நாலந்த கல்லூரி மற்றும் புனித செபஸ்டியன் கல்லூரி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

177
U15 School Cricket

பாடசாலைகளுக்கிடையிலான 15 வயதிற்கு கீழ்பட்டோருக்கான சிங்கர்கிரிக்கட் சுற்றுத் தொடரில் இன்று இடம்பெற்ற அரையிறுதிப் போட்டிகளில் வெற்றியீட்டிய நாலந்த கல்லூரியும் புனித செபஸ்டியன் கல்லூரியும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. இவ்விரண்டு அணிகளுக்குமிடையிலான இறுதிப் போட்டி எதிர்வரும் 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் தர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

நாலந்த கல்லூரி எதிர் புனித தோமஸ் கல்லூரி

முதல் நாள் நிறைவில் 8 விக்கட்டுகளை இழந்து 124 ஓட்டங்களைப் பெற்றிருந்த புனித தோமஸ் கல்லூரி, முதல் இனிங்ஸ் வெற்றிக்காக மேலும் 41 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில் களமிறங்கியது. எனினும் துரதிஷ்டவசமாக 4 ஓட்டங்களைப் பெற வேண்டியிருந்த நிலையில், புனித தோமஸ் அணியினர் சகல விக்கட்டுகளையும் இழந்தனர். கிஷான் முனசிங்க மற்றும் ரணுக் குணவர்தன தலா 34 ஓட்டங்களைப் பெற்றனர். தமிந்து கமலசூரிய 44 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளைக் கைப்பற்றினார்.

இரண்டாவது இனிங்ஸிற்காக களமிறங்கிய நாலந்த கல்லூரி 47.4 ஓவர்களில் சகல விக்கடுட்களையும் இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. மீண்டும் சிறப்பாக விளையாடிய மோக்ச சங்கல்ப 48 ஓட்டங்களைக் குவித்தார். பந்து வீச்சில் தில்மின் ரத்நாயக்க 5 விக்கட்டுகளையும் கிஷான் முனசிங்க 4 விக்கட்டுகளையும் பெற்றுக் கொண்டனர்.

சொற்ப ஓவர்களே எஞ்சியிருந்த நிலையில் 203 என்ற ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய புனித தோமஸ் கல்லூரி ஆரம்பம் முதலே பெரும் சரிவை சந்தித்தது. 9 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுகளை இழந்து 31 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

முன்னர், முதலில் துடுப்பெடுத்தாடிய நாலந்த கல்லூரி அணி 42.2 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. நாலந்த கல்லூரி சார்பாக லக்சான் காஷ்யப 41 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டதுடன் மோக்ச சங்கல்ப 31 ஓட்டங்களைக் குவித்தார். புனித தோமஸ் கல்லூரி சார்பில் பந்து வீச்சில் அசத்திய தினித் வன்னியாராச்சி 39 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளைக் கைப்பற்றினார்.

அதன்படி முதல் இனிங்ஸில் பெற்றுக் கொண்ட வெற்றியின் நிமித்தமாக நாலந்த கல்லூரி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

நாலந்த கல்லூரி

முதல் இனிங்ஸ் – 164/10 (42.2) – லக்சான் காஷ்யப 41, மோக்ச சங்கல்ப 31, தினித் வன்னியாராச்சி 5/39

இரண்டாவது இனிங்ஸ் – 198/10 (47.4) – அவிஷ்க பெரேரா 39, மோக்ச சங்கல்ப  48, தில்மின் ரத்நாயக்க 5/73, கிஷான் முனசிங்க 4/28

புனித தோமஸ் கல்லூரி

முதல் இன்னிங்ஸ் – 160/10 (62) – கிஷான் முனசிங்க 34, தில்மின் ரத்நாயக்க 23*, தமிந்து கமலசூரிய 4/30

இரண்டாவது இன்னிங்ஸ் – 31/6 (9) – ஜிதேஷ் வாசல 4/08


புனித செபஸ்டியன் கல்லூரி எதிர் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் கல்லூரி

முதல் நாள் நிறைவில் 9 விக்கட்டுகளை இழந்து 310 ஓட்டங்களைப் பெற்றிருந்த புனித செபஸ்டியன் கல்லூரி ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய பிரின்ஸ் ஆப் வேல்ஸ் அணியினர் ஆரம்பம் முதலே தடுமாற்றத்தை சந்தித்தனர். எதிரணியினரின் சிறப்பான பந்துவீச்சை எதிர் கொள்ளத் தடுமாறிய பிரின்ஸ் ஆப் வேல்ஸ் கல்லூரி 80 ஓவர்கள் நிறைவில் 155 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்ட நிலையில் சகல விக்கட்டுகளையும் இழந்தனர். அத்துடன் போட்டி நிறைவுக்கு வந்தது.

முன்னர் முதலில் துடுப்பெடுத்தாடிய செபஸ்டியன் கல்லூரி 310 ஓட்டங்களைக் குவித்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணித் தலைவர் ஷனில் பெர்னாண்டோ 82 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டதுடன் அசத்தலாக ஆடிய ஜணுஷ்க பெரேரா 109 ஓட்டங்களைக் குவித்தார். பந்து வீச்சில் ஓசந்த சந்தருவான் 58 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கட்டுகளைக் கைப்பற்றினார்.

இதன்படி முதல் இனிங்ஸில் பெற்றுக் கொண்ட பிரமாண்ட வெற்றி காரணமாக புனித செபஸ்டியன் கல்லூரி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

புனித செபஸ்டியன் கல்லூரி

முதல் இனிங்ஸ் – 310/9 (90) – ஜணுஷ்க பெரேரா 109, ஷனில் பெர்னாண்டோ 82, சுகித்த பிரசன்ன 40, ஓசந்த சந்தருவான் 5/58, கவின் சதுஷ்க 2/32

பிரின்ஸ் ஆப் வேல்ஸ் கல்லூரி

முதல் இன்னிங்ஸ் – 155/10 (80) – உபேக்க பெர்னாண்டோ 24, சமுத்ர மெண்டிஸ் 19, ஓசந்த சந்தருவான் 28*, ஷனில் பெர்னாண்டோ 2/24, சமோத் மெண்டிஸ்  2/25