக் கிண்ணத்திலும் பெற்றது. அந்த இரண்டு தொடர்களிலும் முறையே நெதர்லாந்து மற்றும் மேற்கு ஜெர்மனியை வீழ்த்திய ஆர்ஜன்டீனாவால் உலக சம்பியனாக முடிந்தது.    

ஆர்ஜன்டீனா 1966, 1998, 2006 மற்றும் 2010 ஆகிய நான்கு தடவைகள் காலிறுதி வரை முன்னேறியது.

2018 உலகக் கிண்ணம்: ஜெர்மனி அணியின் முன்னோட்டம்

கடைசியாக 1962 ஆம் ஆண்டு பிரேசில் அணியாலேயே உலகக் கிண்ணத்தை வெற்றிகரமாக தக்கவைத்துக் கொள்ள முடிந்தது…

ஆர்ஜன்டீனா தனது வரலாற்றில் டியாகோ மரடோனா, மாரியோ கெம்பஸ், கப்ரியல் படிஸ்டுடா என பல நட்சத்திர வீரர்களை உருவாக்கியுள்ளது. இந்த வரிசையில் லியோனல் மெஸ்ஸி ஆர்ஜன்டீனாவுக்கு உலகக் கிண்ணத்தை வென்று கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.  

இம்முறை எவ்வாறு தகுதி பெற்றது?

ஆர்ஜன்டீனா 1970 இற்கு பின்னர் முதல்முறை இம்முறை உலகக் கிண்ணத்தில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தகுதி இழந்துவிடும் என்று பலரும் எண்ணினார்கள். CONMEBOL மண்டலத்தின் கீழ் 10 நாடுகள் பங்கேற்ற உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் 4 நாடுகள் நேரடி தகுதி பெறுவதோடு ஒரு அணி மண்டலங்களுக்கு இடையிலான போட்டியில் பங்கேற்று தனது தகுதியை நிரூபிக்க வேண்டியிருந்தது.

லியோனல் மெஸ்ஸி காயம் காரணமாக ஆரம்ப தகுதிகாண் போட்டியில் ஆடவில்லை. மெஸ்ஸி இன்றி போதிய தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தாத ஆர்ஜன்டீனா, இக்வடோரிடம் 2-0 என தோல்வியை சந்தித்தது. எனினும் அடுத்த 5 தகுதிகாண் போட்டிகளில் 3 இல் வென்ற ஆர்ஜன்டீனா, மீட்சி பெற்ற போதும் அது உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற அதிர்ச்சி காத்திருந்தது.

இந்நிலையில் 2016 ஜுன் 26 ஆம் திகதி நடந்த கோபா அமெரிக்கா இறுதிப் போட்டியில் ஆர்ஜன்டீனா தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகவும் பெனால்டியில் தோல்வியுற்ற பின் மெஸ்ஸி கண்ணீருடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். எனினும் தேசிய அணியனர் மற்றும் அவரது மில்லியன் கணக்கான ரசிகர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு தொடர்ந்து ஆடுவதற்கு தீர்மானித்தார்.

மெஸ்ஸி தொடர்ந்து ஆடியபோதும் அவரது அணி எதிர்பார்த்த அளவு சோபிக்க தவறியது. அடுத்து 11 போட்டிகளில் ஆர்ஜன்டீனாவால் 3 போட்டிகளில் மாத்திரமே வெல்ல முடிந்தது. இதனால் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற ஆர்ஜன்டீனாவுக்கு மேலும் 3 புள்ளிகள் தேவைப்பட்டது.     

இதன்போது கட்டாயம் வெல்ல வேண்டிய கடைசி போட்டியாக இக்வடோரை எதிர்கொண்டது. எனினும் இந்த முறை மெஸ்ஸியின் கீழ் ஆர்ஜன்டீனா முற்றிலும் மாறுபட்ட அணியாக களமிறங்கியது.  

போட்டியின் முதல் வினாடி தொடக்கம் ஆர்ஜன்டீன ரசிகர்களின் இதயத்துடிப்பு அதிகரித்திருந்தது. எனினும் அந்த அணியின் மீட்பாளராக மெஸ்ஸி தனி வீரராக நின்று அணியை உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறச் செய்தார். ஹட்ரிகோல் அடித்த மெஸ்ஸி போட்டியில் 3-1 என்ற கோல்கள் கணக்கில் ஆர்ஜன்டீனாவை வெற்றி பெறச் செய்தார்.  

முகாமையாளர் மற்றும் ஆட்ட பாணி

2017 ஆம் ஆண்டு ஜோர்ஜ் சம்போலி ஆர்ஜன்டீன அணியின் புதிய முகாமையாளராக நியமிக்கப்பட்டார். உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் காலத்தில் ஆர்ஜன்டீனாவின் மூன்றாவது பயிற்றுவிப்பாளராகவே அவர் இருந்தார். எனினும் அவரால் ஆர்ஜன்டீனாவை உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறச் செய்ய முடிந்ததோடு (லியோனல் மெஸ்ஸியின் தயவால்), ஒட்டுமொத்தமாக பார்த்தால் அவரது ஆர்ஜன்டீன அணி இன்னும் ஒரு பலமான அணியாக பார்க்க முடியவில்லை.   

ஜோர்ஜ் சம்போலி

சிலி மற்றும் செவில்லா அணிகளிடம் தனக்கு பெரிதும் வெற்றி தந்த தாக்ககுதல் ஆட்ட பாணியை ஆர்ஜன்டீன அணியிலும் கையாள சம்போலி விரும்புகின்றபோதும் அது இன்னும் பொருந்துவதாக தெரியவில்லை. முன்கள வலப்பகுதியில் (Right wing) மெஸ்ஸி செயற்படும் நிலையில் ஆர்ஜன்டீனா 3-4-3 என்ற ஆட்ட பாணியை பெரும்பாலும் முன்னெடுக்கிறது. இந்த ஆட்ட பாணி தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

உலகக் கிண்ண வெற்றி அணியை முன்கூட்டியே கணிக்கும் காது கேட்காத பூனை

உலகக் கிண்ண கால்பந்து தொடர் இன்று ரஷ்யாவில் ஆரம்பமாக உள்ளது. உலகக் கிண்ண கால்பந்து போட்டி முடிவுகளை நேரில் …

பலமும் பலவீனமும்

உலகின் மிகச்சிறந்த வீரரான மெஸ்ஸி அணியில் இருக்கும்போது அது மிகப்பெரிய பலமாக அமையும். மிக முக்கியமான போட்டிகளிலும் தேசிய அணி அவரிலேயே தங்கியுள்ளது. இது அவர் தனி ஒருவராக ஆர்ஜன்டீனாவுக்கு உலகக் கிண்ணத்தை வென்று தர வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துகிறது.

எனினும் அணி வரிசையில் இந்த பருவத்தில் மன்செஸ்டர் சிட்டி அணிக்காக ப்ரீமியர் லீக் வென்றுகொடுத்த செர்கியோ அகுவேரா (Sergio AGUERO), இந்த பருவத்தில் ஜுவான்டஸ் அணி செரீ A தொடரை வெல்லக்காரணமான போலோ டைபாலா (Paulo DYBALA) மற்றும் கொன்சலோ ஹிகுவைன் மற்றும் ஏங்கல் டி மரியா போன்ற உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். இவ்வாறு இருக்க உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறவே போராடியது பற்றி நினைக்க கடினமாக உள்ளது.

எவ்வாறாயினும் ஆர்ஜன்டீன குழாமை பார்க்கும்போது எந்த பலம் கொண்ட எதிரணியையும் வீழ்த்தும் திறன் கொண்டதாகும்.

     

முக்கிய வீரர்கள்

மெஸ்ஸி, அகுவேரா

நவீன யுகத்தில் ஆர்ஜன்டீன அணியின் மிகச் சிறந்த வீரராக இருக்கும் மெஸ்ஸி, அந்த அணியின் முன்னாள் ஜாம்பவானான டியாகோ மரடோனாவை விடவும் சிறந்தவர் என்பது பலரது வாதம். எவ்வாறாயினும் ஆர்ஜன்டீனாவுக்கு உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த மரடோனாவின் மரபை மெஸ்ஸி தொடருவாரா என்பதுவே கேள்வியாகும். தான் விளையாடும் கடைசி உலகக் கிண்ணம் என்ற வகையில் அதனை சுவீகரிப்பதற்கு மெஸ்ஸி முன்னரை விட தீவிரம் காட்டுகிறார்.   

2018 உலகக் கிண்ணம்: பிரான்ஸ் அணியின் முன்னோட்டம்

இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பிய கிண்ணத்தை நூழிலையில் தவறவிட்ட பலம்மிக்க பிரான்ஸ் அணி வெற்றி வாய்ப்பு …

அண்மைக்காலத்தில் ப்ரீமியர் லீக் தொடரில் மிகச்சிறந்த முன்கள வீரரான செர்கியோ அகுவேரா, இதுவரை தனது தேசிய அணிக்காக குறிப்பிடத்தக்க திறமையை காட்டியதில்லை. எவ்வாறாயினும் ப்ரீமியர் லீக் பருவத்தில் அவரது வலுவான ஆட்டம் பெரும்பாலும் அவரது கடைசி உலகக் கிண்ணமாக இருக்கும் இந்த உலகக் கிண்ண தொடரிலும் தொடர்வதற்கு வாய்ப்பு உள்ளது.     

பார்க்க வேண்டியது

பவுலோ டிபாலா எதிர்கால நட்சத்திரம் என்று கருதப்படும் நிலையில் எதிர்கால மெஸ்ஸி என்றும் அழைக்கின்றனர். 24 வயதான டிபாலா ஜுவன்டஸ் அணிக்காக 98 போட்டிகளில் 52 கோல்களை புகுத்தியுள்ளார். அந்த அணி செரீ A மற்றும் இத்தாலி சுப்பர் கிண்ணம் இரண்டையும் மூன்று தடவைகள் வென்றுள்ளது. அதேபோன்று 16/17 பருவத்தில் அதிக கோல்களை பெற்றவராகவும் அவர் காணப்படுகிறார்.  

பவுலோ டிபாலா

டிபாலா ஆர்ஜன்டீன அணிக்காக 12 போட்டிகளில் பங்கேற்றபோதும் இதுவரை கோல் எதனையும் பெறவில்லை. எவ்வாறாயினும் அவரது திறமை மற்றும் ஆற்றலை பார்க்கும்போது உலகக் கிண்ணத்தில் சோபிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கலாம்.   

இறுதிக் குழாம்

கோல்காப்பாளர்கள்: வில்லி கபல்லேரோ, ப்ரான்கோ அர்மானி, நகுவெல் குஸ்மான்

பின்கள வீரர்கள்: கப்ரியல் மார்கடோ, பெடரிகோ பாசியோ, நிகொலஸ் ஒடமன்டி, மார்கஸ் ரோஜோ, நிகலஸ் டக்லபிகோ, ஜவீர் மஸ்சரானோ, மார்கஸ் அகுனா, கிறிஸ்டியன் அன்சலடி

மத்தியகள வீரர்கள்: எவர் பனெகா, லுகஸ் பிக்லியா, அங்கேல் டி மரியா, கியோனி லோ செல்சோ, என்சோ பெரெஸ், கிறிஸ்யன் பவோன், மக்சிமிலியானோ மேசா, எடுவார்டோ சல்வியோ

முன்கள வீரர்கள்: லியோனல் மெஸ்ஸி, கொன்சலே ஹிகுவைன், பவுலே டிபாலா, செர்கியோ அகுவேரா

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<