டெஸ்ட் போட்டிகள் 4 நாட்களைக் கொண்டதாக மாறவேண்டும் – டேவிட் வயிட்

242
New Zealand Cricket favour

20 ஓவர் கிரிக்கெட்டின் தாக்கத்தால் 5 நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டி அழியும் நிலை உருவாகி இருக்கிறது. இதனால் பகல்-இரவு டெஸ்ட் போட்டி கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அவுஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் அதில் மோதின. இதில் இளம்சிவப்பு பந்துகள் பயன்படுத்தப்பட்டன.

இந்த நிலையில் 5 நாட்கள் நடைபெறும் டெஸ்டை 4 நாட்களாகக் குறைக்க வேண்டும் என்று நியூசிலாந்து கிரிக்கெட் சபையின்  தலைவர் டேவிட் வயிட் வலியுறுத்தியுள்ளார்.

பகல் இரவு டெஸ்டை தொடந்து நடத்த வேண்டும் என்றும், டெஸ்ட் விளையாடும் நாடுகளை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னாள் வீரர்கள் மார்க் டெய்லர், ஷேன் வோன், கிரேக் சேப்பல், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத் தலைவர் கோலின் கிரேவ்ஸ் ஆகியோர் ஏற்கனவே டெஸ்டை 4 நாட்களாகக் குறைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்நிலையில் தான்  நியூசிலாந்து கிரிக்கெட் சபைத்  தலைவர் டேவிட் வயிட்  5 நாட்கள் நடைபெறும் டெஸ்டை 4 நாட்களாகக் குறைக்கவேண்டும் என்று  வலியுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே இலங்கை கிரிக்கட் சபையின் தலைவர் திலங்க சுமதிபாலவும் டெஸ்ட் போட்டிகளை 4 நாட்கள் கொண்ட போட்டிகளாக மாற்றி அமைக்க  கூறி இருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இது தொடர்பாக திலங்க சுமதிபால கூறியதாவது “சர்வேதேச கிரிக்கட் சபையினால் முன்மொழியப்பட்டுள்ள இரு பிரிவு டெஸ்ட் போட்டி முறைக்கு இலங்கை கிரிக்கட் முழுமையான எதிர்ப்பைத் தெரிவிக்கிறது. முடியுமானால் டெஸ்ட் போட்டிகளை 4  நாட்களைக் கொண்ட இளஞ்சிவப்பு (பிங்க்) நிறப் பந்துகளில் பகலிரவுப் போட்டிகளாக நடத்துங்கள். ஒருநாளில் 45 நிமிடங்கள் அதிகமாக செலவிட்டு 100 ஓவர்களை வீசி மொத்தமாக 400 ஓவர்களைக் கொண்ட போட்டியாக நடத்துங்கள்” என்று கூறியுள்ளார்.

சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டிக்கான ரசிகர்கள் ஆதரவு அதிக அளவில் குறைந்துள்ளது. இதை சரிசெய்வதற்காக ஒவ்வொரு நாட்டின் கிரிக்கெட் வாரியமும் பல முயற்சிகளை எடுத்துவருகிறது.

இந்நிலையில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தரவரிசையில் பிந்திய நிலையில் இருக்கும் அணிகளுக்கும், ஆப்கானிஸ்தான், அயர்லாந்து போன்ற அணிகளுக்கும் போதிய அளவு வாய்ப்பு கிடைக்கவில்ல்லை.

முன்னணி அணிகளான இந்தியா, அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா , இங்கிலாந்து போன்ற அணிகள் இதுபோன்ற அணிகளுடன் இருதரப்பு கிரிக்கெட் தொடரை நடத்த விரும்புவதில்லை. அவர்கள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் உலகக் கிண்ணப் போட்டியில்தான் பெரிய அணிகளுடன் மோத வாய்ப்பு கிடைக்கும். இதனால் அந்த நாடுகளில் கிரிக்கெட் பிரபலம் அடையாமல் உள்ளது.

இதனால் அனைத்து நாடுகளுக்கும் சமமான அளவில் கிரிக்கெட் போட்டிகள் கிடைக்க ஐ.சி.சி. முயற்சிசெய்கிறது. இதனால் ஒருநாள் தொடரில் மிகப்பெரிய மாறுதலைக் கொண்டு வரப்போகிறது.

அதன்படி ஒருநாள் கிரிக்கெட் லீக் என்ற தொடரை நடத்தலாம் என பரிந்துரை செய்ய இருக்கிறது. இதன்படி பார்த்தால் இந்த லீக் 13 நாடுகளுக்கிடையில் நடக்கும். தற்போது தரவரிசையில் இருக்கும் முதல் 10 அணிகளுடன், ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து இடம்பெறும். இன்னொரு அணி எது என்பதுதான் சிக்கல்.

இந்த அணிகள் ஒவ்வொரு அணிகளுடன் மூன்று போட்டிகளில் மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்கள் பெறும் அணிகள் சாம்பியன் கோப்பைக்குப் போட்டியிடும். இந்தத் தொடரை மூன்று வருடங்கள் நடத்த திட்டமிட்டு இருந்தது.

அத்தோடு இலங்கையோடு சேர்ந்து பங்களாதேஷ் கிரிக்கட் சபையும் இதற்கு  தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.