FIFA உலகக் கிண்ணத்தில் ஆடும் 32 அணிகளும் இவைதான்

1831

நியூசிலாந்துடனான இரண்டாவது கட்ட பிளே ஓப் (play-off) போட்டியை 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய பெரு அணி ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் FIFA உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு கடைசி அணியாக தேர்வாகியுள்ளது.

இதன்மூலம் கடந்த இரண்டரை ஆண்டுகளாக உலகெங்கும் 206 நாடுகளுக்கு இடையே நடைபெற்ற 869 போட்டிகளுக்குப் பின் உலகக் கிண்ணத்தில் ஆடும் 32 அணிகளும் தேர்வாகியுள்ளன.  

60 ஆண்டுகளில் முதல் முறை உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறாத இத்தாலி

மிலான் நகரில் திங்கட்கிழமை (13) நடைபெற்ற சுவீடனுடனான..

இதில் உலகக் கிண்ணத்திற்கான கடைசி தகுதிகாண் போட்டி நியூசிலாந்து மற்றும் பெரு அணிகளுக்கு இடையில் இலங்கை நேரப்படி இன்று (16) நடைபெற்றது.   

மண்டலங்களுக்கு இடையிலான பிளே ஓப் போட்டியாகவே தென் அமெரிக்காவின் பெரு அணியும், ஓசியானியா மண்டலத்தின் நியூசிலாந்து அணியும் இதில் மோதின. இந்த இரு அணிகளும் கடந்த சனிக்கிழமை மோதிய முதலாம் கட்ட பிளோ ஓப் போட்டி கோலின்றி சமநிலையில் முடிந்த நிலையில் இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி உலகக் கிண்ணத்திற்கு முன்னேறும் என்ற நிலையிலேயே களமிறங்கின.  

சொந்த மண்ணில் களமிறங்கிய பெரு அணி 27ஆவது நிமிடத்தில் கோல் புகுத்தி முன்னிலை பெற்றது. முன்கள வீரர் ஜெப்பர்சன் பார்பன் உதைத்த பந்து நியூசிலாந்து கோல் காப்பாளர் ஸ்டபன் மரினோவிக் மேலால் சென்று கோலாக மாறியது.  

முதல் பாதியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய பெரு அணி 1-0 என முன்னிலை பெற்றது.

முதல் பாதி: பெரு 1 – 0 நியூசிலாந்து

பதில் கோல் தேடிய நியூசிலாந்து இரண்டாவது பாதியில் பதில் வீரராக கிறிஸ் வுட்டை களமிறக்கியபோதும் அதனால் அவ்வணியினருக்கு மைதானத்தில் ஆக்கிரமிப்பு செலுத்த முடியவில்லை.  

விமானப்படை, கிரிஸ்டல் பெலஸ் அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில்

டயலொக் சம்பியன் கிண்ணத்திற்கான சுற்றுப்போட்டிகள்..

பெருவின் பின்கள வீரர் கிறிஸ்டியன் ரமோஸ் கோணர் கிக் மூலம் கிடைத்த பந்தை கோல் கம்பத்தின் நெருங்கிய தூரத்தில் இருந்து உதைக்க அந்தப் பந்து கோல் வலையத்தின் மேல் பகுதியில் பட்டு கோலாக மாறியது. 64ஆவது நிமிடத்தில் அவர் அந்த கோலை போட்டார்.   

நியூசிலாந்து அணி கடைசி வரை கோலொன்றை புகுத்த தடுமாறிய நிலையில் பெரு அணியால் போட்டியில் இலகுவாக வெல்ல முடிந்தது.

முழு நேரம்: பெரு 2 – 0 நியூசிலாந்து  

இந்த வெற்றியின் மூலம் பெரு அணி 36 ஆண்டுகளுக்குப் பின்னரே உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ஆட தகுதி பெற்றுள்ளது. எனினும் அந்த அணி தற்போதைய FIFA தரவரிசையில் 10ஆவது இடத்தில் உள்ளது. இது உலகக் கிண்ண போட்டிக்கான குழுநிலை பிரிப்பதில் அந்த அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது.

மறுபுறம் நியூசிலாந்து அணி தனது மூன்றாவது உலகக் கிண்ண போட்டியில் ஆடும் வாய்ப்பை இழந்தது. அந்த அணி கடைசியாக 2010ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடந்த உலகக் கிண்ணப் போட்டியில் ஆடியது.

இதேவேளை, சிட்னியில் நேற்று (16) நடைபெற்ற தகுதிகாண் போட்டியில் ஹொன்டுராஸ் அணியை 3-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய அவுஸ்திரேலியா தொடர்ச்சியாக நான்காவது உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றுக்கொண்டது.    

இதன்படி கடைசியாக 2014ஆம் ஆண்டு நடந்த உலகக் கிண்ண போட்டியில் முதல் நான்கு இடங்களுக்குள் வந்த நான்கு அணிகளில் நடப்புச் சம்பியன் ஜெர்மனி, இறுதிப் போட்டிக்கு வந்த ஆர்ஜன்டினா மற்றும் நான்காவது இடத்தை பிடித்த பிரேசில் அணிகள் அடுத்த உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றுள்ளன. எனினும், அந்த தொடரில் மூன்றாவது இடத்தை பெற்ற நெதர்லாந்து அணி ரஷ்யா செல்ல தகுதி இழந்தது.  

அதேபோன்று இத்தாலி அணி 60 ஆண்டுகளில் முதல் முறை உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறாமல் வெளியேறி அதிர்ச்சி அளித்தது. பலம்மிக்க சிலி, அமெரிக்கா ஆகிய அணிகளும் 2018 உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறவில்லை.  

குழுநிலையில் யார்?

உலகக் கிண்ணத்திற்கு கடைசி அணியாக பெரு தேர்வு செய்யப்பட்டதை அடுத்து போட்டித் தொடரின் குழு நிலை பிரிப்பதற்கான அணிகள் வரிசை பூர்த்தி அடைந்துள்ளது. இந்த குழுநிலை பிரிப்பதற்கான தேர்வு முறை வரும் டிசம்பர் 1ஆம் திகதி ரஷ்யாவில் நடைபெறவுள்ளது.

இதில் நான்கு சாடிகளில் தலா எட்டு அணிகள் வீதம் பெயரிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு சாடியில் இருந்தும் எடுகோள் முறையில் பெறப்படும் அணிகளே குழு நிலைகளாக பிரிக்கப்படவுள்ளன. இதன்படி 2017 ஒக்டோபர் மாதத்தில் FIFA தரவரிசையின் இறங்கு வரிசை அடிப்படையிலேயே  நான்கு சாடிகளிலும் அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதன் கடைசி மூன்று சாடிகளிலும் ஐரோப்பா தவிர்த்து ஒரே கண்டத்தைச் சேர்ந்த இரு அணிகள் குழுநிலைக்கு தேர்வாவதும் தவிர்க்கப்பட்டுள்ளது.   

இதில் ஒவ்வொரு சாடியில் இருந்தும் ஒவ்வொரு அணி எடுக்கப்பட்டே குழுநிலை பிரிக்கப்படும்.

உலகக் கிண்ண கால்பந்து போட்டி 2018 ஜுன், ஜுலை மாதங்களில் நடைபெறும்.

நான்கு சாடிகளிலும் இடம்பிடிக்கும் அணிகள் விபரம்,

    சாடி 1      சாடி 2      சாடி 3      சாடி 4
ரஷ்யா ஸ்பெயின் டென்மார்க் செர்பியா
ஜெர்மனி பெரு ஐஸ்லாந்து நைஜீரியா
போர்த்துக்கல் சுவிட்சர்லாந்து கொஸ்டாரிக்கா அவுஸ்ரேலியா
பிரேசில் இங்கிலாந்து சுவீடன் ஜப்பான்
ஆர்ஜன்டினா கொலம்பியா துனீசியா மொரோக்கோ
பெல்ஜியம் மெக்சிகோ எகிப்து பனாமா
போலந்து உருகுவே செனகல் தென் கொரியா
பிரான்ஸ் குரோஷியா ஈரான் சவூதி அரேபியா