இலங்கைக்கு வருகை தரவுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி

4263
Associated Press

தற்போது நடைபெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவடைந்த பின்னர் நியூசிலாந்து அணி, ஒகஸ்ட் மாதம் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இலங்கை கிரிக்கெட் அணியுடன் டெஸ்ட், T20 என இரண்டு வகை போட்டிகள் கொண்ட தொடர்களிலும் விளையாடவுள்ளது.

ஒகஸ்ட் மாதம் 03ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ள நியூசிலாந்து அணி, தமது சுற்றுப் பயணத்தின் முதல் கட்டமாக கட்டுநாயக்கவில் மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டி ஒன்றில் ஆடுகின்றது. இந்த பயிற்சிப் போட்டியின் பின்னர் இலங்கை அணியுடன் நியூசிலாந்து அணி விளையாடும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆரம்பமாகின்றது.

இந்திய அணியை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவுள்ள இலங்கை!

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில்…

.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் ஒரு அங்கமாக அமையவுள்ள இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதனை அடுத்து டெஸ்ட் தொடரின் இரண்டாவதும் கடைசியுமான  போட்டி கொழும்பு P. சரவணமுத்து மைதானத்தில் ஓகஸ்ட் மாதம் 22ஆம் திகதி தொடக்கம் 26ஆம் திகதி வரையில் நடைபெறும்

எனவே, நியூசிலாந்து அணியும் இலங்கை அணியும் ஓகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடரின் மூலம் .சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பினை ஆரம்பித்துக் கொள்கின்றன.

டெஸ்ட் தொடரின் பின்னர் நியூசிலாந்து அணி, ஓகஸ்ட் மாதம் 29ஆம் திகதி கட்டுநாயக்க மைதானத்தில் T20 பயிற்சிப் போட்டி ஒன்றில் மீண்டும் விளையாடவுள்ளது. இந்த T20 பயிற்சிப் போட்டியினை அடுத்து இலங்கை அணியுடன் நியூசிலாந்து அணி 03 போட்டிகள் கொண்ட T20 தொடரில் ஆடவுள்ளது.

இந்த T20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளும் ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதியிலும் செப்டம்பர் மாதம் 02ஆம் திகதியிலும் கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளதோடு, T20 தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் செப்டம்பர் மாதம் 06ஆம் திகதி நடைபெறுகின்றது.

மேற்கிந்திய தீவுகளுடன் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை அணிக்கு ஐ.சி.சி அபராதம்

உலகக்கிண்ண தொடரின் மேற்கிந்திய தீவுகள்…

இந்த இருவகைப் போட்டிகளும் கொண்ட தொடர்கள் நிறைவுக்கு வந்த பின்னர், நியூசிலாந்து அணியினர் செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி அவர்களின் சொந்த நாட்டுக்கு பயணமாகின்றனர்.

சுற்றுத் தொடர் அட்டவணை

  • ஓகஸ்ட் 8ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரைமூன்று நாட்கள் கொண்ட பயிற்சி போட்டி, கட்டுநாயக்க.
  • ஓகஸ்ட் 14ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரைமுதல் டெஸ்ட் போட்டி, காலி சர்வதேச மைதானம்.
  • ஓகஸ்ட் 22ஆம் திகதி தொடக்கம் 26ஆம் திகதி வரைஇரண்டாவது டெஸ்ட் போட்டி, P. சரவணமுத்து மைதானம், கொழும்பு.
  • ஓகஸ்ட் 29ஆம் திகதி – T20 பயிற்சி போட்டி, கட்டுநாயக்க.
  • ஓகஸ்ட் 31ஆம் திகதிமுதலாவது T20 போட்டி, ஆர். பிரேமதாச மைதானம், கொழும்பு.
  • செப்டம்பர்  02ஆம் திகதிஇரண்டாவது T20 போட்டி, ஆர். பிரேமதாச மைதானம், கொழும்பு.
  • செப்டம்பர் 06ஆம் திகதிமூன்றாவது T20 போட்டி, பல்லேகல சர்வதேச மைதானம், கண்டி.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<