இறுதி முடிவாக சுதந்திரக் கிண்ணத்திருந்து ஷகீப் அல் ஹஸன் நீக்கம்

327
shakib Al Hassan

இலங்கையில் நடைபெறும் சுதந்திர கிண்ண முத்தரப்பு T-20 தொடரில் இருந்து பங்களாதேஷ் அணித்தலைவர் ஷகீப் அல் ஹஸன் நீக்கப்பட்டுள்ளார். அவர் தனது விரவில் ஏற்பட்ட காயத்தில் இருந்து தொடர்ந்தும் சுகம் பெறாத நிலையிலேயே 16 பேர் கொண்ட அணியில் இருந்து இறுதித் தருவாயில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி பங்களாதேஷ் T-20 அணிக்கு மஹ்முதுல்லாஹ் தொடர்ந்து தலைவராக செயற்படவிருப்பதோடு, ஷகீபின் இடத்திற்கு லிடோன் தாஸ் பங்களாதேஷ் குழாமில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சகிப் அல் ஹசனின் மீள்வருகையில் தொடரும் சர்ச்சை

அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள சுதந்திர கிண்ண T-20 முத்தரப்பு மார்ச் 6 ஆம் திகதி ஆரம்பமாகும் சுதந்திர கிண்ண முக்கோண

இறுதியாக பங்களாதேஷில் நடந்த முத்தரப்பு ஒரு நாள் தொடரில் இலங்கைக்கு எதிராக கடந்த ஜனவரி 27ஆம் திகதி இடம்பெற்ற இறுதிப் போட்டியில் வைத்து ஷகீப் அல் ஹஸனின் இடது கையின் சுண்டு விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் மற்றும் T-20 தொடர்களில் அவர் ஆடவில்லை. அதேபோன்று அவர் பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டிகளிலும் ஆடவில்லை.    

இம்மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகும் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிகள் பங்குகொள்ளும் சுதந்திரக் கிண்ண தொடருக்காக கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட பங்களாதேஷ் குழாமில் ஷகீப் அல் ஹஸன் தேர்வு செய்யப்பட்டபோதும், அவருக்கான ஒரு மாற்று வீரராக மஹெதி ஹஸன் மிராசும் சேர்க்கப்பட்டிருந்தார். குறிப்பாக ஷகீப் தொடரின் இரண்டு போட்டிகளிலாவது ஆடுவார் என்ற நம்பிக்கையோடே உபாதையில் இருந்து முழுமையாக சுகம் பெறாத அவரை தேர்வுக் குழுவினர் அணியில் சேர்த்துக் கொண்டனர்.

எனினும் தனது காயம் காரணமான இன்னும் பயிற்சிகளை ஆரம்பிக்காத ஷகீப், முழுமையாக சுகம் பெறாத நிலையில் அவர் அணியில் சேர்க்கப்படுவது காயத்தை மேலும் உக்கிரப்படுத்தும் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்தது.

இது பற்றி பங்கொக்கில் இரு மருத்துவ நிபுணர்களிடம் ஷகீப் ஆலோசனை பெற்றிருப்பதோடு, அதன்படி அவர் சுகம் பெறுவதற்கு எதிர்பார்த்ததை விடவும் காலம் எடுத்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

இந்நிலையில் ஷகீப் தற்போது 14 நாள் உடற்தகுதி சிகிச்சைக்கு முகம்கொடுத்துள்ளார். ஒரு வாரத்திற்கு பின்னர் அவரது நிலை குறித்து மீளாய்வு செய்யப்படும் என்று பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைமை விளையாட்டு மருத்துவர் தபாஷிஷ் சௌத்ரி குறிப்பிட்டுள்ளார்.

கரீபியன் பிரீமியர் லீக்கில் முதற்தடவையாக திக்வெல்ல, தசுன் சானக

மேற்கிந்திய தீவுகளில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கரீபியன் பிரீமியர் லீக் டி20 போட்டித் தொடரில்

இலங்கை வருவதற்கு முன்னர் கடந்த சனிக்கிழமை (03) செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்திய பங்களாதேஷ் இடைகால பயிற்சியாளர் கோட்னி வோல்ஷ் கூறியதாவது, “அவர் தயார் நிலையை பெற நாம் போதுமான அவகாசத்தை வழங்கி இருக்கிறோம்” என்றார்.    

“வீரர்கள் நிலைமையை புரிந்து அதற்கு ஏற்ப செயற்படுகிறார்கள். ஷகீப் போன்ற உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் இருக்கும்போது, அவர் உடற்தகுதி பெறுவதற்கு அனைத்து சந்தர்ப்பங்களையும் நாம் வழங்க வேண்டும்” என்றும் வோல்ஷ் குறிப்பிட்டார்.  

தற்பொழுது ஷகீபுக்கு பதில் அணியில் சேர்க்கப்பட்டிருக்கும் லிடோன் தாஸ் பங்களாதேஷ் உள்ளூர் முதல்தர போட்டிகளில் சோபித்து வருகிறார். அவர் ஐந்து இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்களுடன் 386 ஓட்டங்களை குவித்துள்ளார். கடந்த ஆண்டு பங்களாதேஷ் பீரிமியர் லீக் போட்டிகளில் லிடோன் 12 இன்னிங்ஸ்களில் 261 ஓட்டங்களை குறித்ததோடு, இதன் ஓட்ட வேகம் 124.88 ஆகும். இதன்படி அறிவிக்கப்பட்டிருக்கும் பங்களாதேஷ் குழாமில் முஷ்பீகுர் ரஹிம் மற்றும் நூருல் ஹஸனுக்கு அடுத்து லிடோன் மூன்றாவது விக்கெட் காப்பாளராக உள்ளார்.     

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மோதலுடன் ஆரம்பமாகவுள்ள சுதந்திரக் கிண்ண முத்தரப்பு தொடரில் பங்களாதேஷ் அணி தனது முதல் போட்டியில் மார்ச் 8ஆம் திகதி இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை ஒட்டியே இந்த முத்தரப்பு தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் மின்னொளியிலேயே இதன் அனைத்துப் போட்டிகளும் நடைபெறவுள்ளன. ஆரம்ப சுற்றில் ஒரு அணி ஏனைய அணியுடன் தலா இரண்டு போட்டிகளில் ஆடவுள்ளது. குறித்த சுற்றில் முதல் இரு இடங்களையும் பெறும் அணிகள் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகும்.  

நிரோஷன், மாலிங்க மற்றும் மெதிவ்ஸின் இழப்பு குறித்து குருசிங்கவின் விளக்கம்

இதேநேரம், அண்மைக்காலமாக இலங்கை அணியில் வாய்ப்பு கிடைக்காமல் புறக்கணிக்கப்பட்டுவரும் லசித் மாலிங்க

இதேவேளை, சுதந்திர கிண்ணத்தில் பங்கேற்கும் இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகள் இன்று (04) மாலை இலங்கையை வந்தடையவுள்ளன. ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி இரவு 8.30 மணியளவில் இலங்கையை அடையவுள்ளது. கடந்த ஓர் ஆண்டாக இடைவிடாது கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வரும் இந்திய அணி தனது அணித்தலைவர் விராட் கோஹ்லி, எம்.எஸ் டோனி, ஹார்திக் பாண்டியா மற்றும் ஜாஸ்பிரிட் பும்ராஹ் உள்ளிட்ட பல முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளித்துள்ளது.

அதேபோன்று, பங்களாதேஷ் அணி இன்று மாலை ஐந்து மணி அளவில் இலங்கையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

இதில் முத்தரப்பு தொடருக்கு முன்னர் பங்களாதேஷ் அணி பயிற்சிப் போட்டி ஒன்றில் ஆட எதிர்பார்த்திருப்பதோடு இந்திய அணி பயிற்சி ஆட்டங்கள் இன்றியே வரும் செவ்வாய்கிழமை (06) முதல் போட்டியில் இலங்கை அணியை எதிர்கொள்ளவுள்ளது.

பங்களாதேஷ் குழாம்

மஹ்முதுல்லாஹ் (தலைவர்), தமீம் இக்பால், சௌம்யா சார்கர், இம்ருல் கைஸ், முஷ்பிகுர் ரஹிம் (விக்கெட் காப்பாளர்), சப்பிர் ரஹ்மான், முஸ்தபிசுர் ரஹ்மான், ருபேல் ஹொஸைன், தஸ்கின் அஹமட், அபூ ஹைதர், அபூ ஜயெத், ஆரிபுல் ஹக், நஸ்முல் இஸ்லாம், நூருல் ஹஸன், மஹெதி ஹஸன், லிடோன் தாஸ்.