Home Tamil நமீபிய அணிக்கு எதிராக நியூசிலாந்து இலகு வெற்றி

நமீபிய அணிக்கு எதிராக நியூசிலாந்து இலகு வெற்றி

96
Getty Images

T20 உலகக் கிண்ண சுபர் 12 சுற்றுக்காக நியூசிலாந்து மற்றும் நமீபிய அணிகள் விளையாடிய போட்டியில் நியூசிலாந்து அணி 52 ஓட்டங்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

மேலும் இவ்வெற்றியுடன் நியூசிலாந்து அணி சுபர் 12 சுற்றில் மொத்தமாக மூன்று வெற்றிகளைப் பதிவு செய்து T20 உலகக் கிண்ணத்தில் தமது அரையிறுதி வாய்ப்பினை அதிகரிக்க, நமீபிய அணிக்கு இது சுபர் 12 சுற்றில் மூன்றாவது தோல்வியாக அமைகின்றது.

WATCH – மே.தீவுகளுக்கு எதிரான போட்டியில் அசத்திய இலங்கை!

சுபர் 12 சுற்றின் குழு 2 இல் காணப்படும் நமீபியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய இந்தப் போட்டி சார்ஜாவில் ஆரம்பாகியிருந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நமீபிய அணியின் தலைவர் கெர்ஹாட் எரஸ்மஸ் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை நியூசிலாந்து அணிக்கு வழங்கினார்.

இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி சிறந்த ஆரம்பம் ஒன்றினை பெற முயன்ற போதும் அவ்வணிக்கு நமீபிய பந்துவீச்சாளர்கள் நெருக்கடி உருவாக்கினர். இதனால் நியூசிலாந்து ஒரு கட்டத்தில் 87 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

WATCH – T20 உலகக்கிண்ணத்தில் இலங்கை அணியின் பிரகாசிப்பு தொடர்பில் கூறும் ஷானக!

எனினும், நியூசிலாந்து அணிக்கு மத்திய வரிசையில் கைகொடுத்த கிளன் பிலிப்ஸ் மற்றும் ஜிம்மி நீஷம் ஆகியோரின் துடுப்பாட்டத்தோடு அவ்வணி 20 ஓவர்கள் நிறைவில் மேலதிக விக்கெட்டுக்கள் எதனையும் இழக்காமல் 164 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கிளன் பிலிப்ஸ் 21 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பெளண்டரி அடங்கலாக 39 ஓட்டங்கள் எடுக்க, ஜிம்மி நீஷம் 23 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பெளண்டரிகள் அடங்கலாக 35 ஓட்டங்களினை எடுத்தார்.

நமீபிய அணியின் பந்துவீச்சில் பெர்னாட் ஸ்கொல்ட்ஷ், டேவிட் வியேஸே மற்றும் அணித்தலைவர் கெர்ஹாட் எரஸ்மஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 164 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய நமீபிய அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 111 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து போட்டியில் தோல்வியினை தழுவியது.

நமீபிய அணியின் துடுப்பாட்டம் சார்பில் மைக்கல் வான் லிங்கன் 25 ஓட்டங்கள் எடுத்து தனது தரப்பில் கூடுதல் ஓட்டங்கள் பெற்ற வீரராக மாற, நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் டிம் செளத்தி மற்றும் டிரெண்ட் போல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் ஆட்டநாயகனாக நியூசிலாந்து அணியின் ஜிம்மி நீஷம் தெரிவு செய்யப்பட்டார்.

போட்டியின் சுருக்கம்


Result


New Zealand
163/4 (20)

Namibia
111/7 (20)

Batsmen R B 4s 6s SR
Martin Guptill c Ruben Trumpelmann b David Wiese 18 18 1 1 100.00
Daryl Mitchell c Michael van Lingen b Bernard Scholtz 19 15 2 0 126.67
Kane Williamson b Gerhard Erasmus 28 21 2 1 133.33
Devon Conway run out (Gerhard Erasmus) 17 18 1 0 94.44
Glenn Phillips not out 39 21 1 3 185.71
James Neesham not out 35 23 1 1 152.17


Extras 7 (b 0 , lb 1 , nb 0, w 6, pen 0)
Total 163/4 (20 Overs, RR: 8.15)
Fall of Wickets 1-30 (4.1) Martin Guptill, 2-43 (6.2) Daryl Mitchell, 3-81 (12.1) Kane Williamson, 4-87 (13.6) Devon Conway,

Bowling O M R W Econ
Bernard Scholtz 3 0 15 1 5.00
Ruben Trumpelmann 3 0 25 0 8.33
David Wiese 4 0 40 1 10.00
JJ Smit 2 0 27 0 13.50
Jan Nicol Loftie-Eaton 2 0 24 0 12.00
Gerhard Erasmus 4 0 22 1 5.50
Karl Birkenstock 2 0 9 0 4.50


Batsmen R B 4s 6s SR
Stephan Baard b Mitchell Santner 21 22 2 0 95.45
Michael van Lingen b James Neesham 25 25 2 1 100.00
Gerhard Erasmus c Devon Conway b Ish Sodhi 3 4 0 0 75.00
Zane Green c Trent Boult b Tim Southee 23 27 1 0 85.19
David Wiese lbw b Tim Southee 16 17 1 1 94.12
JJ Smit not out 9 17 1 0 52.94
Jan Nicol Loftie-Eaton c Glenn Phillips b Trent Boult 0 2 0 2 0.00
Craig Williams c Glenn Phillips b Trent Boult 0 2 0 0 0.00
Ruben Trumpelmann not out 6 4 1 0 150.00


Extras 8 (b 0 , lb 3 , nb 0, w 5, pen 0)
Total 111/7 (20 Overs, RR: 5.55)
Fall of Wickets 1-47 (7.2) Michael van Lingen, 2-51 (8.1) Stephan Baard, 3-55 (9.2) Gerhard Erasmus, 4-86 (14.3) David Wiese, 5-103 (18.2) Jan Nicol Loftie-Eaton, 6-105 (18.5) Craig Williams, 7-18 (102) Zane Green,

Bowling O M R W Econ
Tim Southee 4 0 15 2 3.75
Trent Boult 4 0 20 2 5.00
Adam Milne 4 0 25 0 6.25
Mitchell Santner 4 0 20 1 5.00
James Neesham 1 0 6 1 6.00
Ish Sodhi 3 0 22 1 7.33



முடிவு – நியூசிலாந்து அணி 52 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<