தலைவர் பதவியை மிகப்பெரிய கௌரவமாக எண்ணும் பென் ஸ்டோக்ஸ்

254

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் பதவி தொடர்பில் மிக அதிகமாக சிந்திக்கவில்லை என்றாலும், தலைவர் பதவி கிடைக்குமாயின் அதனை மிகப்பெரிய கௌரவமாக கருதுவதாக பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தற்போதைய தலைவர் ஜோ ரூட், அவரது மனைவி இரண்டாவது குழந்தையை பிரசவிக்க உள்ளதால், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்த அணியின் உப தலைவரான பென் ஸ்டோக்ஸ் குறித்த இடத்துக்கு நியமிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

2011 உலகக் கிண்ணத்தில் 90% உடற்குதியுடன் இருந்தேன் – முரளிதரன்

எனினும், அணித் தலைவர் பதவி தொடர்பிலான 100 சதவீத உறுதி கிடைக்காத நிலையில், தலைவர் பதவிக்கு தன்னை முழுமையாக தற்போது ஈடுபடுத்தவில்லை எனவும், அதுதொடர்பில் அதிகமாக சிந்திக்கவில்லை எனவும் ஸ்டோக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

“டெஸ்ட் அணித் தலைவர் என்ற நிலைக்கு என்னை முழுமையாக ஈடுபடுத்தவில்லை. டெஸ்ட் தொடருக்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்னர் தயார்படுத்தலிலும், தலைமைத்துவத்துவதற்கான மட்டத்தை அடைவதற்குமான பணிகளை மேற்கொள்ள வேண்டும். இப்போது குழாத்தில் மிக அதிகமான வீரர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரையும் அவதானிக்க வேண்டும். அத்துடன், நாம் தனித்தனி இடங்களில் பயிற்சிகளை மேற்கொள்கிறோம். எனவே, இப்போது அவர்களை கணிப்பது கடினமானதாகும்” என பென் ஸ்டோக்ஸ் குறிப்பிட்டார். 

“தலைவர் பதவியை நினைத்து நான் மூழ்கியிருக்கவில்லை. அது தொடர்பில் சிந்திப்பதற்கான சரியான காலத்துக்காக காத்திருக்கிறேன். அத்துடன், கிட்டத்தட்ட 100 சதவீதம் வரை தலைவர் பதவி உறுதிசெய்யப்பட்ட பின்னர், நான் எனது மனநிலையை அதற்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்வேன்”

உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்து அணியின் நாயகனாக வலம் வந்த ஸ்டோக்ஸ், முன்னாள் தலைவரான அலெஸ்டயர் குக் மற்றும் ஜோ ரூட் ஆகியோரின் தலைமைத்துவங்களில் பல விடயங்களை கற்றுக்கொண்டதையும் வெளிப்படுத்தியுள்ளார். 

“அலெஸ்டயர் குக் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் தலைவர்களாக செயற்பட்ட காலங்களில் நான் அனுபவ வீரராக இருந்துள்ளேன். அவர்களுடன் இருந்த காலத்தில், பல கடினமான தருணங்களில் அவர்களின் தலைமைத்துவத்தை பார்த்துள்ளதுடன், அதிலிருந்து கற்றுக்கொண்டுள்ளேன். 

Video – இலங்கையில் கிரிக்கெட் லீக் நடைபெற வேண்டுமா? – Udana

அதேநேரம், எமது அணியில் பல அனுபவ வீரர்கள் உள்ளனர். ஜிம்மி எண்டர்சன் மற்றும் ஸ்டுவர்ட் ப்ரோட் ஆகியோர் அனுபவ பந்துவீச்சாளர்கள் என்பதுடன், அவர்களுக்கு இடையில் அதிகமாக விக்கெட்டுகளை பகிர்ந்துள்ளனர். இவர்களை போன்று ஆலோசனை வழங்குவதற்கு பலர் உள்ளனர். நான் திறந்த மனப்பாங்குடைய தலைவராக இருக்க விரும்புகிறேன். 

காரணம் நான் எடுக்கும் அனைத்து முடிவுகளும் சரியாக இருக்கும் என எண்ணுவது கடினம். களத்தில் 11 வீரர்கள் இருக்கும் போது, ஏனைய வீரர்களிடமிருந்து 10 ஆலோசனைகளை பெறமுடியும்” எனவும் பென் ஸ்டோக்ஸ் சுட்டிக்காட்டினார். 

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 8ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<