ஒலிம்பிக் 800 மீட்டர் தகுதிச்சுற்றில் நிமாலிக்கு ஏமாற்றம்

Tokyo Olympics - 2020

155

டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 800 மீட்டர் தகுதிச்சுற்றில் பங்குபற்றிய இலங்கை வீராங்கனை நிமாலி லியனஆராச்சி எட்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதனால் அரை இறுதிக்கான வாய்ப்பை இழந்த நிமாலியின் ஒலிம்பிக் கனவு ஏமாற்றத்துடன் நிறைவுக்கு வந்தது.

ஜப்பானில் நடைபெற்று வருகின்ற டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் ஏழாவது நாளான இன்று காலை (30) மெய்வல்லுனர் போட்டிகள் டோக்கியோவின் தேசிய விளையாட்டரங்கில் ஆரம்பமாகின.

இன்று முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ள மெய்வல்லுனர் விளையாட்டில் 48 தங்கப் பதக்கங்களுக்கான போட்டி நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

Photos: Day 7 – 2020 Tokyo Olympic Games

இந்த நிலையில், பெண்களுக்கான 800 மீட்டர் தகுதிச்சுற்றில் இலங்கை வீராங்கனை நிமாலி லியனஆராச்சி களமிறங்கினார்ஆறு சுற்றுக்களைக் கொண்ட தகுதிச்சுற்றில் 4ஆவது சுற்றின் இரண்டாவது சுவட்டில் நிமாலி போட்டியிட்டார்

இந்த சுற்றில் இவ்வருடத்தில் அதிசிறந்த காலத்தைப் பதிவுசெய்து 8ஆவது மற்றும் 9ஆவது இடங்களைப் பெற்றுக்கொண்ட வீராங்கனைகள் நிமாலியுடன் போட்டியிட்டிருந்தமை குறிப்பிட்டத்தக்கது.

எதுஎவ்வாறாயினும், போட்டியின் ஆரம்பம் முதல் பின்னடைவை சந்தித்த நிமாலி, இப்போட்டியை 2 நிமிடங்கள் 10.23 செக்கன்களில் நிறைவுசெய்து எட்டாவது இடத்தைப் பெற்றார்

இதனிடையே நிமாலி பங்குபற்றிய தகுதிச்சுற்றில் அமெரிக்காவின் ரெவின் ரொட்ஜர்ஸ் (2 நிமிடங்கள் 01.42 செக்.) முதலிடத்தையும், பிரித்தானியாவின் கீலி ஹொட்ஜ்கின்சன் (2 நிமிடங்கள் 01.59 செக்.) இரண்டாவது இடத்தையும், கென்யாவின் மெர்ரி மொரா (2 நிமிடங்கள் 01.66 செக்.) மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்

Video – ஒலிம்பிக்கில் பிரகாசிக்கத் தவறிய இலங்கை வீரர்கள்..! 2020 Tokyo Olympics

எனினும், 45 வீராங்கனைகள் பங்குபற்றிய 6 தகுதிச்சுற்றுப் போட்டிகள் முடிவில் ஒட்டுமொத்த நிலையில் 43ஆவது இடத்தையே நிமாலி பெற்றார்இதன்படி, 24 வீராங்கனைகள் பங்குபற்றுகின்ற அரை இறுதி வாய்ப்பை நிமாலி தவறவிட்டார்

800 மீட்டர் ஓட்டப் போட்டியில் தேசிய சம்பியனான நிமாலி முதல் முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்றார். இதன்மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் 29 ஆண்டுகளுக்குப் பிறகு பெண்களுக்கான 800 மீட்டரில் இலங்கை சார்பில் களமிறங்கிய முதல் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுக்கொண்டார்.

முன்னதாக 1992 பார்சிலோனா ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 800 மீட்டரில் தம்மிகா மெனிகோ களமிறங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தோல்வியுடன் ஒலிம்பிக்கிலிருந்து விடைபெற்றார் நிலூக கருணாரத்ன

அதேபோல, பெண்களுக்கான 800 மீட்டர் தேசிய சாதனையை (2 நிமிடங்கள் 02.58 செக்.) 2016இல் முறியடித்த (24 ஆண்டுகளுக்குப் பிறகு) நிமாலி, 2015இல் நடைபெற்ற ஆசிய சம்பியன்ஷிப் மெய்வல்லுனரில் வெண்கலப் பதக்கத்தையும், 2016இல் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் தங்கப் பதக்கத்தையும், 2016 ஆசிய உள்ளக மெய்வல்லுனரில் வெள்ளிப் பதக்கத்தையும் சுவீகரித்தார்

இதனிடையே இலங்கையின் மற்றுமொரு எதிர்பார்ப்பாக அமைந்துள்ள யுபுன் அபேகோன், நாளை (31) மாலை நடைபெறவுள்ள ஆண்களுக்கான 100 மீட்டர் தகுதிச்சுற்றில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல ஒலிம்பிக் செய்திகளைப் படிக்க…